'சேலம் உருக்காலையில் உள்ளூர் மக்களுக்கே பணிவாய்ப்பு' – மத்திய அமைச்சரிடம் பார்த்திபன் எம்.பி நேரில் வலியுறுத்தல்

புதுடெல்லி: சேலம் உருக்காலை வளர்ச்சியின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பியான எஸ்.ஆர்.பார்த்திபன் நேரில் வலியுறுத்தியுள்ளார். சேலம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான எஸ்.ஆர்.பார்த்திபன் இன்று டெல்லியில், மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங்கை நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் சேலம் உருக்காலை வளர்ச்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தச் சந்திப்பின்போது திமுக எம்.பி பார்த்திபன் அளித்த கோரிக்கை கடிதத்தில், ”சேலம் உருக்காலையில் 60 மெகாவாட் சோலார் மின் … Read more

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் ஆண்டுக்கணக்கில் தேங்கி கிடக்கும் முக்கிய வழக்குகள்: தீர்வு காண்பது குறித்து சட்ட நிபுணர்கள் விளக்கம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் முக்கிய வழக்குகளால் சட்ட ரீதியிலான கேள்விகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் உச்சபட்ச நீதிபரிபாலன அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட ரீதியாக எழும் முக்கிய கேள்விகளுக்கும், மதம், இனம்,மொழி, இடஒதுக்கீடு, நீதிமன்றஅதிகாரம், வரி தொடர்பான வழக்குகளுக்கும் தீர்வு காண்பதற்காக 5 நீதிபதிகள், 7 நீதிபதிகள், 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு, அதன்மூலமாக தீர்வு காணப்பட்டு வருகின்றன. … Read more

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை: தென் கொரியா தகவல்

சியோல்: உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரிய புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை தென் கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்கொரிய ராணுவம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வடகொரியா கிழக்கு கடற்பகுதியில் இன்று ஊகிக்க முடியாத ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பம், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. வடகொரியா ஐ.நா.வின் விதிமுறைகளை தெளிவாக மீறி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை காரணமாக … Read more

'தமிழகத்திலும் நிர்பயா சம்பவங்கள்' – விருதுநகர், வேலூர் சம்பவங்களை முன்வைத்து அரசு மீது அண்ணாமலை தாக்கு

விருதுநகர்: நிர்பயா சம்பவம் போல் தமிழகத்தில் நடக்காது என்று நாம் கூறிக்கொண்டிருந்த நிலை மாறி இன்று தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விருதுநகரில் 22 வயது இளம்பெண் 8 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு தமிழக பாஜக மகிளரணி சார்பில் இன்று விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அப்போது விருதுநகர் பாலியல் வன்கொடுமை … Read more

ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிரபல துலிப் மலர்த் தோட்டம் நேற்று பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் நகரில் உலகப் புகழ்பெற்ற தால் ஏரியை ஒட்டி, இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம் உள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டமான இது,நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பல வண்ணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வசந்த காலத்தில் நடைபெறும் துலிப் திருவிழாவுக்கு, உலகம் முழுவதிலும் … Read more

உக்ரைன் போர் | குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர்

கீவ்: ரஷ்யாவின் புலனாய்வு இணையதளமான இன்சைடரைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், கீவ் நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது ரஷ்யாவின் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு பலியானார். ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒக்சனா பவுலினா. ரஷ்யாவின் புலனாய்வு இணையதளமான தி இன்சைடரில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார். ஒக்சனா புதன்கிழமை கீவ் நகரின் போடில் மாவட்டத்தில் ரஷ்ய படைகளின் தாக்குதல் குறித்த சேதங்களைப் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அவர் … Read more

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை: தென் கொரியா தகவல்

சியோல்: உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரிய புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை தென் கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்கொரிய ராணுவம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வடகொரியா கிழக்கு கடற்பகுதியில் இன்று ஊகிக்க முடியாத ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பம், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. வடகொரியா ஐ.நா.வின் விதிமுறைகளை தெளிவாக மீறி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை காரணமாக … Read more

கர்நாடக கோயில் விழாக்களில் முஸ்லிம் கடைகளுக்கு தடை

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் விவ காரத்தை தொடர்ந்து இந்து – முஸ்லிம் சமூகத்தினரிடையே விரிசல் அதிகரித்துள்ளது. முஸ்லிம் கடைகளில் இந்துக்கள் பொருட்களை வாங்க கூடாது என இந்துத்துவ அமைப்பினர் சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்துக்களை எதிர்க்கும் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும், கோயில் விழாக்களில் கடைகள் அமைப்பதற்கு முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கர்நாடகாவில் ஷிமோகா, சிக்கமகளூரு, உடுப்பி, … Read more

‘‘சண்டையின்றி சரணடைய மாட்டேன்’’ – பாகிஸ்தான் ராணுவ மிரட்டலை ஏற்க இம்ரான் கான் மறுப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்படும் சூழலில் ராணுவத்தின் மிரட்டலுக்கு பணிந்து பதவி விலகப்போவதில்லை என இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது … Read more

மேகதாது அணை விவகாரம் | புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

காரைக்கால்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காரைக்கால் திமுக எம்எல்ஏ நாஜிம் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து காரைக்கால் சட்டமன்ற உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான நாஜிம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில்: “காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு அதற்கு அனுமதியளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போல புதுச்சேரி அரசும் … Read more