ஓசூர் காப்புக்காடு தொட்டிகளில் வனவிலங்குகள் தாகம் தணிக்க தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

ஓசூர்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஓசூர் வனச்சரக காப்புக்காடுகளில் வாழும் வனவிலங்குகளின் தாகம் தணிக்கும் வகையில் காப்புக்காடு தொட்டிகளில் தண்ணீர் நிரம்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓசூர் வனச்சரகத்தில் சானமாவு காப்புக்காடு, செட்டிப்பள்ளி காப்புக்காடு, கும்பளம்-1 காப்புக்காடு, கும்பளம்-2 காப்புக்காடு, குலு காப்புக்காடு, சானமாவு விரிவாக்கம் காப்புக்காடு உட்பட 12 காப்புக்காடுகள் அமைந்துள்ளன. இந்த காப்புக்காடுகளில் வாழும் யானை, சிறுத்தை, காட்டெருமை, புள்ளிமான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக வனத்தில் அமைந்துள்ள இயற்கையான … Read more

தஞ்சாவூர் | ரூ.5 கோடி மதிப்பிலான இடம் மீட்பு; 2,400 சதுரஅடி கட்டிடத்தை இடித்து அகற்றிய மாநகராட்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ரூ.5 கோடி மதிப்பிலான 2,400 சதுரஅடி பரப்பளவில் கட்டிப்பட்டிருந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு, அந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். தஞ்சாவூர் தென்கீழ் அலங்கம் பகுதியில் அகழிகரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு முத்து வைத்திய சாலை என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னர் மருத்துவமனை இருந்த இடத்தை பாலகிருஷ்ணன் என்பவர் தனது மளிகை கடைக்கான பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார். இதற்கிடையில் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தென்கீழ் அலங்கம் … Read more

கரூர் | ரூ.10 லட்சம் காசோலை மோசடி – முன்னாள் எம்எல்ஏவுக்கு பிடிவாரன்ட்

கரூர்: ரூ.10 லட்சம் காசோலை மோசடி வழக்கில் முன்னாள் எம்எல்ஏவுக்கு கரூர் விரைவு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு அம்பாள் நகரைச் சேர்ந்வர் கே.ராமசந்திரன். இவரிடம் கிருஷ்ணராயபுரம் முன்னாள் எம்எல்ஏ செ.காமராஜ். அதிமுக சார்பில் கடந்த 2011ல் வெற்றிப்பெற்ற இவர், அதிமுகவிலிருந்து விலகி கடந்த தேர்தலுக்கு முன் திமுகவில் இணைந்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி குடும்பச்செலவு மற்றும் தொழில் நிமித்தமாக பிராமிசரி நோட்டு கொடுத்து ரூ.1 வட்டிக்கு ரூ.10 … Read more

தமிழகத்தில் காவல் நிலைய கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை சேமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஓர் ஆண்டு அல்லது 18 மாதங்கள் வரை சேமித்து வைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்த சரவணன் பாலகுருசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், வடமதுரை காவல் ஆய்வாளர் கருப்பசாமி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜகணேஷ், தங்கபாண்டி ஆகியோர் எனக்கு எதிராக மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை … Read more

40 ஆண்டு கால பிரெஞ்சு கற்பித்தல் பணி: புதுச்சேரி பல்கலை. பேராசிரியருக்கு செவாலியே விருது

புதுச்சேரி: 40 ஆண்டு கால பிரெஞ்சு கற்பித்தல் பணியிலுள்ள புதுச்சேரி பல்கலைக்கழக பிரெஞ்சு துறை பேராசிரியர் நளினி ஜே தம்பிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. புதுவை பல்கலைக்கழக பிரெஞ்சு துறை பேராசிரியர் நளினி ஜே தம்பி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு மொழி மற்றும் கலாசாரத்தை கற்பித்தல் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக பிரான்ஸ் அரசாங்கத்தின் உயரிய விருதான செவாலியே விருது பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கான பிரெஞ்சு … Read more

பாகிஸ்தானில் நடைபெறும் இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்க வந்த யுஏஇ குழு காஷ்மீரில் முதலீடு செய்வது குறித்து ஆய்வு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த உயர்நிலை தொழில் துறை குழுவினர் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே அனைத்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடுபாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த யுஏஇ குழுவினர் நேற்று முன்தினம் நகர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக அனைத்து இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு (ஓஐசி) மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டமைப்பில் யுஏஇ … Read more

மார்ச் 22: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,490 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.21 வரை மார்ச்.22 மார்ச்.21 … Read more

ராணுவத்தில் சேர்வதற்காக இரவில் 10 கி.மீ. ஓடி பயிற்சி எடுக்கும் இளைஞர்: திரைப்பட இயக்குநர் பகிர்ந்த வீடியோ வைரல்

புதுடெல்லி: தனியார் நிறுவன ஓட்டலில் பணியை முடித்த பின்னர் இரவு 12 மணிக்கு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடி பயிற்சி எடுக்கும் இளைஞர் குறித்த வீடியோவை திரைப்பட இயக்குநர் வினோத் காப்ரி சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள பரோலா கிராமத்தில் வசித்து வருகிறார் 19 வயது இளைஞர் பிரதீப் மெஹ்ரா. இவர் நொய்டாவிலுள்ள மெக்டொனால்ட் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலை 8 மணிக்கு பணிக்கு … Read more

மார்ச் 22: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,490 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால பொருட்களை பார்வையிட்டார் பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால அரிய கலைப் பொருட்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் உட்பட 29 பழங்காலப் பொருட்களை ஆஸ்திரேலி யாவில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது. இந்த பழங்காலப் பொருட்கள் ராஜஸ்தான், குஜராத்,மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை. ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு இந்தியா கொண்டுவரப்பட்ட 29 பொருட்களும் சிவன், சக்தி, விஷ்ணு, ஜெயின் பாரம்பரியம், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் … Read more