தமிழகம் வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்ப்பது அவசியம்: யூஜிசி முன்னாள் தலைவர் கருத்து

சென்னை: ‘தமிழகம் வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்க்க வேண்டியது அவசியம்’ என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) முன்னாள் தலைவர் சுகதியோ தோரட் வலியுறுத்தியுள்ளார். நுழைவுத் தேர்வுகளின் தாக்கம் குறித்து சமூக பொருளாதார சமுத்துவத்துக்கான கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இணையவழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசும்போது, “மருத்துவக் கல்விக்கான நீட் (National Eligibility-cum Entrance Test NEET) நுழைவுத் தேர்வை தமிழகம் வழியில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்க … Read more

காவிரி படுகையில் 6 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சேதம்; இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை: காவிரி படுகையில் 6 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சேதம் ஏற்பட்டதற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பருவம் தவறி பெய்த மழையால், 6 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. சம்பா சாகுபடி தொடங்கிய நாளில் … Read more

காங்கிரஸை அழிக்க ராகுல், பிரியங்கா மட்டுமே போதும்: யோகி ஆதித்யநாத் கிண்டல்

லக்னோ: காங்கிரஸை அழிக்க ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா மட்டுமே போதும் என்று கிண்டல் செய்துள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். 403 தொகுதிகளைக் கொண்டஉத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா,படாவுன், பரெய்லி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி … Read more

ஆளுநர்களின் நடவடிக்கை குறித்து விவாதிக்க விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் சந்திப்பு: டெல்லிக்கு வெளியில் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: ஆளுநர்களின் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க, பாஜக அல்லாத எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் சந்திப்புக் கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியில் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முடித்துவைத்து, அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவித்திருந்தார். ஆளுநரின் முடிவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு, மேற்கு வங்க முதல்வரின் கோரிக்கைபடிதான் சட்டப்பேரவைக் கூட்டம் முடித்து வைக்கப்பட்டதாக ஆளுநர் பதில் அளித்திருந்தார். மம்தா பானர்ஜி ஆதங்கம் இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

ஆப் லாக், ப்யூட்டி கேமரா உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: ஆப் லாக், ப்யூட்டி கேமரா, விவா வீடியோ எடிட்டர் உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா 59 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை விதித்தது. அவற்றில் டிக்டாக், வீசேட், ஹெலோ உள்ளிட்ட இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான செயலிகள் இருந்தன. நாட்டின் இறையான்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்த செயலிகளுக்கு தடை விதித்ததாக அரசு தெரிவித்தது. இந்தியா – சீனா எல்லையில் … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 இன்று விண்ணில் பாய்கிறது: 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் தொடங்கியது

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மணி30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களை தயாரித்து அவற்றின் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அண்மைக்காலமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகஎண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வந்தன. ஆனால், கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக கடந்த ஆண்டு செயற்கைக்கோள் ஏவும் பணியில் … Read more

பஞ்சாபில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கணவர் அமரீந்தர் சிங் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் காங். எம்.பி.

பாட்டியாலா: பஞ்சாபில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அமரீந்தர் சிங்கின் கட்சிக்கு காங்கிரஸ் எம்.பி.யும், அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரணீத் கவுர் வாக்கு சேகரித்து வருகிறார். பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் உட்கட்சி பூசல்காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினார். பின்னர் காங்கிரஸிலிருந்தும் விலகிய அவர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். தற்போது நடைபெறும் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து களம் காண்கிறது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி. அமரீந்தர் சிங்கின் … Read more

கரோனா காலத்தில் ‘கனவுக்கோட்டை’யின் கள நிலவரம்; தியேட்டர்காரங்க நியாயமா நடக்கறதில்ல! – ஓர் அலசல்

கரோனாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சினிமா. கோடிகளைக் கொட்டிகோடிகளை அள்ளும் கனவுக் கோட்டை, கரோனாவால் குற்றுயிரும் குலைஉயிருமானது யாரும் எதிர்பார்க்காதது. கரோனாவுக்கு பிறகு சினிமா, சினிமா வியாபாரம் எப்படி இருக்கிறது? தயாரிப்பாளர் கே.ராஜனிடம் கேட்டோம். கரோனா பாதிப்பில் இருந்து தமிழ் சினிமாஇன்னும் மீளவே இல்லை. பொங்கலுக்கு 18 படங்கள் வரை ரிலீஸ் ஆச்சு. எந்த படத்துக்கும் 20 பேர் கூட வரலை. ஆனா, ‘மாநாடு’ வசூல் மகிழ்ச்சி அளித்துள்ளது. ’மாநாடு’ தயாரிப்பாளர்கூட, விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கலைன்னு … Read more

நாடு முழுவதும் காவல் துறையை நவீனப்படுத்த ரூ.26,275 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2025-26-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.26,275 கோடியை செலவிடவுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வழங்கியுள்ளது. இந்தத் தொகையானது ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், புதிதாக பட்டாலியன்களை உருவாக்குதல், அதிநவீன ஃபாரன்சிக் (தடய அறிவியல்) ஆய்வகங்கள் உருவாக்குதல், இதர காவல் துறை கருவிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு செலவிடப்படும். … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்; எந்த மாநிலத்திலும் எந்த நேரத்திலும் தேர்தல் நடக்கலாம்: அண்ணாமலை

கோவை: தேர்தல் முடிந்ததும் நீட் பிரச்சினையை மறந்து திமுகவினர் தூங்கிவிடுவார்கள், அடுத்த தேர்தலில் கையில் எடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை மாநகராட்சியின் 28-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் உண்ணாமலையை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை இன்று (ஜன.13) பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கும், திமுகவுக்கும் நேரடி கருத்து மோதல் உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் 80 சதவீதம் பாஜகவை தாக்கிதான் … Read more