'கடும் பாதிப்புகளை கருத்தில் கொள்க' – தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேனி மாவட்டத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (INO) அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (INO) அமைக்கும் திட்டத்தைக் கைவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 14) கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் … Read more

குஜராத் காங். மூத்த தலைவர் அணில் ஜோஷியாரா கரோனா பாதிப்பால் சென்னையில் உயிரிழப்பு

சென்னை: குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தின் பிலோடா (எஸ்டி) தனித் தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அணில் ஜோஷியாரா கரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 70. அவரது மறைவு காரணமாக குஜராத் சட்டப்பேரவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்தின்போது, ​​எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஷைலேஷ் பர்மர் ஜோஷியாராவின் மரணம் குறித்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் இரண்டு … Read more

தமிழகம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது: பி.தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல்: ”திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மாநிலம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மாடகாசம்பட்டியில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டுச் செல்வதில்லை. ஒரு சில நிர்வாகிகள் வேண்டுமானால் செல்லலாம். அவர்கள் கட்சிக்கு உண்மையானவர்கள் இல்லை. சட்டப்பேரவை … Read more

காங்கிரஸ் தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பில்லை: மல்லிகார்ஜூன கார்கே

புதுடெல்லி: “ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பில்லை. ஒவ்வொரு மாநிலத் தலைவரும், எம்பியும் பொறுப்பேற்க வேண்டும்” என மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து அவர் கூறுகையில், “ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தியை மட்டும் பொறுப்பாக்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்தின் தலைவர்களும், எம்.பி.களும் பொறுப்பேற்க வேண்டும். மாறாக, காந்தி குடும்பம் மட்டுமே பொறுப்பு இல்லை. நாங்கள் மீண்டும் பாஜகவின் சிந்தாந்தத்தை எதிர்த்து … Read more

’இந்து தமிழ் திசை’ இணையதள செய்தி எதிரொலி: ஆதரவற்ற 3 சிறுவர்களுக்கு உதவிட தமிழக அரசு நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரத்தில் பெற்றோரை இழந்து, அடுத்த வேளை உணவுக்கே போராடிவரும் 3 சிறுவர்கள் குறித்து ’இந்து தமிழ் திசை’யின் இணைய தளத்தில் வெளியான செய்தி எதிரொலியாக, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவின் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் வசித்தவர் தையல் தொழிலாளி லோகநாதன். இவரது மனைவியின் பெயர் வேண்டா. இவர்களுக்கு கார்த்திகா(15), சிரஞ்சீவி(14), நிறைமதி(10) ஆகிய 2 மகள்கள் … Read more

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

கர்நாடகா: நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கர்நாடாக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டது. தென்னிந்தியா முழுவது இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா … Read more

விவசாயிகளிடம் இருந்து இனி 'டிகேஎம்9' ரக நெல் கொள்முதல் செய்யப்பட மாட்டாது: தமிழக அரசு

சென்னை: ‘டிகேஎம்9’ ரக நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை நெல் கொள்முதல் நிலையங்கள் கைவிட வேண்டும் என்று தமிழ அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ‘டிகேஎம்9’ ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வகை நெல்லினை அரவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால், இவ்வகை அரிசியினை பொது விநியோகத் திட்டத்தின் … Read more

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 5,000 வாக்கு வித்தியாசத்தில் 48 பேர் தோல்வி: கூட்டணியுடன் சேர்த்து சமாஜ்வாதி 28, பாஜக 20

புதுடெல்லி: உத்தர பிரதேச தேர்தலில் 255 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முக்கிய எதிர்க்கட்சி சமாஜ்வாதி 111 தொகுதிகளை பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் அப்னா தளம் (சோனுலால்) 12, நிஷாத் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றன. சமாஜ்வாதி கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளம் (ஆஎல்டி) 8, எஸ்பிஎஸ்பி 6 இடங்ளை வென்றன. காங்கிரஸ் மற்றும் குற்றப் பின்னணி அரசியல்வாதி ராஜா பைய்யா எனும் ரகுராஜ் பிரதாப் சிங்கின் புதிய கட்சி ஜன் சத்தா … Read more

நாமக்கல் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கு: 12 ஆண்டுகளுக்குப் பின் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நாமக்கல்: பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சி. வேலுச்சாமி. இவர் அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த விசைத்தறி ஓட்டும் பெண் தொழிலாளி ஒருவர் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். இச்சூழலில் கடன் பெற்ற தொழிலாளியின் மகளை கந்து … Read more

ஏர் இந்தியாவின் புதிய தலைவராக  டாடா சன்ஸ் சந்திரசேகரன் நியமனம்

புதுடெல்லி: ஏர் இந்தியாவின் புதிய தலைவராக சந்திரசேகரனை நியமித்து டாடா குழுமம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு ஏலத்தில் அதிக தொகை கேட்டதால் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்திடம் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் கடந்த ஜனவரி மாதம் மத்திய … Read more