உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு அரசு உதவும்: தெலங்கான முதல்வர் அறிவிப்பு

ஹைதராபாத்: மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் சென்று போர் பாதிப்பினால் நாடு திரும்பியுள்ள தெலங்கானாவைச் சேர்ந்த மாணவர்களின் படிப்பிற்கு மாநில அரசு உதவும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து, இந்திய அரசு 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை உக்ரைனில் இருந்து சொந்த நாட்டு திருப்பி அழைத்து வந்தது. அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் படிப்பதற்காக அங்கு சென்றவர்கள். அவ்வாறு சென்ற இந்திய மாணவர்கள் பிப்ரவரியின் இறுதியில் அங்கு போர் தொடங்கிய … Read more

கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் கட்டண வசூலின்றி பயணிக்கும் வாகனங்கள் – சம்பள நிலுவையால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூரில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வாகனங்கள் கட்டண வசூலின்றி பயணிக்கின்றன சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூரில் சுங்கச்சாவடி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 67 பேர் பணிபுரிந்து வந்தனர். இங்கு ஒப்பந்ததாரர் மாற்றம் செய்யப்பட்டதால், ஊழியர்களைக் குறைக்க புதிய ஒப்பந்ததாரர் முயன்றுள்ளார். இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் அந்த 67 பேரும் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளனர். … Read more

”எங்களுக்கு சொந்த நாடே துரோகம் இழைத்ததாக உணர்கிறோம்” – ஹிஜாப் வழக்கு தொடர்ந்த மாணவிகள்

பெங்களூரு: “சொந்த நாடே எங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக உணர்கிறோம். இன்று இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது” என்று ஹிஜாப் வழக்கின் மனுதார்களான மாணவிகள் தெரிவித்துள்ளனர். “ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. மேலும், இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின் கீழ் வரவில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என்று கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து … Read more

”ஒத்த ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை” – லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து எஸ்.பி.வேலுமணி

கோவை: “அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். அதேநேரத்தில், அவரது வீட்டிலிருந்து சில பொருட்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர். முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை இரவு முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, வீட்டின் முன்பு திரண்டிருந்த அதிமுகவினரை, அவர் சந்தித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் … Read more

சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கத்தை காக்கும் பொறுப்பு அரசிடம்தான் உள்ளது: கர்நாடகா காங்.தலைவர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு: மாநிலத்தின் கல்வி, சட்டம் ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை நிலை நாட்டும் பொறுப்பு கர்நாடக அரசிடம்தான் உள்ளது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், இது தொடர்பான … Read more

மார்ச் 14: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,073 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

தேர்தல் தோல்வி எதிரொலி: 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக சோனியா காந்தி உத்தரவு

புதுடெல்லி: ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அந்தந்த மாநிலத்தின் கட்சித் தலைவர்கள் பதவி விலகவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. 7 கட்டங்களாக நடந்த இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உத்தரப் பிரதேசத்தில் அந்தக் கட்சி இரண்டு இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியைச் சந்தித்திருந்த … Read more

தமிழகத்தில் இன்று 77 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 28 பேர்: 169 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,073. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,13,087. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 28 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

'கபில் சிபில் ஆர்எஸ்எஸ் மொழியில் பேசுகிறார்' – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டால் வலுக்கும் உட்கட்சிப் பூசல்

புதுடெல்லி: “காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்காக,காந்தி குடும்பத்தினரை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து அகற்ற ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நினைக்கிறது” என்று அக்கட்சியின் மக்களவைத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. உத்தரப் பிரதேசத்தில் அக்கட்சி இரண்டு இடங்களை மட்டும் பெற்றிருந்தது. இதுகுறித்து ராகுல்காந்தி, “மக்களின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம்” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசனை … Read more

பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்

கோவில்பட்டி: 2020-2021-ல் பிரீமியம் தொகை செலுத்திய விவசாயிகளுக்கு, அனைத்து பயிர்களுக்கும் பாகுபாடின்றி பயிர்க்காப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. பயிர் காப்பீடு செய்த அனைத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாகுபாடின்றி அனைத்து பயிர் வகைகளும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்; 2020-21-ம் ஆண்டில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மக்காச்சோளம், உளுந்து, பாசி போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க … Read more