தமிழகத்தில் இன்று 112 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 42 பேர்: 327 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,710. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,12,226. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 86,07,248 பேர் வந்துள்ளனர். சென்னையில் 42 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

சைக்கிளை நொறுக்கியது யோகி புல்டோசர்: பாஜக வெற்றி பற்றி ஹேமமாலினி கருத்து

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது யோகி ஆதித்யநாத் முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன்பின், மாபியாக்கள், ஊழல் புகாரில் சிக்கியவர்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஆதித்யநாத் புல்டோசர் மூலம் இடித்து தள்ளினார். அதனால், ‘புல்டோசர் ஆதித்யநாத்’ என்று அவரை அழைக்கத் தொடங்கினர். இந்நிலையில், உ.பி. தேர்தலில் மீ்ண்டும் தனிப்பெரும்பான்மை கட்சியாக பாஜக உருவெடுத்து தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கிது. இதுகுறித்து பாஜக மக்களவை எம்.பி.யும் … Read more

’ஏர் இந்தியா’வை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏர் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த … Read more

கோவாவின் முன்னாள் முதல்வரை தோற்கடித்த கார் மெக்கானிக் மகன் – ஆம் ஆத்மி உற்சாகம்

புதுடெல்லி: நடந்து முடிந்துள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வரை ஆம் ஆத்மி வேட்பாளரான கார் மெக்கானிக்கின் மகன் தோற்கடித்துள்ளார். கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சர்ச்சில் அலமாவ் போட்டியிட்ட பெனவுலிம் தொகுதி அதிகம் பேசப்பட்டது. இங்கு அவரை ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான கார் மெக்கானிக் மகன் வென்ஸி வீகாஸ் வென்றுள்ளார். இதே பெனவுலிம் தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்த சர்ச்சில், கோவாவின் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்தவர். இந்த முறை … Read more

ஆப்கன் அனுபவங்களில் இருந்து உக்ரைன் பாடம் கற்க வேண்டும்: ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் பேட்டி

காபூல்: “உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் ஆப்கானிஸ்தான் மீதான சர்வதேச கவனம் குறைந்துள்ளது. வல்லாதிக்க சக்திகளின் அதிகாரப் போட்டி விளையாட்டை நம் நிலத்தில் அனுமதிக்கக் கூடாது. ஆப்கனின் அனுபவப் பாடங்களை உக்ரைன் கற்றுக்கொள்ள வேண்டும்“ என ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானில் இந்தியா மீண்டும் தனது தூகரகத்தைத் திறந்து அந்நாட்டுடன் தொடர்புகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர், ஆப்கான்- இந்தியா உறவு குறித்து ‘தி இந்து’ ஆங்கில … Read more

2024 தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு

கொல்கத்தா: 5 மாநில தேர்தல் முடிவு வரும் நாடாளுமனற தேர்தலில் எதிரொலிக்காது, 2024 தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில், பஞ்சாப் தவிர உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். … Read more

அறுவை சிகிச்சை வசதிகளுடன் சேலம் அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனி சிகிச்சை மையம் துவக்கம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்காக சிறப்புத் தனி மருத்துவ சிகிச்சை மையத்தை ‘டீன்’ வள்ளி சத்தியமூர்த்தி திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் துவக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மதுரை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கு என தனி சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டது. இதன் தொடர் நடவடிக்கையாக சேலத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு … Read more

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து முடிவுக்கு வந்த பரோல்:  புழல் சிறைக்கு திரும்பிய பேரறிவாளன்

திருப்பத்தூர்: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சென்னை புழல் சிறைக்கு அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பேரறிவாளன்(52). முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், சிறுநீரக தொற்று, மூட்டு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பரோல் வழங்க … Read more

இரண்டாவது முறையாக உ.பி. முதல்வர்: யோகிக்கு திலகமிட்டு வாழ்த்திய முலாயம் சிங் பேத்தி .

லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வராகி இருக்கும் யோகி ஆதித்யநாத்திற்கு சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் பேத்தி திலகமிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில், பஞ்சாப் தவிர உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில், மோடி – யோகி அலையின் காரணமாக பாஜக அறுதிப்பெரும்பான்மை … Read more

சீனாவில் இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கரோனா தொற்று அதிகரிப்பு 

பீஜிங்: வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சேங்சுன் நகரில் கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கரோனா தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஆகையால், 90 லட்சம் பேர் கொண்ட அந்த மாகாணம் முழுமைக்கும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது சீனா. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் நகரில் முதன்முதலாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கரோனா பரவி 3வது, 4வது அலை வரை ஏறபட்டுவிட்டன. கரோனா முதல் அலையின்போதே சீனா … Read more