தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87%… எஞ்சியோர் கவனம்… – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: ‘தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87 விழுக்காடாக உள்ளது. எஞ்சிய 13 விழுக்காடு மக்கள் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும்‘ என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ” கரோனா தொற்று கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை முறைகளை படிப்படியாக மாற்றுவதற்காக , பொது சுகாதார இயக்குநர் மற்றும் வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து வருகிறோம். முதலில் நோய்த் … Read more

7 மாநிலங்களில் 14 பெண்களை மணந்தவர் கைது: ஒடிசா போலீஸ் வலையில் சிக்கியதன் பின்னணி

புவனேஸ்வர்: ஒடிசாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 48 ஆண்டுகளில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. கடைசியாக அவர் திருமணம் செய்த பெண் அந்த நபரின் தில்லுமுல்லு போக்கை அறிந்து போலீஸில் புகார் கூற, போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். ஒடிசா மாநிலம் கேந்தரப்பா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு இப்போது வயது 60-ஐ கடந்துள்ளது. அவருடைய திருமண நாடகங்கள் குறித்து ஒடிசா போலீஸார் கூறியது: ‘காமேஷ் சந்திர … Read more

2021-க்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு டேவிட் அட்டன்பரோ, போப் பெயர்கள் பரிசீலனை

ஆஸ்லோ: கடந்த 2021 ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் தேர்வுக் குழு ஈடுபட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரிட்டனைச் சேர்ந்த இயற்கை வரலாற்றாளர் டேவிட் அட்டன்பரோ, உலக சுகாதார அமைப்பு,பெலாரஸின் மனித உரிமை ஆர்வலரும் 2020-ல் பெலாரஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான ஸ்வியட்லானா சிகானூஸ்கயா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கத்தோலிக்க தேவாலயங்களின் தந்தை போப் பிரான்சிஸ், மியான்மர் தேசிய … Read more

சர்வதேச தினத்தை முன்னிட்டு வலிப்பு நோய் விழிப்புணர்வு: நோயாளிகளை கையாள்வது குறித்து விளக்கம்

சென்னை: சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஒருவருக்கு வலிப்புவந்தால் சாவி, இரும்பு பொருட்களை அவரிடம் கொடுக்கக்கூடாது. நினைவு திரும்பும் வரைதண்ணீர் தரக்கூடாது என்று கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனை டீன் சாந்திமலர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: வலிப்பு நோய் என்பது மூளையில்ஏற்படும் பாதிப்பால் வருகிறது. இது தொற்று நோய் அல்ல. வலிப்புநோய் மனவியாதி அல்ல. வலிப்புக்கான மாத்திரை, … Read more

உஜ்ஜைனியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிப்பு

உஜ்ஜைனி: மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பட்நகர் தாலுகா, கல்மோரா என்ற கிராமத்தில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. மாநில தொல்பொருள் ஆய்வுத் துறை சார்பில் டாக்டர் விஷ்ணு தர் வாகன்கர் ஆராய்ச்சி நிலையம் இந்த அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலின் எஞ்சிய பகுதிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வு அதிகாரி டாக்டர் துருவேந்திர ஜோதா கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நில அளவைப்பணியின்போது … Read more

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு; ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை சீனா ஆதரிப்பதை ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் தலைவர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வரும் … Read more

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – 54 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதன்படி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான முறையான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஸ்வீட் செல்பி ஹெச்டி, பியூட்டி கேமிரா, மியூசிக் பிளேயர், மியூசிக் பிளஸ், வால்யூம் பூஸ்டர், வீடியோ பிளேயர்ஸ் மீடியா, விவா வீடியோ எடிட்டர், … Read more

கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.88 கோடி வாடகை வசூல்: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களில்வசிப்பவர்களிடம் ரூ.88 கோடிவாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதில் குறிப்பாக கோயில் திருப்பணி, திருத்தேர், அடிப்படை வசதிகள் மேம்பாடு, பணியாளர்கள் நலத்திட்ட உதவி கள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்புஉள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வாடகை … Read more

வகுப்புவாத பாடல், மதச்சார்பற்ற இசையுடன் வாக்குகளை கொள்ளை அடிக்கும் அரசியல் கட்சிகள்: மத்திய அமைச்சர் நக்வி குற்றச்சாட்டு

ராம்பூர்: வகுப்புவாத பாடல்களுடன் கூடிய மதச்சார்பற்ற இசையை இசைத்து எதிர்க்கட்சிகள் வாக்குகளை கொள்ளை அடிக்கின்றன என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார். உத்தரபிரதேசத்தில் நேற்று நடைபெற்ற 2-வது கட்ட வாக்குப்பதிவில் ராம்பூரிலுள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் தனது வாக்கைச் செலுத்தினார். வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: உ.பி.யில் கடந்த 5 ஆண்டுகளில் பல நல்ல திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக … Read more

தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு: ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: “தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்“ என அமெரிக்க ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத் தெரிவித்துள்ளார். உலகளவில் மிக அதிகமான கரோனா நோயாளிகளையும், கரோனா உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது அமெரிக்கா. ஆனால், அங்கு இன்னும் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கலகம் செய்து கொண்டிருக்கின்றனர். ராணுவத்திலும் ஒரு குறிப்பிட்ட சாரார் தடுப்பூசி போடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத், “ராணுவத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களால் படைகளின் மற்ற வீரர்களுக்கு அச்சுறுத்தல். படைகளை எப்போதும் தயார்நிலையில் … Read more