லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவேசம்
ஒட்டாவா: கனடாவில் கட்டாய கரோனா தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்கள் நடத்தும் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து கனடா நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ருடோ பேசும்போது, ”கரோனா பெருந்தொற்றால் அனைவரும் சோர்வடைந்துள்ளனர். குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள். நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க கடமைப்பட்டுள்ளோம். கரோனா தடுப்பூசிக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நமது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது, கனடா வாழ் மக்களின் அன்றாட வேலையை பாதிக்கிறது, நமது ஜனநாயகத்தை பாதிக்கிறது. … Read more