4 மாநில தேர்தல் வெற்றியால் மக்களவையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு; ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: உத்தர பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல் வெற்றிக்கு பிறகு நேற்று மக்களவைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜம்மு காஷ்மீருக்கான 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி … Read more

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் உருவாக்கம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் சென்னை உள்ளிட்ட5 மாவட்டங்களில் முதல்முறையாகமாவட்ட நல அலுவலகங்கள் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்ட அரசாணை: சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட நல அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, உடனுக்குடன் … Read more

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் கவனத்தில் கொள்ளப்படும்: மக்களவையில் தர்மேந்திர பிரதான் உறுதி

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலம் கவனத்தில் கொள்ளப்படும் என்றுமக்களவையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து சுமார் 20,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். உக்ரைனுக்கு மீண்டும் திரும்பிசெல்ல முடியாத நிலையில் இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார். உக்ரைனில் இருந்து நாடுதிரும்பிய மாணவர்களின் … Read more

'அவர்கள் சொல்வது பொய்' – டிவி செய்தி நேரலையில் NO WAR பதாகையுடன் நுழைந்த ரஷ்ய பெண் பத்திரிகையாளர்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நேற்று 19வது நாளை எட்டிய நிலையில், ரஷ்ய பெண் பத்திரிகையாளரின் போருக்கு எதிரான துணிச்சலான குரல் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.நேற்று மாலை ரஷ்யாவின் பெர்வி கானால் எனும் அரசு தொலைக்காட்சியில் வழக்கம்போல் நேரலையாக செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஒரு பதாகையுடன் இளம் பெண் பத்திரிகையாளர் வந்து நின்றார். அந்தப் பதாகையில் கையால் ரஷ்ய, உக்ரைன் தேசியக் கொடிகள் வரையப்பட்டிருந்தன. கூடவே ரஷ்ய மொழியில், போர் வேண்டாம். போரை … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, நகைக்கடை, அலுவலகம், உறவினர்களின் வீடு, உதவியாளர் வீடு என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், உதவியாளர் சந்தோஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 41 இடங்கள் ,சென்னையில் 8 இடங்கள் ,சேலத்தில் 4 இடங்கள் ,திருப்பத்தூரில் 2 இடங்கள் ,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம் , வெளி மாநிலத்தில் ஒரு இடம் … Read more

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரண நிதியில் முறைகேடு கவலை தருகிறது: உச்ச நீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: கரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட நிவாரண நிதியில் முறைகேடு செய்வதாக எழுந்துள்ள புகார் கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக உயிரிழந்தவர்களின் ஆர்டிபிசிஆர் சோதனை அறிக்கை, இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், குஜராத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி இறப்பு சான்றிதழ் பெற்றுஇழப்பீட்டுத் தொகையை பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குநீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான … Read more

பள்ளிகளில் தொழில்நுட்ப தர மேம்பாட்டுக்காக காக்னிசன்ட் நிறுவனத்துடன் கல்வித் துறை ஒப்பந்தம்: வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நியமன ஆணையை ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பள்ளிகளில் தொழில்நுட்ப தர மேம்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், காக்னிசன்ட் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித் துறைபுரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜீவா பேரனுக்கு அரசுப் பணி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், விடுதலைப் போராட்ட வீரரும்,பொதுவுடைமை சிந்தனையாளருமான ஜீவானந்தத்தின் (ஜீவா) பேரனான, மாற்றுத் திறனாளி ம.ஜீவானந்துக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் காலியாக உள்ள … Read more

சுற்றுலா துறையில் 2.1 கோடி பேர் வேலையிழப்பு: மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தகவல்

புதுடெல்லி:மக்களவையில் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷண் ரெட்டி நேற்று கூறியதாவது: கரோனா முதல் அலையின்போது இந்தியாவுக்கு சுற்றுலாவரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 93 சதவீதம் குறைந்தது. இரண்டாவது அலையின்போது 79 சதவீதமும், மூன்றாவது அலையின்போது 64 சதவீதமும் வெளிநாட்டினரின் வருகை குறைந்தது. இந்திய சுற்றுலா துறையில் 3.8 கோடி பேர் பணியாற்றுகின்றனர். முதல் அலையின்போது இந்திய சுற்றுலா துறையில் 1.4 கோடி பேர் வேலையிழந்தனர். 2-வது அலையின்போது 52 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோனது. 3-வது அலையின்போது … Read more

சென்னை அருகே குரோம்பேட்டையில் ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையம் திறப்பு: மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: சென்னை அருகே குரோம்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். சென்னை அருகே குரோம்பேட்டையில் புதிதாக ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் தொடங்க விழா நேற்று நடைபெற்றது. இதில்முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, புற்றுநோய் மையத்தைதிறந்துவைத்தார். தொடர்ந்து, அந்த மையத்தை முதல்வர் பார்வையிட்டார். டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா, புதியமருத்துவமனையில் உள்ள அதிநவீன … Read more

'அபார சக்தி கொண்டவர்' – மோடிக்கு சசி தரூர் பாராட்டு

‘அபார சக்தி கொண்டவர்’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் புகழாரம் சூட்டியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ கருத்துக் கணிப்புகள் வரும் வரை உ.பி.யில் கடும் போட்டி நிலவுவதாக பெரும்பாலானோர் கூறினர். சிலர் சமாஜ்வாதி முன்னிலையில் இருப்பதாக கூறினர். இவ்வளவு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வரும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் மோடி அபார சக்தியும் சுறுசுறுப்பும் கொண்டவர். … Read more