பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து

சென்னை: பொது இடத்தை கடவுளே ஆக்கிர மித்திருந்தாலும் அதையும் அகற்றஉத்தரவிடப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்டபலபட்டரை மாரியம்மன் கோயில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் நடைபெறுகிறது. இது தங்களது இடத்துக்குச் செல்லும் பாதையை மறைக்கும் வகையில் உள்ளதால், கட்டுமானத்துக்குத் தடை விதிக்க வேண்டும்என்று நாமக்கல்லைச் சேர்ந்த பாப்பாயி தொடர்ந்த வழக்கில் மாவட்ட முதன்மை முன்சீப் நீதிமன்றம், கோயில் நிர்வாகத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் இந்திய – சீன அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இரு நாட்டு எல்லை பிரச்சினைகள் குறித்து இந்திய – சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் லடாக் எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதன்காரணமாக கடந்த 2020 மே 5-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்திய, சீன உறவில் … Read more

உக்ரைனில் சிங்கம், ஓநாயை காப்பாற்றிய வீரர்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் மக்கள் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை, பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தஞ்சம் அடைந் துள்ளனர். போரால் மக்கள் மட்டு மின்றி விலங்குகளும் பாதிக்கப் பட்டுள்ளன. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்கவில்லை. இதனிடையே, தென்கிழக்கு உக்ரைனின் ஜிபோரிஜியாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா வில் சிம்பா என்ற சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. போர் காரணமாக சிங்கத்தை ருமேனியாவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. … Read more

மார்ச் 28, 29-ல் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம், படி கிடையாது: இறையன்பு அறிவிப்பு

சென்னை: மார்ச் 28, 29-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம், படிகள் கிடையாது என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு பணியாளர்கள் சங்கங்கள் மார்ச் 28, 29-ம்தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்திலும் பல்வேறு அரசியல் சார்ந்த தொழிலாளர் … Read more

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். … Read more

இந்திய மருத்துவ முறையில் புற்று நோய்க்கு மருந்து கண்டறிய மத்திய அரசு தீவிர முயற்சி: கனிமொழி என்விஎன் சோமுவுக்கு மத்திய அமைச்சர் பதில்

சென்னை: இந்திய மருத்துவ முறைகளின்படி புற்று நோய்க்கான மருந்தைக் கண்டறியும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக நாடாளு மன்றத்தில், திமுக எம்பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழிஎன்விஎன்.சோமு, ‘‘அகில இந்தியஆயுர்வேத நிறுவனம், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய ஆயுஷ் துறைஅமைச்சர் சர்பானந்த சோனோவால் பதில் அளித்ததாவது: தேசிய … Read more

மாநிலங்களவையில் கதறி அழுத ரூபா கங்குலி

மேற்குவங்க கொலை தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான ரூபா கங்குலி பேசினார். அவர் பேசும்போது ‘‘மேற்குவங்கத்தில் மக்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்படுவது சாதாரணமாகி விட்டது. வாழ முடியாத மாநிலமாக மேற்குவங்கம் மாறிவிட்டது. அச்சம் காரணமாக மக்கள் வெளியேறுகிறார்கள். மக்கள் பேசவே முடியாத நிலை உள்ளது. மக்களைக் கொல்லும் அரசு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. குற்றவாளிகளை மாநில அரசு பாதுகாக்கிறது. மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். நாம் எல்லாரும் மனிதர்கள். … Read more

60 கி.மீ.-க்குள் அகற்றப்பட வேண்டிய தமிழக சுங்கச் சாவடிகளின் பட்டியல் தயாராகிறது: அமைச்சர் எ.வ.வேலு

மதுரை: “மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதன் அடிப்படையில் 60 கி.மீ. தொலைவிற்குள் இருக்கும் அகற்றப்பட வேண்டிய தமிழக சுங்கச்சாவடிகள் பட்டியல் கேட்டுள்ளோம்” என்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியது: “பொதுப் பணித்துறையை பொறுத்தவரையில் ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் அந்தத் துறை கட்டும் கட்டிடங்கள் எப்போதுமே தரமாக இருக்கிறது. இருக்கிற துறைகளில் பொதுப்பணித்துறை ஓர் உறுதியான துறையாக கருதப்படுகிறது. ஏனென்றால், இந்த துறை … Read more

அன்புமணி ராமதாஸ் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து

சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது . கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தர்மபுரி தொகுதி வேட்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் இறுதி நாளன்று தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தியதாக அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் 6 பேர் மீது தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த … Read more

"சவாரி இல்லாதபோது புத்தகம் படிப்பேன்" – புதுச்சேரி காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆட்டோ ஓட்டுநர்

புதுச்சேரி: “நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல, விடா முயற்சி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றுள்ளேன்” என்று புதுச்சேரி காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆட்டோர் ஒட்டுநர் கந்தன் பெருமிதத்துடன் கூறியுள்ளார். புதுச்சேரி ஜீவா நகரை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் கந்தன் (31). இவர் சிறு வயதிலிருந்தே காவலராக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தார். இவர் ஐடிஐ படித்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. இதனால் கடந்த 2012ம் ஆண்டு … Read more