நீட் தேர்வில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு  தமிழகத்தில் இடம்: ராமதாஸ் கேள்வி

சென்னை: நீட் தேர்வின் அடிப்படையிலான அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு தமிழகத்திலும், 9,17,875 ஆவது இடத்தைப் பிடித்தவருக்கு ராஜஸ்தானிலும், எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படித் தான் நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நீட் தேர்வின் அடிப்படையிலான … Read more

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனரா? – மநீம கேள்வி

சென்னை: தமிழகத்தில் மகளிர் பாதுகாப்பாக உள்ளனரா? பொள்ளாச்சி, விருதுநகர் பாலியல் குற்றவாளிகளிடம் விசாரணையைத் துரிதப்படுத்த அரசின் நடவடிக்கைகள் என்ன? என்று நடிகர் கமல்ஹாசனை தலைவராகக் கொண்டு இயங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இன்று இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் பொருளாதார ரீதியில், தொழில்நுட்பத் தளத்தில், கட்டுமானங்களில் சிறப்பான இடத்தை அடைந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், நம் மாநிலத்தில் மகளிர் நிலை என்ன? பாதுகாப்பும் நிம்மதியும் அவர்களுக்கு இப்போதும் எட்டாக்கனியாகவே … Read more

ஓராண்டுக்குப் பின்னர் தொட்டபெட்டா சிகரம் திறப்பு: குவிந்த சுற்றுலா பயணிகள்

உதகை: ஓராண்டுக்கு பின்னர் தொட்டபெட்டா சிகரம் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிகரத்தை முதல் நாளிலேயே கண்டுகளித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் பெய்த தொடர் மழை காரணமாக உதகை-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் சாலை பெயர்ந்து விழுந்தது. அதன் அடிப்பகுதியில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய் சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலை பழுதடைந்ததால் தொட்டபெட்டா மலைச்சிகர சுற்றுலா தலம் … Read more

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைப்படி நியாயவிலை கடைகளை பிரித்து புதிய கடைகள்: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் 

ஒட்டன்சத்திரம்: தமிழகம் முழுவதும் 5,000 நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றைப் பிரித்து புதிய கடைகளை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். … Read more

தாமிரபரணி – கருமேனியாறு, தென்பெண்ணை – செய்யாறு இணைப்பு திட்டங்கள் பரிசீலினையில் உள்ளன: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: கோதாவரி – காவிரி ஆறு, தென்பெண்ணை – செய்யாறு, தாமிரபரணி – கருமேனியாறு இணைப்பு போன்ற திட்டங்கள் பரிசிலினையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா காட்பாடியில் இன்று நடைபெற்றது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். அப்போது அவர் பேசியது: ‘‘தமிழகத்தில் கடந்த 10 … Read more

அரக்கோணத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர்கள் உட்பட மூவர் படுகாயம்

அரக்கோணம்: அரக்கோணத்தில் கஞ்சா பதுக்கப்பட்ட வீட்டில் சோதனை செய்ய சென்ற காவலர்கள் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா நேரில் விசாரணை நடத்தினார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவு பேரில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபாசத்யன் தலைமையில், … Read more

எடப்பாடி வெளிநாட்டுப் பயணங்களால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரது வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயில் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மேற்கொண்டு இருக்கக்கூடிய துபாய் வெளிநாட்டு பயணத்தைக் குறித்து விமர்சனம் செய்து பேட்டியினை கொடுத்திருக்கிறார். முதல்வருடைய வெளிநாட்டுப் பயணம் தனி விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது அவர் … Read more

நாமக்கல் அருகே பழையபாளையம் ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

நாமக்கல்: பழையபாளையம் ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேந்தமங்கலம் அருகே சிவநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கருப்பசாமி(36), பாலன் (32). இவர்களின் நான்கு குழந்தைகளும் சிவநாயக்கன்பட்டி அருகே பழையபாளையத்தில் உள்ள பாட்டி செல்லம் வீட்டில் இருந்தனர். நேற்று மதியம் குழந்தைகள் நால்வரும் பாட்டி செல்லத்துடன் பழையபாளையம் ஏரிக்கரை மீது நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலனின் குழந்தைகள் … Read more

மார்ச் 27: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,681 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.26 வரை மார்ச்.27 மார்ச்.26 … Read more

மார்ச் 27: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,681 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more