அமெரிக்காவில் தடை உத்தரவை எதிர்க்கும் டிக் டாக்

சர்வதேச அளவில் டிக் டாக்கைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 70 கோடி என்றும், இதில் 10 கோடி பேர் அமெரிக்கப் பயனர்கள் என்றும் டிக் டாக் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் டிக் டாக்கைத் தடை செய்யும் ட்ரம்ப்பின் உத்தரவை எதிர்த்து டிக் டாக் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் தங்களது சுய விவரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளது. 70 கோடி என்ற இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருக்கும். ஏனென்றால், இது ஜூலை மாதம் வரையிலான கணக்கு … Read more

கோபாலபுரம் ஸ்டைலை பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர்: அண்ணாமலை தாக்கு

விழுப்புரம்: ”கோபாலபுரம் ஸ்டைலை தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர்” என்று விழுப்புரம் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: “குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்தும், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் இல்லை. ஒவ்வொரு தேர்தலில் பெரிய கட்சி, பெரிய கட்சி என வாக்களித்து வாய்ப்பளித்தும் எவ்வித முன்னேற்றமும் … Read more

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினை ஆக்காதீர்: அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஹிஜாப் வழக்கு தொடர்பாக நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. … Read more

ஃபேஸ்புக் நியூஸ் மூலம் செய்தி நிறுவனங்களுக்குப் பணம்: ஃபேஸ்புக் திட்டம்

ஃபேஸ்புக் நியூஸ் வழியாக, செய்திகளைப் பிரசுரிக்கும் நிறுவனங்களுக்கு விரைவில் பணம் செலுத்தவுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்காவில் அறிமுகமான ஃபேஸ்புக் நியூஸ், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அடுத்த ஒரு வருடத்துக்குள் அறிமுகமாகவுள்ளது. இதுகுறித்துப் பேசியிருக்கும் ஃபேஸ்புக்கின் சர்வதேச செய்திப் பிரிவு துணைத் தலைவர் கேம்ப்பல் பிரவுன், “செய்தியின் முறைகளும், அதைப் படிக்கும் வாசகர்களின் பழக்கமும் ஒவ்வொரு தேசத்துக்கும் மாறும். எனவே ஒவ்வொரு தேசத்தின் செய்தி நிறுவனங்களுடனும் நாங்கள் இணைந்து … Read more

அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது சமூக அநீதி: கி.வீரமணி காட்டம்

சென்னை: “உயர் மருத்துவப் படிப்புத் தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக உயர் மருத்துவப் படிப்பில் சேர்க்கைக்கான கலந்தாய்வை மேற்கொண்டது எப்படி?” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் (super speciality – DM/Mch) அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் … Read more

ஹிஜாப் விவகாரம் | 'எங்கள் மகள்களின் போன் நம்பரை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர்' – பெற்றோர் புகார்

பெங்களூரு: ஹிஜாப் போராட்டத்தை முன்னெடுத்த கர்நாடக மாணவிகளின் தனிப்பட்ட செல்போன் எண்களை பொதுவெளியில் சிலர் வெளியிட்டுள்ளதாகக் கூறி, அம்மாணவிகளின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். உடுப்பி மாவட்ட காவல் கண்காளிப்பர் என்.விஷ்ணுவர்த்தனை சந்தித்த மாணவிகளின் பெற்றோர், ”எங்கள் பிள்ளைகளின் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் வெளியிட்டுள்ளனர். இதனை சிலர் தவறாகப் பயன்படுத்தலாம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர். இந்தப் புகார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறிய காவல் துறை, உரிய … Read more

டிக் டாக் செயலியை வாங்கும் திட்டமுள்ளதா? – சுந்தர் பிச்சை பதில்

டிக் டாக் செயலியை வாங்கும் திட்டம் கூகுளுக்கு இல்லை என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். டிக்டாக் செயலியை அமெரிக்காவில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 கோடி. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் அடுத்த 90 நாட்களில் டிக்டாக்கின் அமெரிக்க பிரிவை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றுவிட வேண்டும், அப்படி விற்கப்பட்டால் தொடர்ந்து இயங்கலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பைட் டான்ஸ் … Read more

கரோனாவால் மாறும் தைராய்டு அளவு: அடிக்கடி கண் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: தைராய்டு ஹார்மோன் பிரச்சினை இருப்போர் அடிக்கடி தங்களின் கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என டாட்கர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் வலியுறுத்தினர். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் அகர்வால் இது குறித்து கூறுகையில், “பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களின் கண்களை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். அதேபோல், தைராய்டு பிரச்சினை உள்ளோரும் தங்களின் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும். தைராய்டு பாதித்தவர்கள் இதை அசட்டை செய்தால் தீவிர கண் பார்வை … Read more

’காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போல் உ.பி. மாறினால்…’ – யோகிக்கு பதிலடிகளுடன் அணிவகுத்த தலைவர்கள்

’காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போல உத்தரப் பிரதேச மாறிவிடும்’ என்று பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா எனப் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில மக்களுக்கு வீடியோ மூலம் வாக்கு சேகரித்தார். அப்போது, “கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக அரசு, உங்கள் நம்பிக்கையை மனதில் வைத்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, அர்ப்பணிப்புடன் … Read more

உலக வரலாற்றில் 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய முதல் நபரானார் அமேசான் நிறுவனர்

உலகிலேயே 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துக்களை வைத்திருக்கும் முதல் நபராக அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெஸோஸ் உருவெடுத்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் பெஸோசின் சொத்து மதிப்பு 4.9 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 200 பில்லியன் டாலர்களைக் கடந்தது. அமேசான் தவிர பெஸோஸ் வசம் ப்ளூ ஆரிஜின் என்கிற விண்வெளி ஆய்வு கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனமும், வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையும் உள்ளன. இன்னும் சில தனியார் முதலீடுகளையும் … Read more