தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்று சக்தியாக உருவெடுப்போம்: ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் நம்பிக்கை

புதுடெல்லி: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் போட்டியிட்ட சங்ரூர் தொகுதியில் தொண்டர்களிடம் பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா கூறிய தாவது: பாஜகவுக்கு எதிராக மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி யாக ஆம் ஆத்மி உள்ளது. பஞ்சாப் தேர்தலில் காங்கிரசை ஒதுக்கிவிட்டு ஆம் ஆத்மியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். வரும் காலங்களில் தேசிய அளவில் இயல்பான முறையில் மாற்று சக்தியாக ஆம் … Read more

அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒருபோதும் பறிக்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

சென்னை: மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒருபோதும் பறிக்கப்படாது என மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு இயற்றியுள்ள 2021-ம் ஆண்டின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையி்ல் உள்ளது. இந்நிலையில் இந்த … Read more

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் அகிலேஷின் கூட்டணி முயற்சி 3-வது முறையும் தோல்வி

லக்னோ: உத்தர பிரதேச தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவின் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி முயற்சிகள் 3-வது முறையும் தோல்வி அடைந்துள்ளது. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்தது. அந்தத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கூட்டணி அமைத்து … Read more

அரை மணிக்கு ஒரு முறை ரஷ்யா குண்டு வீச்சு; மரியுபோல் நரகமாகிவிட்டது: மேயர் வேதனை

மரியுபோல்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 16வது நாளை எட்டியுள்ளது. துறைமுக நகரான மரியுபோலில் ரஷ்யப் படைகள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குண்டு வீசுவதால் அங்குள்ள 4 லட்சம் மக்களும் கடந்த இரண்டு நாட்களாக நரகத்தில் சிக்கியுள்ளதுபோல் தத்தளிக்கிறார்கள் என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். மரியுபோலை கிட்டத்தட்ட தனது முழுமையானக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்ய படைகள். சுமி நகரிலிருந்து 12,000 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், மரியுபோலில் இருந்து யாரும் வெளியேற ரஷ்ய படைகள் அனுமதிக்கப்படவில்லை. … Read more

2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு: தமிழக காசநோய் அலுவலக கூடுதல் இயக்குநர் தகவல்

சென்னை: தமிழ்நாடு மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் மற்றும் பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் இணைந்து காசநோய் குறித்த கருத்தரங்கம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில காசநோய் அலுவலக கூடுதல் இயக்குநர் டாக்டர் ஆஷா பேசும்போது, ‘‘காசநோய் பாதிப்பை படிப்படியாகக் குறைக்கமத்திய, மாநில அரசுகள் தொடர்ந்துபல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் காசநோய் பரிசோதனைகள் மையங்கள் இருக்கின்றன. இதேபோல், ஆரம்ப சுகாதாரமையங்களிலும் காசநோய் பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான, … Read more

ஆந்திராவிலும் பாஜக அலை வீசும்: மாநில தலைவர் சோம வீர்ராஜு நம்பிக்கை

விஜயவாடா: உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரா கண்ட் ஆகிய 4 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பாஜக மாவட்ட கட்சி அலுவலகங்கள் முன் பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதேபோன்று, விஜயவாடாவில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் கேக் வெட்டி, பட்டாசு கொளுத்தி கொண்டாடினர். அப்போது, பாஜகவின் மாநில தலைவர் சோம வீர்ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘பஞ்சாப் தவிர்த்து … Read more

இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி’ பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான ‘யுவிகா’ இளம் விஞ்ஞானி திட்டப் பயிற்சி முகாம் மே 16 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் … Read more

வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு: டெல்லியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியில் தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உ.பி., உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதுதான் காரணம் என்று காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் நேற்று குற்றம் சாட்டினார். மேலும், கட்சி தலைமை அலுவலகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, ‘மின்னணு வாக்குப் பதிவு … Read more

பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றம் பாதிப்பு; தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: மாதர் அமைப்பு, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சென்னை: பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாதர் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் வாரநாட்களில் தினந்தோறும் ரூ.90 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ரூ.120 கோடி முதல் ரூ.200 கோடி வரை மதுபான விற்பனை நடைபெறுகிறது. மதுபான விற்பனையால் ஒருபுறம் தமிழக அரசுக்கு வருவாய் உயர்ந்து … Read more

பிரதமர் நரேந்திர மோடி அலை தொடர்கிறதா? – உ.பி.யில் 1985-க்கு பிறகு 2-வது முறையாக ஆட்சி அமைத்து பாஜக சாதனை

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான அரை இறுதி போட்டியாக உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் கருதப்படுகிறது. இங்கு ஆளும் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டால், அது அக்கட்சியின் பல்வேறு எதிர்கால திட்டங்களை தகர்க்கும் நிலை இருந்தது. ஆனால் நேற்று வெளியான உ.பி. தேர்தல் முடிவுகளால் பாஜகவின் எதிர்காலம் கூடுதல் பிரகாசமடைந்துள்ளது. முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்பட்ட ‘பிரதமர் மோடி அலை’ இன்னும் ஓயவில்லை என்றே தெரிகிறது. இவரது அலையின் தாக்கம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா தேர்தல்களிலும் ஏற்பட்டுள்ளது. ‘குஜராத் … Read more