கரோனா தடுப்பூசி குறித்த தவறான வீடியோக்கள் நீக்கப்படும்: யூடியூப் அறிவிப்பு

கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் நீக்கப்படும் என்று யூடியூப் அறிவித்துள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகளை வழங்கும் வீடியோக்கள் இனி இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூடியூப் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ”உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அல்லது உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுக்கு எதிராக இருக்கும் அல்லது தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் தடை செய்யப்படும். அதேபோல கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை அளிக்கும் … Read more

நெருங்கி வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சுவர் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சுவர்களில் தேர்தல் விளம்பரம் மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகளை வைத்தல், கொடிகளை நாட்டுதல், சின்னங்களை வரைதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது. இதுதொடர்பான வரைமுறைகளை … Read more

ட்ரெக்கிங் சென்றபோது விபரீதம்: மலைச்சரிவில் 40 மணி நேரம் சிக்கித் தவித்த கேரள இளைஞரை ராணுவம் மீட்டது

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் நண்பர்களுடன் ட்ரெக்கிங் சென்ற இளைஞர் மலைச்சரிவில் இருந்த சிறிய இடுக்கில் சிக்கிக் கொள்ள இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவரை ராணுவம் மீட்டுள்ளது. ஆர்.பாபு (23) என்ற இளைஞரும் அவரது இரண்டு நண்பர்களும் திங்கள்கிழமையன்று மலப்புரத்தில் உள்ள செராட் மலைக்கு ட்ரெக்கிங் சென்றனர். மலை உச்சிக்கு அவர்கள் மூவரும் பயணித்தனர். மற்ற இருவரும் இடையிலேயே பின்தங்கிவிட பாபு மட்டும் உச்சிக்குச் சென்றார். ஆனால், அங்கிருந்து அவர் கால் இடரி கீழே … Read more

4ஜி வசதி கொண்ட நோக்கியாவின் 2 அடிப்படை மாடல் மொபைல்கள் அறிமுகம்

அடிப்படை வசதிகள் கொண்ட இரண்டு புதிய மொபைல்களை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 215 மற்றும் 225 என இந்த இரண்டு மாடல்களிலும் 4ஜி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23 ஆம் தேதி முதல் இந்த மொபைல்கள் இணையத்தில் விற்பனைக்கு வருகின்றன. நவம்பர் 6 முதல் சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும். நோக்கியா 215ன் விலை ரூ.2,949. 225 மாடலின் விலை ரூ.3,499. குறைந்த விலையில் 4ஜி இணைப்புடன், தேவையான நவீன வசதியுடன் இந்த மொபைல்கள் … Read more

ஹிஜாப் விவகாரம்: பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது- கமல்ஹாசன்

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற கர்நாடக மாநில அரசின் உத்தரவு ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்திலமான தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினார். இதனிடையே, மாணவிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு … Read more

'முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை இந்தியத் தலைவர்கள் நிறுத்த வேண்டும்': ஹிஜாப் விவகாரத்தில் மலாலா கருத்து

முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை இந்தியத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என பெண் கல்வி செயற்பாட்டாளரான மலாலா யூசுப்சாயி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை … Read more

ஒமைக்ரான் பரவலுக்குப் பின் 5 லட்சம் உயிரிழப்புகள் பதிவு: உலக சுகாதார நிறுவனம் கவலை

ஜெனீவா: ஒமைக்ரான் பரவலுக்குப் பின் உலகம் முழுவதும் அரை மில்லியன் அதாவது 5 லட்சம் உயிர்ப்பலி பதிவாகியுள்ளது. நிலைமை இப்படியிருக்க ஒமைக்ரானை மிதமானது என்று எப்படிக் கூற முடியும் என கவலை தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். அந்த அமைப்பின், பெருந்தொற்று இறப்புகள் தொடர்பான மேலாளர் அப்டி முகமது கூறுகையில், “கடந்த நவம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய ஒமைக்ரான் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. … Read more

மூன்றாம் காலாண்டில் அதிகரித்த மொபைல் விற்பனை: முதலிடத்தில் ஸியோமி நிறுவனம்

இந்தியாவில் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு காலாண்டில் இந்த எண்ணிக்கையில் மொபைல்கள் விற்பது இதுவே முதல் முறை. கடந்த வருடம் இதே காலகட்டத்தை விட 8 சதவீதம் அதிகமாக தற்போது விற்கப்பட்டுள்ளது. இதில் ஸியோமி நிறுவனமே சந்தையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 1.31 கோடி மொபைல்களை விற்று 26.1 என்ற அளவு சந்தையில் தனது இருப்பைப் பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் சாம்சங் நிறுவனம் உள்ளது. மொத்தம் 1.02 கோடி மொபைல்களை விற்றுள்ளது. … Read more

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு இன்று தொடக்கம்: ஆங்கில பாடத் தேர்வு தேதி மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு இன்று (பிப்.9) தொடங்குகிறது. கரோனா பரவல் காரணமாகதமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. சில மாதங்களே வகுப்புகள் நடந்தன. இதனால், மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு பதிலாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, திருப்புதல் தேர்வு இன்று (பிப்.9) தொடங்கி 16-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்காக தேர்வுத் துறை மூலம் மாநிலஅளவில் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்பட … Read more

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், டி நிறுவனம் மீது 'உபா' சட்டத்தின் கீழ் என்ஐஏ வழக்கு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி-கம்பெனி மீது உபா சட்டம் என்று அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ்என்ஐஏ வழக்கு பதிவு செய் துள்ளது. நிழல் உலக தாதாவும் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிழல் உலக நிறுவனம் டி-கம்பெனி என அழைக்கப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் இப்ராஹிம் … Read more