உ.பி. தேர்தல் களம்: ’அவத்’ பிரதேச தொகுதிகள் அதிமுக்கியத்துவம் பெறுவதன் பின்புலம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அவத் பிரதேசத்தில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள தலைநகர் லக்னோவின் தொகுதிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று (பிப்.23) நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முகலாயர்கள் உள்ளிட்ட மன்னர்களின் ஆட்சியில் இந்த அவத் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. அதேபோல், இந்த காலத்திலும் அவத் பகுதியின் தொகுதிகளில் இருந்து தான் நாட்டின் அதிகமான பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜவஹர்லால் நேரு, … Read more

வீடு, வீடாக சென்று கேக் வழங்கி நன்றி தெரிவித்த தோல்வியடைந்த சுயேச்சை பெண் வேட்பாளர்

வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளர் தனது தோல்வியை கேக் வெட்டி கொண்டாடி, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு வீடு, வீடாகச் சென்று கேக் வழங்கி தனது நன்றியை தெரிவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகளில் திமுக, அதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஒவைசி கட்சி உள்ளிட்ட கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். ஒரு சில வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது உள்ளூர் … Read more

தாவூத் தொடர்பு, பண மோசடி? – மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது பின்னணி

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாகவும், மகாராஷ்டிர சிறுபான்மை விவகார அமைச்சராகவும் இருந்த நவாப் மாலிக் இன்று அமலாக்க துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை முதல் 6 மணிநேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்பட்ட அவர், செய்தியாளர்களைச் சந்தித்ததும் கையை தூக்கி, “நான் இதற்கு தலை வணங்க மாட்டேன். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். அனைவரையும் … Read more

தமிழகம் முழுவதும் பிப்.27-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்.27) 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலியோ சொட்டு மருந்து முகாம் 27.02.20220 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும். தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இம்மையங்களில் 47.36 லட்சம் … Read more

பரஸ்பரம் புகழ்ந்து பேசிய அமித் ஷா, மாயாவிதி: உ.பி.யில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 4 கட்ட தேர்தல்கள் நடந்துவிட்டன. இன்னும் மூன்று கட்ட தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், மாயாவதியை அமித் ஷாவும் பரஸ்பரம் புகழ்ந்து பேசியுள்ளது பல்வேறு ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. முன்னதாக, அமித் ஷா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், “உத்தரப் பிரதேச அரசியலில் மாயாவதியின் முக்கியத்துவம் இன்னும் குன்றிவிடவில்லை” எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அதனைச் சுட்டிக்காட்டி மாயாவதியிடம் … Read more

எதை அழுத்தினாலும் பாஜகவிற்கு விழும் ஓட்டுகள்: லக்கிம்பூர்கேரி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் குளறுபடி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர்கேரி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் குளறுபடி ஆனதால், எதை அழுத்தினாலும் பாஜகவிற்கு ஓட்டுகள் விழுந்துள்ளன. பின்னர், அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நான்காவது கட்ட தேர்தலில் லக்கிம்பூர்கேரியின் தொகுதி வாக்குச்சாவடியில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் பாஜகவிற்கு ஓட்டுகள் விழுந்துள்ளன. இதைக் கண்டுபிடித்து சரிசெய்ததால் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பிப்ரவரி 10-இல் தொடங்கி உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதில், இன்று நான்காவது … Read more

இந்து, முஸ்லிம் சகோதரர்களே… பெற்றோருக்கு நல்லப் பிள்ளையாக இருங்கள், அது போதும்: கொல்லப்பட்ட ஹர்ஷாவின் சகோதரி

பெங்களுரூ: “இந்து, முஸ்லிம் சகோதரர்கள் தங்களது பெற்றோருக்கு நல்லப் பிள்ளைகளாக இருங்கள்; மற்றதெல்லாம் வேண்டாம்“ என்று கர்நாடகாவில் கொல்லப்பட்ட ஹர்ஷாவின் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவின் ஷிமோகாவில் உள்ள சீகேஹ‌ட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆத்திரம் அடைந்த இந்துத்துவ அமைப்பினர் ஷிமோகா, பத்ராவதியில் நடத்திய போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின. அப்பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. … Read more

ஜெயலலிதாவின் சபதத்தை ஏற்று, அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம்: ஓபிஎஸ், இபிஎஸ்

சென்னை: “ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிக்க, அவரது சபதத்தை நாமும் ஏற்போம். அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம்” என்று அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: “அன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு வணக்கம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வும் சாதனைகளும் நம்மை எல்லா நேரங்களிலும் வழிநடத்தும் ஆற்றல் கொண்ட திசைமானி என்றால் அது … Read more

'ஒமைக்ரான் சைலன்ட் கில்லர்… 25 நாட்களாக சிரமப்படுகிறேன்' – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ’ஒமைக்ரான் சத்தமில்லாமல் கொல்லும் கிருமி’ என்று விமர்சித்தார். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங். இவர் உச்ச நீதிமன்ற பார் சங்க தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், கரோனா தொற்று எண்ணிக்கை குறைவதால் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முழு வீச்சில் நேரடி விசாரணைகளைத் தொடங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை … Read more

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: 50 லட்சமாவது பயனாளிக்கு முதல்வர் ஸ்டாலின் மருந்துப் பெட்டகம் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கி, அவருக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23.2.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் … Read more