பெரியகுளம்: அரசு பள்ளியில் ஆசிரியரை கத்தியால் குத்த முயன்ற பிளஸ் 1 மாணவர்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் ஆசிரியரை கத்தியால் குத்த முயற்சி செய்தார். தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி, மஞ்சளாறு, சாத்தாகோவில்பட்டி, செங்குளத்துப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 900 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர் ஒருவரை ஆசிரியர் கடந்த 17-ம் தேதி கண்டித்தார். இதனால் கோபமடைந்த மாணவர் வீட்டுக்குச் சென்று கத்தியுடன் வந்து பள்ளி வளாகத்தில் … Read more

வடமாநில பூண்டு வரத்து அதிகரிப்பால் விலை சரிவு: கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை

தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்படுகிறது. மேலும், தமிழக தேவைக்கு வட மாநிலங்களில் இருந்து பூண்டு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. சேலத்தில் பூண்டு மொத்த விற்பனை மையமாக விளங்கும் பால் மார்க்கெட், லீ பஜார் உள்ளிட்ட இடங்களுக்கு வட மாநிலங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருகிறது. தற்போது, வடமாநிலங்களில் பூண்டு அறுவடை நடைபெற்று வரும் நிலையில், வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது. இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த பூண்டு மொத்த வியாபாரிகள் கூறியதாவது: குஜராத், மத்திய … Read more

ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை: முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

ஊழல் அமைச்சர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் வார்த்தை ஜாலம் மட்டுமே உள்ளது. இது ஒரு பகல் கனவு நிதி நிலை அறிக்கை. தமிழக அரசின் கடன் தொகை ரூ.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. தமிழக மக்கள் மீது கடுமையான கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையில் … Read more

கர்நாடகா தோட்டக்கலை பூங்காவில் கோடை சீசன் ஏற்பாடு: உதகையில் 80 ஆயிரம் மலர்ச் செடிகள் நடவு

நீலகிரி மாவட்டம் உதகை பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மலர் அருவி, கற்களால் ஆன இருக்கைகள், அலங்காரங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இங்கு அமைந்துள்ள பசுமையான புல்வெளியில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும், நர்சரியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி … Read more

நம்பர் 1 முதல்வர் என்பதைவிட நம்பர் 1 தமிழகம் என்பதையே விரும்புகிறேன்: ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம்களில் இதுவரை 41 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20.3.2022) செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து ஆற்றிய உரை: ”இந்த இனியதொரு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களை … Read more

யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதுதான் இந்த வேளாண் பட்ஜெட்​​​​​​​: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதுதான் இந்த வேளாண் பட்ஜெட் என்று தேமுதி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் வியயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “எதிர்காலத்திற்கு தேவையான ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதுதான் இந்த வேளாண் பட்ஜெட். விவசாயத்திற்கு மிக முக்கிய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது, தமிழக நதிகளை இணைப்பது போன்ற அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. வேளாண் … Read more

உருவாகும் 'அசானி' புயல்.. – அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழைபெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று காலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் … Read more

சீனாவில் கரோனா அதிகரித்து வருவதால் நாம் எச்சரிக்கையுட்ன இருக்க வேண்டும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்

ராணிப்பேட்டை: சீனாவில் மீண்டும் கரோனா அதிகரித்து வருவதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சாமி தரிசனம் செய்தார். பாலமுருகனை வழிபாடு செய்து பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘‘கரோனாவில் இருந்து தப்பிக்க நாம் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். வெளியில் செல்லக் கூடியவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து … Read more

மார்ச் 20: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,390 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.19 வரை மார்ச்.20 மார்ச்.19 … Read more

மார்ச் 20: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,390 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more