இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் புதிய ஆடியோ அம்சங்கள்; பயனர்களிடையே வரவேற்பு

இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் என்னும் வசதியில் புதிய ஆடியோ அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்குப் பயனர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. டிக் டாக் செயலிக்குப் போட்டியாக ஃபேஸ்புக் தரப்பு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்கிற சமூக வலைதளத்தை அறிமுகம் செய்தது. டிக் டாக் போலவே குறு காணொலிப் பதிவுகளுக்கான தளம் இது. ஆரம்பத்தில் 15 விநாடிகளாக இருந்த காணொலி அளவு, பின்பு 30 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டது. அதேபோல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸுக்கு எனத் தனிப் பொத்தானும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அண்மையில் … Read more

ஸ்டாலினும் உதயநிதியும் நகைக்கடன் வாக்குறுதியால் மக்களை கடனாளியாக்கினர்: இபிஎஸ் பேச்சு

“மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை கடனாளியாக்கினர்” என்று தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சாடினார். மேலும், “அரசு அதிகாரிகள், காவல் துறையினர் திமுகவுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். இதை திருத்திக்கொள்ளாவிட்டால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி மற்றும் திருவலம் … Read more

சாலைப் பராமரிப்புகளை மாநில அரசுதான் செய்யவேண்டும்: மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்

புதுடெல்லி: மத்திய அரசிடம் தமிழகத்தின் கிராமப்புற சாலைகளை சீரமைப்பது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பிய நிலையில், ‘அது மாநில அரசின் பொறுப்பு’ என்று கூறி மத்திய இணை அமைச்சர் ஃபகன்சிங் குளஸ்தே பதில் கொடுத்துள்ளார். பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, கடந்த 2021 நவம்பரில் பெய்த பருவ மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக இன்று திமுகவின் மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி, … Read more

நேரடிச் செய்தி, ரீட்வீட்டுகளில் புதிய அம்சம்: ட்விட்டர் திட்டம்

நேரடி இன்பாக்ஸ் செய்தி, ரீட்வீட்டுகளில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த ட்விட்டர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் ஒரு பயனருக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமெனில் அவருக்கு ரிக்வெஸ்ட் அனுப்ப வேண்டும். அதை அவர் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். இல்லையெனில் ரிப்போர்ட் அல்லது பிளாக் செய்ய முடியும். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யாவிட்டால், அந்தச் செய்தி படிக்கப்பட்டதா இல்லையா என்பதைக் குறுஞ்செய்தி அனுப்பிய பயனரால் அறிந்துகொள்ள முடியாது. அத்துடன் குறுஞ்செய்தி அழைப்பை ஏற்றுக்கொண்ட … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிப்.19-ல் பொது விடுமுறை – தமிழக அரசு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குப்பதிவு காலை 7 … Read more

நீட் விவகாரத்தில் மாணவர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறது திமுக, காங். – மக்களவையில் ரவீந்திரநாத் ஆவேசம்

புதுடெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டை பாராட்டி மக்களவையில் உரையாற்றிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத், ‘மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வை காங்கிரஸ் அமலாக்கியதாகவும், இதற்கு திமுக உதவியாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். மக்களவையின் ஒரே ஒரு அதிமுக உறுப்பினரான ரவீந்திரநாத் மேலும் பேசியது: “கரோனா தொற்று உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டு இருந்த வேளையிலும் உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் நாடுகளில் நமது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இது, இந்த மத்திய அரசின் சிறப்பான நிர்வாகத் திறனை எடுத்துக்காட்டுகிறது. … Read more

ப்ளே ஸ்டோரில் 10 கோடி பயனர்களைக் கடந்த இந்தியச் செயலி

இந்தியக் காணொலிப் பகிர்வுச் செயலியான ரொபோஸோ கூகுள் ப்ளே ஸ்டோரில் 10 கோடி பயனர்களைக் கடந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அறிவிப்பின் படி, கடந்த ஜூன் மாதம் கூகுள் ப்ளே ஸ்டோரில், சமூகதளச் செயலிகளில் முதலிடத்தை ரொபோஸோ ஏற்கெனவே பெற்றிருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகளை மக்கள் தேடுவது அதிகரித்துள்ளதால் இந்த நிலை என்று தெரிகிறது. ரொபோஸோவின் உரிமையாளரான க்ளான்ஸ் நிறுவனத்துக்கு இந்த விஷயம் இன்னொரு மைல்கல் என்று கூறப்படுகிறது. “10 கோடி பயனர்களைத் தாண்டிய முதல் இந்திய குறு … Read more

பிப்ரவரி 9: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,24,476 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.8 வரை பிப்.9 பிப்.8 … Read more

ஹிஜாப் வழக்கு: கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ஹிஜாப் அணிவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடரபாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, “எல்லா உணர்ச்சிகளையும் ஒதுக்கி வையுங்கள். அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். அரசியலமைப்பு சட்டம் எனக்கு பகவத் கீதை போன்றது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது நான் சத்திய … Read more

முடிவுக்கு வரும் யாஹூ க்ரூப்ஸ் சேவை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த சில வருடங்களாக பயனர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் யாஹூ க்ரூப்ஸ் வசதியை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2001-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாஹூ க்ரூப்ஸ் சேவையால், ரெட்டிட், கூகுள் க்ரூப்ஸ், ஃபேஸ்புக் க்ரூப்ஸ் போன்ற மற்ற சேவைகளுடன் போட்டி போட முடியவில்லை. தொடர்ந்து பயனர்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்த சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள வெரிஸோன் நிறுவனம்,”கடந்த சில வருடங்களாக … Read more