தமிழகத்தில் 1967-க்கு பின் காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை – ராகுல் பேச்சுக்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி ‘1967-க்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை’ என்று தெரிவித்ததுடன், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். கடந்த மாதம் 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையோடு அவை … Read more

100 கோடி பயனர்களைத் தாண்டிய ஐஃபோன்: வருவாயிலும் புதிய சாதனை

சர்வதேச அளவில் ஐஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடி என்கிற எண்ணிக்கையைத் தாண்டியதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பார் காலாண்டு முடிவில் ஐஃபோன் மூலம் அந்நிறுவனம் 65.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாகப் பெற்று சாதனை படைத்தது. இது கடந்த வருடத்தை விட 17 சதவீதம் அதிகமாகும். தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஐஃபோன்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். “டிசம்பர் காலாண்டில் விற்பனையில் 165 கோடி … Read more

தமிழகத்தில் இன்று 5,104 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: சென்னையில் 839 பேருக்கு பாதிப்பு; 21,027 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 5,104 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,15,986. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,43,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,72,322 Source link

மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு தலைவலியாகும் ஜாட் அரசியல்: அமித் ஷா முயற்சி வெல்லுமா?

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் 2 கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்கு மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் ஜாட் சமூகத்தினர் இந்த முறை பாஜக மீது அதிருப்தியில் உள்ள நிலையில், அவர்களை ஈர்க்க கட்சித் தலைமை பகீரத பிரயத்தனம் செய்கிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப் … Read more

வாட்ஸ் அப் கணக்கை கணிணியில் இணைக்க கூடுதல் பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

வாட்ஸ் அப் கணக்குகளை கணிணி மூலம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கணிணியோடு தங்கள் வாட்ஸ் அப் கணக்கை இணைக்கும் பயனர்களுக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இனி வாட்ஸ் அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பில் உங்களது கணக்கை இணைக்க, க்யூ ஆர் கோட் (QR code) ஸ்கேன் செய்வதற்கு முன்னர், முகத்தையோ, விரல் ரேகையையோ அடையாளமாக வைத்து மொபைலை அன்லாக் செய்ய வேண்டும். இப்படி இணைக்கப்பட்ட பிறகு யார் கணிணியில் அந்தக் கணக்கை … Read more

குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி ரகம் உற்பத்தி நிறுத்தம்: தினமும் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு; 50,000+ பேர் வேலையிழப்பு

நாமக்கல்: குமாரபாளையத்தில் பட்டு ஜவுளி ரக உற்பத்தி நிறத்தத்தால் நாள்தோறும் நடைபெறும் ரூ.5 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்ட்டுள்ளதுடன், 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என குமாரபாளையம் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன் தெரிவித்தார். குமாரபாளையத்தில் 3,000 மேற்பட்ட கைத்தறிக் கூடங்கள் உள்ளன. இங்கு கைத்தறி ஆடை மற்றும் பட்டு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நேர்த்தியான முறையில் பட்டு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் இவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு … Read more

ஹிஜாப் விவகாரம் | கர்நாடகாவில் காவித் துண்டுக்கு எதிராக நீலத் துண்டுடன் கோஷம் எழுப்பிய மாணவர்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் காவித் துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தலித் மாணவர்கள் நீல நிறத் துண்டை அணிந்து ‘ஜெய் பீம்’ கோஷம் எழுப்பினர். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்த ஆஸ்திரேலியா

கான்பரா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளை அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. கரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. இதற்காக ராணுவத்தையும் அரசு பயன்படுத்தியது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் வரும் பிப்ரவரி … Read more

இனி வாட்ஸ் அப் உரையாடல்களை டெலிகிராமிலும் மாற்றிக் கொள்ளலாம்

வாட்ஸ் அப் உரையாடல் பதிவுகளை டெலிகிராம் செயலியிலும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிய தனியுரிமைக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் பாதுகாப்பு குறித்து பல பயனர்களிடையே கேள்வியெழுந்தது. இதனால் வாட்ஸ் அப்புக்கு மாற்றாக இருக்கும் மற்ற உரையாடல் செயலிகளை மக்கள் நாட ஆரம்பித்தனர். இதில் டெலிகிராமும் ஒரு செயலி. கிட்டத்தட்ட 52.5 கோடி பேர் டெலிகிராமை தற்போது பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப்பில் உரையாடிவிட்டு, புதிதாக டெலிகிராமில் உரையாட ஆரம்பிக்கும்போது பழைய … Read more

கணினித் தமிழ் விருதுக்கு பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 28 வரை கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ‘முதலமைச்சர் கணினித் … Read more