காஷ்மீர் பண்டிட்களின் வலியை ஆயுதமாக்குவது உள்நோக்கம் கொண்டது: மெகபூபா கடும் சாடல்

ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடி தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை விளம்பரப்படுத்தும் நேரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு ஏதாவது செய்திருந்தால் இன்று அவர்களின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு … Read more

பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பது அரசின் கடமை: தினகரன்

சென்னை: “தமிழகத்தையொட்டிய கடற்பகுதியிலுள்ள திட்டுகளில் நிராதரவாக இறக்கிவிடப்படும் இலங்கைத் தமிழர்களை கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் பாதுகாப்பாக அழைத்து வந்து கரை சேர்க்க வேண்டும்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் நமது தொப்புள் கொடி உறவான தமிழர்கள் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக தமிழகம் வரத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. அப்படி வருகிறவர்களை எந்த வித இன்னலுக்கும் … Read more

மூடப்பட்ட அரசு பள்ளியை திறக்க உதவிய ஆட்சியர் படத்துக்கு பாலபிஷேகம்

ஹைதராபாத்: மூடப்பட்ட அரசு பள்ளியை திறக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு பேனர் வைத்து, பொதுமக்கள் பாலபிஷேகம் செய்தனர். தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் ராம் நகர் தீப்தி காலனியில் கடந்த 25 ஆண்டுகளாக அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து விட்டது. இதில் கரோனா தொற்று கால கட்டத்தில் அப்பள்ளி முழுமையாக மூடு விழா கண்டது. இப்பள்ளி முற்றிலுமாக மூடப்பட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீண்டும் … Read more

'நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்' – ஆப்கனில் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் பெண்கள் பள்ளிகளை மூடிய தாலிபன் அரசு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று (புதன்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறப்பட்ட நிலையில், சில மணி நேரத்தில் பெண்கள் பள்ளிகளை மூடுவதற்கு ஆளும் தலிபான் அரசு உத்தரவிட்டது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களின் ஆட்சி: ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச படைகள் வெளியேறிய பின்னர், அப்போதைய அதிபர் அஷ்ரஃப் கானியின் ஆட்சி கலைக்கப்பட்டு, தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு ஏழு மாதங்களாக தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு … Read more

உச்சிப்புளி ஐஎன்எஸ் கடற்படை விமானத்தளம் 10 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றம் பெறும்: கிழக்கு கடற்படை தளபதி தகவல்

ராமநாதபுரம்: இன்னும் 10 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் கடற்படை விமானத்தளம் நாட்டின் தெற்குப்பகுதியில் அனைத்து விமானங்களையும் இயக்கும் வகையில் பெரிய விமானத்தளமாக மாறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி துணை அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில் இரண்டு மேம்பட்ட இலகு ரக எம்கே 3 வகை ஹெலிகாப்டர்கள் இணைக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்திய … Read more

உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பதவியேற்பு: விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

டேராடூன்: உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் இன்று பதவியேற்று கொண்டார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உத்தராகண்ட் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும், கதிமா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர் தோல்வியை தழுவியபோதிலும் பாஜக பெற்ற … Read more

தமிழக தென் மாவட்டங்களில் ட்ரோன் பயிற்சி வசதி தேவை: மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஆளில்லா விமானங்களுக்கான தொழில்முறை பயிற்சி அளிக்கும் வசதிகள், தென் மாவட்டங்களில் தேவைப்படுகிறது என்று மக்களவையில் அதிமுக எம்.பி. பி.ரவீந்திரநாத் வலியுறுத்தினார். இது குறித்து தேனி தொகுதி எம்.பி.யான ரவீந்திரநாத் மக்களவையில் பேசுகையில், “போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பணியைத் தொடங்கி, வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணிக்கு தலைமை தாங்கி சுமார் 18,000 இந்தியர்களை அழைத்து வந்ததற்காக, நமது விமானப் போக்குவரத்துத் … Read more

இந்தியாவில் மார்ச் 31-ல் முடிவுக்கு வரும் கரோனா கட்டுப்பாடுகள்; மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி மட்டும் அவசியம்

புதுடெல்லி: நாட்டில் நீடித்து வரும் கரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது என்றும், இருப்பினும் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கரோனாவின் முதல் அலையில் தொடர்ந்து 8 மாதங்கள் நீடித்த பொதுமுடக்கம் பின்பு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. … Read more

முல்லைப் பெரியாறு | உச்ச நீதிமன்ற மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் அலுவகத்திடம் தமிழக விவசாயிகள் மனு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது எனவும், வலுகுறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப் பெற எனவும், பிரதமர் மோடியிடம் தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று டெல்லியில் அவரது அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், … Read more

‘மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பது கடமை’

புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பது இந்தியர்கள் அனைவரின் சட்டபூர்வமான கடமை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த்ராய் மக்களவையில் தெரிவித்தார். இதுகுறித்து மக்களவையில் நேற்று அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்புமற்றும் தேசிய மக்கள் தொகைபதிவேடு விவரங்களை கணக்கெடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தொகை சட்டம்1948-ன் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள அல்லது மேற்பார்வை செய்ய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை மாநில … Read more