மார்ச் 31 முற்பகல் 11 மணிக்கு வீடுகளில் மணியோசை எழுப்புங்கள்: புதிய வகை போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு

புதுடெல்லி: தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்ச் 31-ம் தேதி, வீடுகளிலும் வீதிகளிலும் 11 மணியளவில் மேளம், மணிகள் முழங்கும் புதிய வகைப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. மேலும், வரும் வியாழக்கிழமை பெட்ரோல், விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் … Read more

மது குடிப்போரின் வசதிக்காக ஆற்றில் மிதவை விட்ட மதுக்கடை உரிமையாளர் – அகற்றும் நடவடிக்கையில் புதுச்சேரி காவல்துறை

புதுச்சேரி: புதுச்சேரியில் மது அருந்துவோரின் வசதிக்காக ஆற்றில் மிதவை விட்ட மதுக்கடை உரிமையாளருக்கு கலால் துறை உத்தரவுப்படி போலீஸார் எச்சரிக்கை விடுத்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் தமிழகத்தின் எல்லையையொட்டி செட்டிப்பட்டு கிராமம் உள்ளது. இங்கு சங்கராபரணி ஆற்றின் கரையோரம் மதுக்கடை அமைந்துள்ளது. புதுவையில் மதுபான விலை குறைவு என்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளான திருவக்கரை, எறையூர், நெமிலி, செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அதிக எண்ணிக்கையில் மது குடிப்போர், … Read more

ஒடிசாவில் நகர்புற உள்ளாட்சிக்கு முதன்முறையாக நேரடித் தேர்தல்: ஆளும் பிஜேடி அபார வெற்றி

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதாதளம் (பிஜேடி) அபார வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக பெரும் முயற்சி செய்து ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஒடிசா மாநிலத்தில் 5 கட்டமாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. மொத்தம் 851 மாவட்ட ஊராட்சி பதவிகளுக்காக நடந்த தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 786 … Read more

உக்ரைனிலில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்வது குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை

புதுடெல்லி: உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை நிறைவு செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த தகவலை மக்களவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி வெளியிட்டுள்ளார். முன்னதாக, இப்பிரச்சனையில் திமுக எம்.பி கனிமொழி உள்பட சுமார் 50 எம்.பிக்கள் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தனர். இவற்றுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி அளித்த விரிவானப் பதில் விவரம்: “ஏறத்தாழ 22, 500 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள் … Read more

'ஒருமுறை ஆர்எஸ்எஸ் தொண்டர் வீட்டுக்கு சென்றபோது…' – மோடியின் கதைகள் சொல்லும் தளத்தைப் பகிரும் அமைச்சர்கள்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரபலங்கள், சாமானியர்கள், அவருடன் பயணிப்பவர்கள் என பலரும் பகிர்ந்துகொண்டுள்ள சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிரும் சிறப்பு இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்திற்கு modistory.in என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இணையதளம் பற்றி மத்திய அமைச்சர்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘இதுவரை சொல்லப்படாத, கேட்கப்படாத கதைகள் உள்ளன. ஒரு சிறந்த நபருடனான, அரசியல் … Read more

உக்ரைனில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்களுடன் WHO கவலை

ஜெனிவா: உக்ரைனில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகள் மீதான தாக்குதல்கள் தினமும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப் படைகள் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் மரியுபோல். கீவ், கார்கிவ் பகுதிகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இந்தத் தாக்குதல்களின்போது பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை என சர்வதேச சமூகத்தின் முன்பாக ரஷ்யா தெரிவித்து வருகிறது. இருந்த போதிலும் உக்ரைனின் போர் முனையில் இருந்துவரும் … Read more

மின்சார வாகனங்களை கையாள்வதில் கவனம் தேவை: அன்புமணி அறிவுரை

சென்னை: மின்சார வாகனத்தையும், அதில் மின்னேற்றம் செய்வதும் தமிழகத்திற்கு புதிய தொழில்நுட்பம் என்பதால், அதைப் பழகும் வரை அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் மின்சார இருசக்கர ஊர்தியின் சார்ஜர் வெடித்ததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தந்தை துரைவர்மா, 13 வயது மகள் பிரீத்தி ஆகியோர் மூச்சுத் திணறி … Read more

‘‘சமாஜ்வாதி கட்சி கட்டிய மைதானத்தில் பதவியேற்றுக் கொண்ட யோகி ஆதித்யநாத்’’- அகிலேஷ் கிண்டல்

லக்னோ: உ.பி. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவை கூடியதும் முறைப்படி அவர் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. உத்தர பிரதேச தேர்தலில், பாஜககூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. பாஜக மட்டும் 255 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவு. அதேநேரத்தில் கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளை கைப்பற்றிய சமாஜ்வாதி கட்சி, இந்தத் … Read more

செமிகண்டக்டர் தட்டுப்பாடு மத்தியிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 83 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: இந்தியா நடப்பு நிதி ஆண்டில் ரூ.42,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற நிதி ஆண்டில் இந்தியா ரூ.23,000 கோடி அளவில்ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்தது. பல்வேறு காரணங்களால் செமி கண்டக்டருக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி மிகப் பெரும் அளவில் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2017-18-ம் ஆண்டுநிதி ஆண்டில் ரூ.1300 கோடிஅளவில் இந்தியா ஸ்மார்ட்போன் … Read more

'பகிரங்க மன்னிப்பு, ரூ.100 கோடி நஷ்ட ஈடு' – ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக அண்ணாமலைக்கு திமுக வக்கீல் நோட்டீஸ்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. துபாய் எக்ஸ்போ 2022 -ல் கலந்து கொண்டு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணமாக துபாய் சென்றுள்ளார். முதல்வரின் இந்தப் பணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமால் அவதூறு பரப்பியதாகவும், … Read more