ஒமைக்ரான் தாக்கம்: தென்கொரியாவில் ஒரே நாளில் 6,00,000+ கரோனா பாதிப்பு

சியோல்: தென் கொரியாவில் ஒமைக்ரானால் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தென்கொரிய நோய் தடுப்பு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒமைக்ரான் வைரஸ் பரவலால் தொடர்ந்து தென்கொரியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது. தென்கொரியாவில் இன்று (வியாழக்கிழமை) 6,21,328 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஆனால், அவசர பிரிவில் அனுமதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகமாகவில்லை” என்று … Read more

புதுச்சேரி நகர வீதிகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க டெண்டர்: கடுமையாக எதிர்க்கும் கூட்டணிக் கட்சியான அதிமுக

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதிகளில் வாகனங்களை வீதிகளில் எங்கு நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கான மின்னணு ஏலம் வரும் 25ல் நடக்கவுள்ள சூழலில் ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. வாகனங்களை நிறுத்தவே இடமில்லை. இந்நிலையில், சாலையோரங்களில் டூ-வீலர் தொடங்கி வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க புதுச்சேரி நகராட்சி முடிவு எடுத்துள்ளது. இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீதிக்கும் ஒரு கட்டணம் என … Read more

தமிழகத்தின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புக: அதிமுக எம்.பி ரவீந்திரநாத் வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழகத்தின் கேந்திரிய வித்தியாலாயா பள்ளிகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்பும்படி மத்திய அரசிடம் அதிமுக எம்.பியான பி.ரவீந்திரநாத் மக்களவையில் வலியுறுத்தினார். இது குறித்து தேனி எம்.பியான ரவீந்திரநாத் நேற்று மக்களவையின் பூஜ்ஜியநேரத்தில் பேசியது: ”பிப்ரவரி 1, 2022 தரவுகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 58 முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 139 , பயிற்சி பெற்ற பட்டதாரி … Read more

மக்கள் கிளர்ச்சி முதல் ஹேஷ்டேக் யுத்தம் வரை… என்ன நடக்கிறது இலங்கை நாட்டில்?

கொழும்பு: இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிகளால், பொதுமக்களும், எதிர்கட்சியினரும் அந்நாட்டு வீதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பொதுமக்கள் தன்னெழுச்சியாக சாலைகளில் குவிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இது ஆளும் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் சமீப காலமாக எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாட்டில் பலருக்கு அவை எட்டாக்கனியாக மறிவருகின்றன. நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலைமையை மாற்றக்கோரி, 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடற்கரையை நோக்கியபடியிருக்கும், … Read more

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தேரோட்டம்: வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள் 

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கழுகுமலை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 9-ம் திருநாளான இன்று காலை … Read more

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும்: திமுக எம்.பி. கவுதம சிகாமணி வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எட்டு சாலைகளை, தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியுள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பியான பொன், கவுதம சிகாமணி, மத்திய அரசிடம் வலியுறுத்தினார். இது குறித்து கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் எம்.பி.யான கவுதம சிகாமணி 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில், “இந்த ஆண்டு நிதியமைச்சர் அறிக்கை, மோடி அரசின் பெருமுதலாளிகள் சார்பை பறைசாற்ற மட்டுமே முனைந்தது. … Read more

ஹிஜாப் விவகாரம்: மதுரையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து, மதுரையில் வகுப்பு வாரிய கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை என்று கர்நாடக உயர் நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் சில இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் இரண்டு நாட்களாக ஒரு சில இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரையில் வகுப்பு வாரிய … Read more

ஆந்திர அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு சலுகை

அமராவதி: ஆந்திர அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் மீண்டும் 25 சதவீத மானியக் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆந்திர போக்கு வரத்து துறை அமைச்சர் பி. வெங்கடராமய்யா நேற்று அமராவதியில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கரோனா தொற்று பரவுவதற்கு முன், நம் மாநிலத்தில் 60 வயது நிரம்பியவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டது. ஆனால் கரோனா காலத்தில் இந்த சலுகை நிறுத்தப்பட்டது. இந்த சலுகையை தற்போது … Read more

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி இலங்கையில் பிரம்மாண்ட போராட்டம்

கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இலங்கையின் ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவிதம் … Read more

தென் மண்டல ஐஐியாக அஸ்ரா கார்க் நியமனம்; தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 17 காவல் துறை ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தென் மண்டல ஐஐியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 17 காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தென் மண்டல ஐஐியாக அஸ்ரா கார்க், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக அன்பு, வடக்கு மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்னர். > … Read more