தேர்தல் களத்தை சாதி, மத அடிப்படையில் சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது: திருமாவளவன் சிறப்பு பேட்டி

சென்னை: “தேர்தல் களத்தை சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ சந்திப்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. அதுதான் யதார்த்த நிலை” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து: “தேர்தல் களத்தை சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ சந்திப்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. அதுதான் யதார்த்த நிலை. ஆனால், ’அதையே … Read more

ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் நெருக்கடி: கீவ் நகரில் இருந்து தப்பி போலந்து வந்த இந்தியர்கள்

புதுடெல்லி: ஹைதராபாத்தை சேர்ந்த ராகேஷ் வெடகிரே (33) என்பவர் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பிஸினஸ் அனலிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். அங்கிருந்து தப்பியது குறித்து ராகேஷ் கூறியதாவது: கீவ் நகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்பதை அறிந்து கையில் கிடைத்த உடைகள், ஆவணங்கள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு நானும் எனது நண்பர்களும் 4 கார்களில், போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் நகரை நோக்கிப் புறப்பட்டோம். நாங்கள் புறப்பட்டு 3 மணி நேரத்துக்குப் … Read more

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 219 இந்தியர்களுடன் முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது

உக்ரைனில் சிக்கி தவித்த இந்தியர்களில் முதல்கட்டமாக 219 பேர் ருமேனியாவில் இருந்து இந்திய விமானம் கிளம்பியுள்ளது. உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்த போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய ராணுவம் … Read more

ரூ.12,000 கோடி வருவாயினை கடந்த பதிவுத்துறை: அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டு

சென்னை: ரூ.12,000 கோடி வருவாயைக் கடந்த பதிவுத்துறைக்கு, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) ஆகியோருக்கான 2022-ம் ஆண்டுக்கான ஜனவரி மாத பணி சீராய்வு கூட்டம் கடந்த பிப்.25-ம் தேதியன்று, காலை சென்னை … Read more

கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து 19 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் தவிப்பு

புதுடெல்லி: கரோனா தொற்று முதல் மற்றும் 2வது அலைகளின்போது 2020 மார்ச் மாதத்தில் இருந்து அக்டோபர் 2021 வரை இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்தியாவில் கரோனாவால் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று பாதிப்பால் 19.2 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். உலகிலேயே கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் … Read more

ரஷ்ய ராணுவத்தை தடுக்க பாலத்தை தகர்த்து மனித வெடிகுண்டாக சிதறிய உக்ரைன் வீரர்

கீவ்: ரஷ்யாவின் ராணுவ டாங்கியை தடுப்பதற்காக உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் குண்டு வைத்து பாலத்தை தகர்த்து தானும் உயிர் தியாகம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், இதுவரை உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள், 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகருக்கு வெளியே உள்ள மிக … Read more

பிப்ரவரி 26: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,48,568 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.25 வரை பிப்.26 பிப்.25 … Read more

"ஆம்… எனக்கு தீவிரவாதிகள் தொடர்பு உள்ளது" – ஸ்மிருதி இரானி புகாருக்கு பிரியங்கா அதிரடி பதில்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்த புகார் குறித்து கேள்வி கேட்டபோது, ‘ஆம், எனக்கு தீவிரவாதிகள் தொடர்பு உள்ளது’ என அதிரடியாக அவர் கூறிய பதில் தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் அமேதியும் இடம் பெற்றுள்ளது. நேற்றுடன் முடிந்த இதற்கானப் பிரச்சாரத்திற்கு, அமேதி தொகுதி எம்பியும், மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி அமேதி வந்திருந்தார். அப்போது, பிரியங்காவிற்கு தீவிரவாதிகளுடன் … Read more

'இந்தியா இயன்றதை செய்யும்' – உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் நரேந்திர மோடியுடன் போர் சூழல் குறித்து பேசியுள்ளார். இதில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கோரிக்கை வைத்த நிலையில், அவரிடம் இந்தியா இயன்றதை செய்யும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக … Read more

பிப்ரவரி 26: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,48,568 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more