மார்ச் 24: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,575 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.23 வரை மார்ச்.24 வரை … Read more

நாராயணசாமி சொத்துக் கணக்கை வெளியிட தயாரா? – புதுச்சேரி பாஜக சவால்

புதுச்சேரி: “புதுச்சேரி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிவரும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது சொத்து கணக்கை வெளியிட தயாரா?” என்று அம்மாநில பாஜக சவால் விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ‘‘புதுச்சேரியில் தேசிய மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் வரும் 26-ம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை தனியார் உணவரங்கில் நடக்கிறது. தேசிய தலைவர் வானதி சீனுவாசன் தலைமை … Read more

விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு: காரைக்காலில் இந்து அமைப்புகள் பேரணி

காரைக்கால்: பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்ட பேரணி சென்றனர். காரைக்கால் மாதா கோயில் வீதியில் உள்ள கைலாசநாதர் கோயில் வகையறாவைச் சேர்ந்த, பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் கோபுர வாயில் முகப்பு மண்டபம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. அரசுத் துறைகளின் அனுமதியின்றி பொது இடத்தை ஆக்கிரமித்து இந்த மண்டபம் கட்டப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் | நேட்டோவிடம் கூடுதல் ஆயுதங்கள் கேட்கும் ஜெலன்ஸ்கி

பிரஸ்ஸல்ஸ்: உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவிடம் அதிகமான ஆயுதங்கள் வேண்டும் என்று கேட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவின் மீது புதிய பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் பிப்ரவரி 24ம் தேதி முதல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இன்றுடன்(வியாழக்கிழமை) ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து சமாளிக்க உக்ரைன் அதிபர் … Read more

திருப்பூர் | வீடு இடிந்து காயம் அடைந்த முதியவர் – பல மணிநேரம் மலைப்பாதையில் சுமந்து வந்த கிராம மக்கள்

திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் வீடு இடிந்து காயம் அடைந்த முதியவரை பல மணிநேரம் மலைப்பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர் அந்த கிராம மக்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலையை ஒட்டியுள்ள குழிப்பட்டி வனப்பகுதியில் வசித்து வருபவர் பொன்னுசாமி (58). விவசாயக் கூலி. குழிப்பட்டியில் மழை பெய்ததில் பொன்னுசாமியின் மண் வீடு இடிந்து விழுந்தது. இதில் அவரது காலில் கடுமையான காயம் ஏற்பட நடக்க முடியாத நிலைக்குச் சென்றார். … Read more

'இந்த வன்முறை ஒரு பெரிய சதி' – பிர்பும் கிராமத்தில் அதிரடி காட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பிர்பும்: ‘பிர்பும் வன்முறை ஒரு பெரிய சதி’ எனக் கூறியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘காவல்துறை அனைத்துக் கோணங்களிலும் இந்த வழக்கை விசாரிக்கும்’ என்று தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த பிர்பும் கிராமத்திற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை சென்றார். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மம்தா, ‘கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்’ எனத் தெரிவித்தார். அவர்களுக்கு நிவாரணத் … Read more

தொடரும் அவுட்காய் அராஜகம்: கோவையில் வாய் சிதைந்து உணவு உண்ண முடியாமல் உயிரிழந்த பெண் யானை

கோவை: அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டைக் கடித்ததால் வாய் சிதைந்து, 3 வாரங்களுக்கு மேல் உணவு உட்கொள்ள முடியாமல் இளம் பெண் யானை உயிரிழந்த கோவை சம்பவம் வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட முள்ளாங்காடு தாணிக்கண்டி வனப்பகுதியில் உடல் நலக்குறை காரணமாக பெண் யானை ஒன்று அவதிப்பட்டு வந்ததை, ரோந்து சென்ற வனத்துறை பணியாளர்கள் கண்டறிந்தனர். அதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. … Read more

’யூடியூபில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' வெளியிட சொல்லுங்க’ – பாஜகவினரை கலாய்த்த கெஜ்ரிவால்

புதுடெல்லி: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றால், படத்தை யூடியூப்பில் பதிவேற்ற விவேக் அக்னிகோத்ரியை பாஜகவினர் கேட்க வேண்டும்’ என டெல்லி முதல்வர் கலாய்த்துள்ளார். டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் நேற்று நடந்த கூட்டத்தொடரின் இடையில் “மாநிலத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என்று பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் பதில் அளிக்கும் விதமாக இன்று வியாழக்கிழமை பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், … Read more

மார்ச் 24: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,575 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: மாணவர்களுக்கான தேசிய மதிய உணவுத் திட்டத்தில் காலை உணவு சேர்க்கப்படவில்லை என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யான கனிமொழி எழுப்பிய கேள்வியில், ”தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 12 கோடி மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்குவதற்கு 4,000 கோடி ரூபாய் தேவைப்படும் என 2021-22 ஆண்டில் மத்திய அரசு மதிப்பிட்டது. அதன்படி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு … Read more