ஹிஜாப் வழக்கு: கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ஹிஜாப் அணிவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடரபாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, “எல்லா உணர்ச்சிகளையும் ஒதுக்கி வையுங்கள். அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். அரசியலமைப்பு சட்டம் எனக்கு பகவத் கீதை போன்றது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது நான் சத்திய … Read more

முடிவுக்கு வரும் யாஹூ க்ரூப்ஸ் சேவை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த சில வருடங்களாக பயனர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் யாஹூ க்ரூப்ஸ் வசதியை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2001-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாஹூ க்ரூப்ஸ் சேவையால், ரெட்டிட், கூகுள் க்ரூப்ஸ், ஃபேஸ்புக் க்ரூப்ஸ் போன்ற மற்ற சேவைகளுடன் போட்டி போட முடியவில்லை. தொடர்ந்து பயனர்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்த சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள வெரிஸோன் நிறுவனம்,”கடந்த சில வருடங்களாக … Read more

சமூக நீதி கூட்டமைப்பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் அறிவிப்பு

திருச்சி: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இடம்பெறவுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி ஆகியோர் அனுப்பிய கடிதத்தின் விவரம்: திமுக முன்னெடுத்துள்ள அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பிரதிநிதிகளாக தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முகம்மது பசீர் எம்.பி, மாநில துணைத் … Read more

‘‘சமத்துவத்தின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது – இதுதான் ஆத்ம நிர்பார்’’ – ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: சமத்துவச் சிலை சீனாவில் உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் ஆத்ம நிர்பார் கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை … Read more

5ஜி உலகில் நுழையும் ஆப்பிள் நிறுவனம்: நான்கு புதிய மாடல்கள் அறிமுகம்

செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள நிகழ்ச்சியில் 5ஜி அம்சம் இருக்கும் நான்கு புதிய ஐஃபோன் 12 வரிசை ஸ்மார்ட்ஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஹோம், விளையாட்டு என மற்ற சந்தைப் பொருட்களையும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்கிறது. இணையம் மூலமாக நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் 5.4 இன்ச் அகல ஐஃபோன் 12 மினி, 6.1 இன்ச் அகல ஐஃபோன் 12 மற்றும் ஐஃபோன் 12 ப்ரோ, 6.7 இன்ச் அகல ஐஃபோன் 12 ப்ரோ மேக்ஸ் … Read more

திமுக ஆட்சியால் வேதனைப்படும் மக்கள், அதிமுகவுக்கு வெற்றியைத் தருவர்: ஓபிஎஸ்

கிருஷ்ணகிரி: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஒரு மகத்தான, மாபெரும் வெற்றியை பெரும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்தாண்டு காலம் அதிமுக அரசு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசு செய்த சாதனைகளை இன்றைக்கு தமிழக மக்கள் எண்ணிப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சி வந்ததற்கு பின்னால், அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத ஒரு சூழல் இருக்கிறது என்பதை மக்கள் வேதனையுடன் எண்ணி பார்த்துக் … Read more

பள்ளி வளாகத்தில் ’ஜெய் ஸ்ரீராம்’, ’அல்லாஹ் அக்பர்’ கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது: கர்நாடக அமைச்சர் காட்டம்

பெங்களூரு: ‘ஜெய் ஸ்ரீராம்‘ என்றோ, ‘அல்லாஹ் அக்பர்‘ என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சட்டம்-ஒழுங்கை யாரும் கையில் எடுத்துவிட முடியாது. எந்தத் தவறான செயலையும் அரசு விட்டுவைக்காது. மாண்டியாவில் அந்த மாணவி வரும்போது எந்த மாணவர்களும் அவரை சுற்றி வளைக்கவில்லை. எந்த மாணவர்களும் அவர் அருகில் செல்லவில்லை. ’ஜெய் ஸ்ரீராம்’ என்றோ, ’அல்லாஹ் அக்பர்’ என்றோ பள்ளி வளாகத்தில் … Read more

ஆண் குழந்தை பிறக்க பாகிஸ்தான் கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலர்

ஆண் குழந்தை பிறக்க பாகிஸ்தான் கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலரை போலீஸார் தேடி வருகின்றனர். பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் வந்தார். அவர் தனது தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரினார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தலையில் ஆணி எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அவர், “நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்தப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு … Read more

ஃபேஸ்புக் மெஸஞ்சர் சேவையில் புதிய அம்சங்கள் அறிமுகம்

ஃபேஸ்புக்கின் மெஸஞ்சர் சேவையில் புதிய தோற்றம், உரையாடலுக்கான தனி வண்ணம் உள்ளிட்ட புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தனது மெஸஞ்சர் சேவையில் அவ்வப்போது புதிய அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. அப்படி சமீபத்தில் சில வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. “உலகளவில் நூறு கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கும் எங்கள் சேவையின் நோக்கம், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள பொதுவான ஒரு வழியாக இருக்க வேண்டும் என்பதுதான். தனிப்பட்ட முறையில் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்கும் … Read more

கிராம சபை போல ஏரியா சபை, விலையில்லா தரமான குடிநீர்… – மநீம வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மநீம வாக்குறுதிகள்: அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு உறுதி செய்யப்படும். காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை பரவலான பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படும். > கிராம சபை போல, … Read more