அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது சமூக அநீதி: கி.வீரமணி காட்டம்

சென்னை: “உயர் மருத்துவப் படிப்புத் தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக உயர் மருத்துவப் படிப்பில் சேர்க்கைக்கான கலந்தாய்வை மேற்கொண்டது எப்படி?” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் (super speciality – DM/Mch) அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் … Read more

ஹிஜாப் விவகாரம் | 'எங்கள் மகள்களின் போன் நம்பரை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர்' – பெற்றோர் புகார்

பெங்களூரு: ஹிஜாப் போராட்டத்தை முன்னெடுத்த கர்நாடக மாணவிகளின் தனிப்பட்ட செல்போன் எண்களை பொதுவெளியில் சிலர் வெளியிட்டுள்ளதாகக் கூறி, அம்மாணவிகளின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். உடுப்பி மாவட்ட காவல் கண்காளிப்பர் என்.விஷ்ணுவர்த்தனை சந்தித்த மாணவிகளின் பெற்றோர், ”எங்கள் பிள்ளைகளின் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் வெளியிட்டுள்ளனர். இதனை சிலர் தவறாகப் பயன்படுத்தலாம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர். இந்தப் புகார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறிய காவல் துறை, உரிய … Read more

டிக் டாக் செயலியை வாங்கும் திட்டமுள்ளதா? – சுந்தர் பிச்சை பதில்

டிக் டாக் செயலியை வாங்கும் திட்டம் கூகுளுக்கு இல்லை என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். டிக்டாக் செயலியை அமெரிக்காவில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 கோடி. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் அடுத்த 90 நாட்களில் டிக்டாக்கின் அமெரிக்க பிரிவை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றுவிட வேண்டும், அப்படி விற்கப்பட்டால் தொடர்ந்து இயங்கலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பைட் டான்ஸ் … Read more

கரோனாவால் மாறும் தைராய்டு அளவு: அடிக்கடி கண் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: தைராய்டு ஹார்மோன் பிரச்சினை இருப்போர் அடிக்கடி தங்களின் கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என டாட்கர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் வலியுறுத்தினர். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் அகர்வால் இது குறித்து கூறுகையில், “பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களின் கண்களை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். அதேபோல், தைராய்டு பிரச்சினை உள்ளோரும் தங்களின் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும். தைராய்டு பாதித்தவர்கள் இதை அசட்டை செய்தால் தீவிர கண் பார்வை … Read more

’காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போல் உ.பி. மாறினால்…’ – யோகிக்கு பதிலடிகளுடன் அணிவகுத்த தலைவர்கள்

’காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போல உத்தரப் பிரதேச மாறிவிடும்’ என்று பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா எனப் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில மக்களுக்கு வீடியோ மூலம் வாக்கு சேகரித்தார். அப்போது, “கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக அரசு, உங்கள் நம்பிக்கையை மனதில் வைத்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, அர்ப்பணிப்புடன் … Read more

உலக வரலாற்றில் 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய முதல் நபரானார் அமேசான் நிறுவனர்

உலகிலேயே 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துக்களை வைத்திருக்கும் முதல் நபராக அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெஸோஸ் உருவெடுத்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் பெஸோசின் சொத்து மதிப்பு 4.9 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 200 பில்லியன் டாலர்களைக் கடந்தது. அமேசான் தவிர பெஸோஸ் வசம் ப்ளூ ஆரிஜின் என்கிற விண்வெளி ஆய்வு கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனமும், வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையும் உள்ளன. இன்னும் சில தனியார் முதலீடுகளையும் … Read more

கீழடி 8-ம் கட்ட அகழாய்வினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் கீழடியின் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015ம் ஆண்டு 3 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 4 ஆம் கட்ட அகழாய்வில் இருந்து இது வரை 18,000-க்கும் அதிகமான பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் … Read more

இந்தியாவில் புதிதாக 58,077 பேருக்கு கரோனா: நாட்டில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 171.79 கோடியாக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 58,077 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 3.89% என்றளவில் சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற … Read more

13 அடி நீள மேசை.. தடுப்பூசி செலுத்த மறுத்த பிரான்ஸ் அதிபருக்கு கெடுபிடி காட்டிய ரஷ்யா 

மாஸ்கோ: உக்ரைன் விவகாரம் உச்சமடைந்துள்ள நிலையில் ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியாக சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடுமையான கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆம் தேதி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இருவரும் மிக நீண்ட மேசைக்கு எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர். அந்த மேசையின் நீளம் 13 அடி எனத் தெரிகிறது. ரஷ்யா விதித்த கரோனா … Read more

குழப்பும் ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம்: கடுமையாகச் சாடும் நெட்டிசன்கள்

ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம் குழப்பமாக இருப்பதாகக் கடுமையாகச் சாடியிருக்கும் பயனர்கள், இந்தத் தோற்றத்தை நிரந்தரமாக அமல் செய்தால் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவோம் என்றும் கூறியுள்ளனர். மேலே நீல நிற நேவிகேஷன் பார் (navigation bar) இருக்கும் ஃபேஸ்புக்கின் இப்போதைய தோற்றம் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து மாறவுள்ளது. கணினிகளில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்குக் கடந்த சில மாதங்களாகவே புதிய தோற்றம் எப்படி இருக்கும் என்பதன் முன்னோட்டம் காட்டப்பட்டு வருகிறது. புதிய தோற்றத்துக்கு மாற்றி விட்டு மீண்டும் இப்போதுள்ள தோற்றத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். … Read more