உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை யுடன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை களுக்கு பிப்.10-ம் தேதி (இன்று) முதல் மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் … Read more

இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யும் நோக்கியா

இந்தியாவில் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் நோக்கியாவின் புதிய மாடல் ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. நோக்கியா நிறுவனத்தின் தொலைக்காட்சிப் பெட்டித் தயாரிப்புகள் கடந்த ஆண்டு முதன் முதலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்தன. 43 மற்றும் 65 இன்ச் மாடல்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஆண்ட்ராய்ட் இடைமுகம் கொண்டவை. தற்போது அறிமுகமாகவுள்ள புதிய தொலைக்காட்சிப் பெட்டிகள் 32 இன்ச் மற்றும் 50 இன்ச் ஆகிய இரு மாடல்களில் … Read more

தமிழகத்தில் இன்று 3,971 பேருக்குக் கரோனா: சென்னையில் 742 பேருக்கு பாதிப்பு; 16,473 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,24,476. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,44,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,09,032. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,55,771 பேர் வந்துள்ளனர். சென்னையில் 742 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

சென்னையில் எரிபொருள் பேட்டரி தானியங்கி உற்பத்தி மையம்: நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர் கூறியதாவது: நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான அரசாணையை 16 செப்டம்பர் 2016-லேயே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின் நான்காவது இணைப்பில் சிஎன்ஜியுடன் 18% … Read more

இந்தியாவில் ட்ரூகாலர் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15 கோடி

ட்ரூகாலர் செயலியை இந்தியாவில் தினமும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15 கோடி என்றும், மாதந்தோறும் கிட்டத்தட்ட 18.5 கோடி பேர் பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள ட்ரூகாலர் நிறுவனம் பெங்களூரு, கூர்கான், மும்பை மற்றும் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி உள்ளிட்ட நகரங்களில் கிளை அலுவலகங்கள் வைத்துள்ளது. மொபைலில் வரும் அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ட்ரூகாலர் செயலி உதவுகிறது. மோசடி செய்திகள், அழைப்புகளைக் கண்டறிய ட்ரூகாலர் துணை … Read more

பிப்ரவரி 9: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,24,476 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

கேரளாவில் காதலர் தினத்தன்று கரம்கோக்கும் திருநர் – திருநங்கை இணை – திருமணப் பதிவில் இது ஸ்பெஷல்!

கேரளாவில் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தைச் சேர்ந்த சியாமா – மனு இணை, காதலர் தினத்தன்று திருநர் – திருநங்கை அடையாளங்களுடன் தங்கள் திருமணத்தை பதிவுச் செய்யவுள்ளனர். எல்ஜிபிடிக்யூ+ மீதான பொதுப் பார்வை சமீப ஆண்டுகளாகவே மாறியுள்ளது. குறிப்பாக இதுகுறித்த விவாதம் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வருவதால், இதனால் உருவான நேர்மறை விளைவுகள் சமூகம், சட்டம், குடும்ப ரீதியாகவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்தான் கேரளாவில் திருநர் மனு, திருநங்கை சியாமா இடையே காதலர் தினத்தன்று நடக்கும் திருமணம் கவனம் … Read more

'ஒழுக்கமற்ற, அநாகரிக உள்ளடக்கம்'- டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை

ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறி, சீனாவைச் சேர்ந்த டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறும்போது, ”வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ளும் செயலியான டிக்டாக் மீது சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடம் இருந்து புகார் வந்தது. வீடியோக்களில் ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கம் இருப்பதாகப் புகார் கூறப்படுகிறது. இதனால் டிக்டாக் செயலிக்குப் பாகிஸ்தானில் தடை விதிக்கப்படுகிறது. முறையற்ற உள்ளடக்கங்களை டிக்டாக் சரிசெய்து கொள்ளும் விதத்தில் திருப்தி ஏற்படுமானால், தடையை விலக்கிக் கொள்வது … Read more

"நாங்கள் மதம், சாதியை வைத்து அரசியல் செய்யவில்லை" – தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

“ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் பணி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மதத்தை வைத்தோ, சாதியை வைத்தோ அரசியல் செய்யவில்லை” என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் உரையாற்றினார். அரசின் திட்டங்களை அடுக்கிய அவர், “இந்த ஆட்சி மலர்ந்த இந்த … Read more

ஹிஜாப் விவகாரம்: மாணவ சமூகத்தையே கூறுபோடும் வெறுப்பரசியல் – மக்களவையில் சு.வெங்கடேசன் ஆவேசம்

புதுடெல்லி: “ஹிஜாப் அணிவதை முன்வைத்து கர்நாடகாவில் நடைபெறும் வெறுப்பரசியல் மாணவ சமூகத்தினையே கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது” என்று மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசமாக பேசினார். மக்களவையில் இன்று பேசிய அவர், “ஜனவரி 15 ஆம் தேதி தமிழகத்தில் தனியார் தொடைகாட்சியில் சிறார் நிகழ்சி ஒன்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சி பிரதமரின் மாண்பை குறைத்துவிட்டது என்று சொல்லி மத்திய இணை அமைச்சர் அவரே முன்வந்து புகாரினை கேட்டு வாங்கி அமைச்சகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்புகிறார். இன்று … Read more