தமிழக பட்ஜெட் 2022-23 | 7.5% ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணங்களுக்காக ரூ.204 கோடி ஒதுக்கீடு 

சென்னை: முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் 2022-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, உயர்கல்வித் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > தமிழகத்தில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் … Read more

ராணுவ ஆராய்ச்சிக்காக 45 நாட்களில் 7 மாடி கட்டிடம் கட்டி டிஆர்டிஓ சாதனை: பெங்களூருவில் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

பெங்களூரு: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (டிஆர்டிஓ) அதிகாரிகள் நேற்று கூறியதாவது: டிஆர்டிஓ உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஹைபிரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெங்களூருவில் 7 மாடி கட்டிடத்தை 45 நாட்களில் கட்டி முடித்துள்ளது. ஹைபிரிட் கட்டுமான தொழில் நுட்பத்தில் நிரந்தர கட்டிடத்தை இவ்வளவு குறைந்த காலத்தில் கட்டி முடித்திருப்பது சாதனை யாகும். இந்த கட்டிடத்தை நகர்த்துவதற்கும் ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் கட்டுமானத் துறையின் வரலாற்றில் முதல் முறையாகும். இந்த கட்டிடம் 5ஜி மேம்பட்ட உள்நாட்டு போர் … Read more

வருவாய் பற்றாக்குறை 3.8% ஆக குறைகிறது; திராவிட மாடல் வளர்ச்சி: தமிழக நிதியமைச்சர் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு ரூ.7000 கோடி குறைய உள்ளது, 2014-ல் இருந்து வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது, இந்த ஆண்டு அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி வைத்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணி … Read more

போரால் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்வி தொடர அனுமதி: கட்டணத்தை அரசு ஏற்பதாக முதல்வர் மம்தா அறிவிப்பு

புதுடெல்லி: போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகளில் கல்வியைதொடர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணத்தையும் அரசு ஏற்கும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ரஷ்யா தொடுத்த போரால் உக்ரைனில் பயின்று வந்த 19,000 இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வந்தது. அவ்வாறு நாடு திரும்பியவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் கல்வி பயின்ற மாணவர்கள், பாதியில் நாடு திரும்பி உள்ளனர். அதனால், தங்கள் … Read more

தமிழக பட்ஜெட் 2022-23 தாக்கல்: அதிமுகவினர் கடும் அமளி; சபாநாயகர் கண்டிப்பு

சென்னை: தமிழக அரசின் 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யத் தொடங்கினார். அப்போது, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பளிக்க கோரி, அமளியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி வைத்தார்.இதையடுத்து, 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.முன்னதாக, அதிமுக … Read more

'பாஜகவை வீழ்த்த தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும்' – ப.சிதம்பரம் 

புதுடெல்லி: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும் எனக் கூறியுள்ளார் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல், காங்கிரஸின் பலவீனம், காங்கிரஸ் செய்ய வேண்டிய மீள் கட்டமைப்புப் பணிகள் எனப் பலவற்றையும் … Read more

வண்டலூர் பூங்காவில் ரூ.15 கோடியில் கூடுதல் வசதி: வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு ரூ.15 கோடியில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட உள்ளதாக வனத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கரோனா பேரிடர் காலத்தில் வண்டலூர் பூங்காவுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பூங்கா மற்றும் விலங்குகள் பாரமரிப்பு, மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.6 கோடியை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இந்தியாவிலேயே வண்டலூர் உயிரியல் பூங்கா மிகவும் சிறப்புவாய்ந்தது. … Read more

டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட உளவுத் துறை அதிகாரியின் தம்பிக்கு அரசு பணி

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது கலவரம் வெடித்து 53 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் உளவுத் துறை அதிகாரி அங்கித் ஷர்மா கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த அங்கித் ஷர்மாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என்று டெல்லி … Read more

இன்றைய வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப பொறியியல் பாடத் திட்டம் மாற்றப்படும்: பொன்முடி தகவல்

சென்னை: வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப பொறியியல் பாடத் திட்டம் மாற்றப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். வேலைவாய்ப்புக்கு உகந்த வகையில் பொறியியல் பாடத் திட்டத்தை மாற்றியமைப்பது குறித்த ஒரு நாள் பயிலரங்கம் சென்னைஅண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொறியியல் துறை பேராசிரியர்கள் பங் கேற்ற இந்த நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: படிக்கும்போதே மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சியை அளிக்கவேண்டி உள்ளது. அந்த வகையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு … Read more

சிறையில் உள்ள விசாரணை கைதிகளில் 67% பேர் இந்து; 19.5% பேர் முஸ்லிம்கள்

புதுடெல்லி: மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளில் 67 சதவீதம் பேர் இந்துக்கள், 19.5 சதவீதம் பேர் முஸ்லிம்கள், 3.5 சதவீதம் பேர் சீக்கியர்கள், 2.2 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள், மீதமுள்ளவர்கள் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி … Read more