இந்திய மாணவர்கள் விவரம் சேகரிக்கிறது மத்திய அரசு: அவசியத்தை பொறுத்து அனைவரையும் நாடு திரும்ப வைக்க திட்டம்

புதுடெல்லி: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிலும் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவம் பயில்கின்றனர். ஐம்பது ஆண்டு களுக்கு முன்பிருந்தே மருத்துவம் பயில தமிழர்கள் ரஷ்யா செல்லத் தொடங்கினர். தற்போது சுமார் 30,000 இந்தியர் களில் தமிழர்கள் எண்ணிக்கையே 5,000-க்கு அதிக மாக உள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினாலும் ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வழக்கமான அன்றாட வாழ்கையில் உள்ளனர். எனினும், இவர்களது முழு எண்ணிக்கை விவரங்களை மத்திய அரசு திரட்ட தொடங்கி உள்ளது. … Read more

மார்ச் 5: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,817 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.4 வரை மார்ச்.5 மார்ச்.4 … Read more

உ.பி. வளர்ச்சிக்கு பாஜக வெற்றி அவசியம் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம்

ஜான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்ல பாஜக மீண்டும் வெற்றி பெறுவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. நேற்று 6-வது கட்ட தேர்தல் நடந்தது. 7-வது கட்ட தேர்தல் நடக்க இருக்கும் ஜான்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பாஜக ஆட்சியில் உத்தரப்பிரதேசம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஊழல் ஒழிக்கப்பட்டு சட்டம், ஒழுங்கு … Read more

நான் ராணுவத்தில் இணையவில்லை: முன்னாள் 'மிஸ் உக்ரைன்' விளக்கம்

தான் ராணுவத்தில் இணையவில்லை என்று குறிப்பிட்டுள்ள உக்ரைனின் முன்னாள் ‘மிஸ் உக்ரைன்’ அனஸ்டாசியா லீனா, ரஷ்யாவுக்கு எதிராக போரிட மக்களை அழைக்கும் நோக்கிலேயே புகைப்படங்களை வெளியிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் போரிட்டு வருகின்றனர். பொதுமக்களும் போரில் பங்கேற்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்கி அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று, முன்னாள் ‘மிஸ் உக்ரைன்’ அனஸ்டாசியா லீனா (31) ஆயுதம் ஏந்தியபடி ரஷ்யாவுக்கு எதிராக … Read more

மார்ச் 5: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,817 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

என் உயிரை காப்பாற்றிய தேசியக் கொடி: உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்

பெங்களூரு: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தேசிய கொடியை ஏந்தியவாறு இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கார்கிவ் நகரில் நடப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சொந்த ஊர் திரும்பிய கர்நாடக மாணவர் அனீஷ் அலி கூறுகையில், “உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அந்நாட்டு அதிகாரிகள் உதவுகிறார்கள். சில இடங்களில் பேருந்து மற்றும் ரயிலில் ஏற அனுமதிக்கவில்லை என கூறுகிறார்கள். அதேபோல இந்திய தூதரக அதிகாரிகள் … Read more

உக்ரைனில் இந்திய கொடியை பயன்படுத்தும் பாக். மாணவர்கள்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மாணவ, மாணவியரை மீட்க அந்த நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் மாணவர்கள், இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நபர், இந்த உண்மையை பகிரங்கமாக கூறியுள்ளார். இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் உக்ரைனில் இருந்து எவ்வித தாக்குதலும் இன்றி பாதுகாப்பாக வெளியேற முடியும் என்பதால் பாகிஸ்தான் மாணவ, மாணவியர் இந்திய தேசியக் … Read more

'கொடிகட்டிப் பறக்கும் சாதிவெறி' – பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த திமுக உறுப்பினர்

ஈரோடு: பவானி நகராட்சி 22-வது வார்டு உறுப்பினர் பதவியேற்ற மூன்றே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து நகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் திமுக 19 இடங்களிலும், அதிமுக 5 இடங்கள், கம்யூனிஸ்ட் கட்சி இரு இடங்கள் மற்றும் சுயேச்சை ஓர் இடத்திலும் வெற்றி பெற்றன. … Read more

"எதிர்மறை அரசியலே எதிர்க்கட்சிகளின் சித்தாந்தம்” – உக்ரைன் விவகாரத்தில் மோடி சாடல்

வாரணாசி: “எதிர்மறை அரசியலே எதிர்க்கட்சிகளின் சித்தாந்தம்” என்று உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இறுதிப் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் ’எதிர்மறையான அரசியலே எதிர்கட்சிகளின் சிந்தாந்தமாக மாறியுள்ளது’ என்றார். உக்ரைன் விவகாரத்தில் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசிய … Read more

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 64 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் ரஷ்ய ராணுவ வாகனங்கள்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 64 கிலோமீட்டர் தூரத்துக்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் எடுத்தபுகைப்படத்தில் தெரியவந்துள்ளது. இதனால், கீவ் பகுதியில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து 6-வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. எல்லையோர நகரங்கள் மீது தொடர்ந்து குண்டு மழையை ரஷ்ய ராணுவம் பொழிந்து வருகிறது. பெரும்பாலான எல்லையோரப் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோரை … Read more