மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் … Read more

உத்தரப் பிரதேச தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 8.02% வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று 12 மவாட்டங்களில் 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 8.02% வாக்குப்பதிவாகியுள்ளது. இது கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதிகளில் காலை 9 மணிக்கு பதிவான வாக்கு சதவீதத்தைவிட 2.3% குறைவாகும். கவனம் பெறும் அயோத்யா: முகலாயர்கள் உள்ளிட்ட மன்னர்களின் ஆட்சியில் இந்த அவத் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. அதேபோல், இந்த காலத்திலும் … Read more

ரஷ்ய தாக்குதலின் 4ஆம் நாள்: கார்கிவ் கைப்பற்றப்பட்டது; உலக நாடுகள் உதவி; இணைய சேவை வழங்கினார் எலான் மஸ்க்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இணைய சேவை, ராணுவ ஆயுதங்கள், நிதியுதவி என உக்ரைனுக்கு உதவிக்கரம் நீண்டு வருகிறது. அதேவேளையில், உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 471 உக்ரைன் ராணுவத்தினரையும் ரஷ்யப் படைகள் கைது செய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி உக்ரைன் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் 198 பேர் பலியாகியிருந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உக்ரைனில் இதுவரை … Read more

மத்திய அரசு சார்பில் ‘உடல் ஆரோக்கிய சவால் போட்டி’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலிடம்: சென்னை மாநகரில் அதிக போட்டியாளர்கள் பங்கேற்பு

மத்திய அரசு நடத்திய உடல் ஆரோக்கிய சவால் போட்டியில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலிடம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 75-ம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, உடல் ஆரோக்கியம் சார்ந்த போட்டிகளில் இந்திய அளவில் 75 நகரங்களைச் சார்ந்த தலைவர்கள், பல்வேறு நிறுவனங்களின் முதன்மைசெயல் அலுவலர்கள், ஆணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் இணையதளம் வாயிலாக பதிவு செய்த நபர்களின் நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி … Read more

ஆக்கிரமிப்பில் ஈடுபடாத ஒரே நாடு இந்தியா: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் 98-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவை சக்திவாய்ந்த நாடாகவும் அறிவாற்றல் மிக்கதாகவும் விழுமியங்கள் கொண்டதாகவும் மாற்ற விரும்புகிறோம். வேறு எந்த நாட்டையும் தாக்கி, ஓர் அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்காத உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே. அறிவு மற்றும் அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா ஒரு … Read more

நிலைமை சரியில்லை; எல்லைகளைக் கடக்க முயற்சிக்க வேண்டாம்: உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை

கீவ்: உக்ரைனில் உள்ள இந்தியர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகளின் முறையாக வழிகாட்டுதல் இல்லாமல் எல்லைகளை நோக்கிச் செல்ல வேண்டாம் என கீவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதல் 3வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. தலைநகர் கீவை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்குள்ள ராணுவ தளத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால், ராணுவத் தளத்தை ரஷ்யப் படைகள் நெருங்கவிடமாட்டோம் என்று உக்ரைன் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக களத்தில் உக்ரைன் தனித்துப் … Read more

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்; இன்று மாலை 5 மணி வரை வழங்கல்

சென்னை: தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முன்னதாக, இன்றைய முகாமில் பொதுமக்கள் கட்டாயம் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 27-ம் தேதி (இன்று) காலை 7 மணி முதல் … Read more

உ.பி.யில் இன்று 5-ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்: முக்கியத்துவம் பெற்றுள்ள மூன்று தொகுதிகள்

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி10-ல் தொடங்கிய சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 4 கட்டவாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. 5-ம் கட்ட வாக்குப் பதிவுஇன்று நடைபெறுகிறது. மொத்தம் 685 பேர் போட்டியிடும்5-ம் கட்ட தேர்தலில் முதல்முறையாக அதிக எண்ணிக்கையில் 90 பெண்கள் களத்தில் உள்ளனர். 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் 3 தொகுதிகள் முக்கியத்துவம் பெருகின்றன. இதில் அயோத்தி, பாஜகவுக்கு சவாலுக்குரியதாக உள்ளது. ஏனெனில், இங்குள்ள சர்ச்சைக் குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதாக ஒவ்வொரு தேர்தலிலும் … Read more

’எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல’ – அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஆவேசம்

கீவ்: ரஷ்ய படைகள் நெருங்குவதால் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள் என்ற அமெரிக்காவின் ஆலோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்துவிட்டார். ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால், ‘தலைநகர் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள்’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. ஆனால் ஜெலன்ஸ்கி இந்த ஆலோசனை ஏற்க மறுத்திருக்கிறார். “சண்டை இங்கேதான் நடக்கிறது. எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல” என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார் என்று ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கீவ் நகரிலிருந்து … Read more

மார்ச் 1 – மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள்: இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு

சிவராத்திரியன்று சிவன் கோயில்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை நேற்று வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி திருவிழா, மார்ச் 1-ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.1-ம் தேதி மாலை முதல் 2-ம் தேதிவரை சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் … Read more