உடன்குடி விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது. ஏன்? – சீமான் பட்டியலிடும் காரணங்கள்

சென்னை: “தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்“ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலைய 2 மற்றும் 3-ஆம் நிலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது … Read more

இபிஎப் செலுத்த தவறினால் நிறுவனங்களே பொறுப்பு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: பணியாளர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிறுவ னங்களின் பங்களிப்போடு செலுத்தப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் மாதத் தவணை செலுத்தத் தவறினால் அதற்கு தொழில் நிறுவனங்கள்தான் பொறுப்பு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாதத் தவணை செலுத்தத் தவறுவது மற்றும் தாமதமாக செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு நிறுவனங்களே பொறுப்பு என்றுநீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அபய் எஸ் ஓகா ஆகியோரடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. நிறுவனம் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.85,548 மற்றும் அத்துடன் செலுத்த … Read more

மக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை நள்ளிரவில் ஏவுகணை மூலம் தாக்கிய ரஷ்யா: உக்ரைன் குற்றச்சாட்டு

கீவ்: உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப்படைகள் நள்ளிரவு நகரில் கீவ் நகரில் மக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்த போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க … Read more

'கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்வு இல்லை' – ஸ்டாலின் மீது எஸ்.பி.வேலுமணி சாடல்

கோவை: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் மோசமாக உள்ளார்” என்று கட்சி நிர்வாகிகளிடையே அதிமுக கொறாடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், எஸ்.பி.வேலுமணி. தலைமையில் கோவை மாநகர், புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.26) நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகளிடையே எஸ்.பி.வேலுமணி பேசியது: “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. ஒரு சிலர் திமுகவுக்கு செல்கின்றனர். … Read more

இந்தியாவில் தொற்று குறைந்ததால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி: ‘‘நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலனை செய்யலாம்’’ என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கரோனா பரவலை தடுக்க அவ்வப்போது வழிகாட்டி நெறிமுறைகளை மத்தியஉள்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும்மார்ச் மாதத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை செயலர் அஜய் பல்லா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கரோனா தொற்று கணிசமாக … Read more

2022 உலகக் கோப்பை கால்பந்து  தகுதிச் சுற்றில் ரஷ்யாவுடன் விளையாட மாட்டோம்: போலந்து

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘2022 உலகக் கோப்பை கால்பந்து’ தகுதிச் சுற்றில், ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பலவற்றின் எதிர்ப்பை மீறி, உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதால், தலைநகர் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் இந்தப் படையெடுப்பை பல நாடுகள் விமர்சித்து வருகின்றனர். ரஷ்யா மீதும், … Read more

தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அதிகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அதிகம். இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவைதான் என்பது பெருமைப்படக்கூடிய ஒன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, கோடம்பாக்கம், மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியின் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய முதல்வர், அந்த கல்லூரி மற்றும் கல்விக் குழுமத்தின் சிறப்புகள் … Read more

’எத்தனை முறை சொன்னீர்கள், படையெடுப்பு இல்லையென்று..!’ – ஐ.நா. கூட்டத்தில் ரஷ்யாவை விளாசிய உக்ரைன்

ஜெனீவா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய உக்ரைன் தூதர் செர்கி கிஸ்லிட்ஸியா, ரஷ்யாவை சரமாரியாக விமர்சித்தார். ரஷ்ய தூதர் நெபன்ஸியாவை நோக்கி, “இதே அரங்கில் எத்தனை முறை படையெடுப்பு இருக்காது என்று பேசியிருப்பீர்கள். ஆனால், இன்று நாஜிப் படைகள் போல் தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகள் மதிப்பற்றவை. நியூயார்க்கில் கிடைக்கும் ப்ரெட்ஸெல் இனிப்பில் இருக்கும் ஓட்டையைவிடவும் மதிப்பற்றது. எங்கள் நாட்டில் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்காக இந்த அரங்கம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன்” என்றார். … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்; நடுநிலை வகித்த இந்தியா: சரியான முடிவா?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக நிபந்தனையின்றி திரும்ப வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஜார்ஜியா, ஜெர்மனி, இத்தாலி, லீசெஸ்டைன், லக்ஸம்பெர்க், நியூசிலாந்து, நார்வே, போலந்து, ருமேனியா, பிரிட்டன் ஆகிய 11 நாடுகள் வாக்களித்தன. ஆனால் 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாடு … Read more

பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அரசு ஆய்வு செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை: “தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும், சம்பந்தப்படட துறைகள் பட்டாசுத் தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்வதையும் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்த ஆண்டு துவக்கத்தில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் உள்ள ஆர்கேவிஎம் பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே … Read more