சொக்லேட் ஆலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி, 9 பேர் மாயம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள சொக்லேட் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சொக்லேட் ஆலையில் வெடிவிபத்து ஆர்எம் பால்மர் கோ. (R.M. Palmer Co.) ஆலையில் ஏற்பட்ட வெடிப்பினால் பலர் காயமடைந்துள்ளனர் என்று வெஸ்ட் ரீடிங் போரோ காவல் துறைத் தலைவர் வெய்ன் ஹோல்பென் கூறினார், அவர் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை. மாலை 5 மணிக்கு முன்பு ஏற்பட்ட இந்த வெடி … Read more

தென் சீனக் கடலில் நிற்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்; அதிகரிக்கும் பதற்றம்

தென் சீனக் கடலில் அமெரிக்காவின் போர்க்கப்பல் இருப்பது குறித்து சீனா கோபமடைந்துள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் சீனா தனக்கு சொந்தமானது என்று கூறும் தென் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு அருகே, அமெரிக்க போர்க்கப்பலான USS Milius இருப்பது குறித்து பெய்ஜிங் அதன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதால், இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. “அமெரிக்க இராணுவம் சீனாவின் இறையாண்மையை கடுமையாக மீறியுள்ளது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது” என்று சீன பாதுகாப்பு … Read more

கடவுளின் பாதுகாப்பு தேவை! கொடிய சூறாவளிக்கு உயரும் பலி எண்ணிக்கை..ஆளுநரின் வார்த்தைகள்

அமெரிக்காவின் மிசிசிப்பி நகரை தாக்கிய அழிவுகரமான சூறாவளிக்கு இதுவரை 23 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மிசிசிப்பி நகரை கொடிய சூறாவளி தாக்கியதால், இடியுடன் பலத்த மழை பெய்தது. இதில் 14 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. ஷார்கி மற்றும் ஹம்ப்ரீஸ் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அவசர மேலாண்மை வாரியம் கூறியுள்ளது. @Rogelio V. Solis/AP  @Rogelio V. Solis/AP ஆளுநரின் … Read more

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ

திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனின் வெறித்தனமான ஆட்டத்தை கண்டு மணமகள் உறைந்து போய் நிற்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது. மணமகனின் குத்தாட்டம் பொதுவாகவே சமூக ஊடகத்தில் வித்தியாசமான  திருமண நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்கள் அதிகமான பயனர்களால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் திருமணம் ஒன்றில் மணமகனும், மணமகளும் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கு முடிந்து மணமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை … Read more

14 மாதங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி: லண்டன் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய நிலை!

பிரித்தானியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீர் கழிக்க முடியாத ஒரு பெண்ணுக்கு ஒரு அரிய நிலை கண்டறியப்பட்டுள்ளது, இது தனது வாழ்க்கையை “முற்றிலும் மாற்றியது” என்று அவர் கூறுகிறார். லண்டன் பெண் லண்டனைச் சேர்ந்த 30 வயதான எல்லே ஆடம்ஸ் (Elle Adams) என்ற இளம் பெண் தனது வாழ்க்கையை மாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அக்டோபர் 2020-ல், தன்னால் சிறுநீர் கழிக்க முடியவில்லை என்பதை எல் உணர்ந்தார். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அல்லது சிறுநீர் கழிக்க … Read more

பெண்ணின் படுக்கையில் நெளிந்த கொடிய விஷ பாம்பு: புகைப்படத்தை வெளியிட்ட மீட்பு குழு

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தனது படுக்கையை திருப்பி பார்த்த போது கொடிய பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பெண்ணின் படுக்கையில் விஷ பாம்பு அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர், அவரது படுக்கை மெத்தையில் உள்ள பெட் சீட்டை மாற்றப் போகும் போது, நெளியும் விஷ பாம்பு ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த பெண் அவரது படுகையை இந்த வார தொடக்கத்தில் சரி செய்த போது ஆறு அடி நீளமுள்ள Eastern Brown snake ஒன்று … Read more

வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் போதும்! மாதவிடாய் வருவதற்கு

 பல பெண்களுக்கு மிக முக்கியமான பிரச்சனையாக இருப்பது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி. இயல்பாக சில பெண்களுக்கு ஒரு சில காரணங்களால் மாதவிடாய் தாமதமாகும். ஒவ்வொரு பெண்களின் உடலும் அவர்களின் மாதவிடாய் காலமும் வேறுபட்டது. தாமதமான மாதவிடாய் பிரச்சினைக்கு காரணம் என்னவென்று பார்க்கலாம். கடுமையான உடற்பயிற்சி மனக்கவலை மன நெருக்கடி பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல் கடுமையான காய்ச்சல் கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போதைப்பொருள் பயன்பாடு தைராய்டு கருப்பை செயலிழப்பு  … Read more

திடீர் மாரடைப்பால் நிலைக்குலைந்த பள்ளி பேருந்து ஓட்டுநர்: 13 வயது சிறுவனின் துணிச்சல் வீடியோ

பேருந்து ஒன்றில் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, 13 வயது சிறுவனின் துணிச்சல் செயல் சமூக ஊடகங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. சிறுவனின் துணிச்சல் செயல் 2013ம் ஆண்டு பள்ளி பேருந்து ஒன்று சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் பேருந்து கட்டுப்பாடு இல்லாமல் சென்றதையடுத்து, பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் பீதியில் உறைந்தனர். School bus driver suffers heart attack and 13-year-old gets behind … Read more

உலகின் மிக ஆபத்தான 10 விமான நிலையங்கள்!

விமான நிலையத்தின் முக்கியத்துவத்தை பற்றி நாங்கள் அறிந்தது உண்மையே. உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்களின் பட்டியலின் மூலம், ஒரு சாகச விமான நிலையத்தை பார்க்கலாம்.   பனிக்கட்டி ஓடுபாதைகள் முதல் டேபிள்-டாப் தரையிறக்கம் வரை மிகவும் ஆபத்தான விமான நிலையங்களில் இவ் உலகத்தில் காணப்படுகின்றது. அந்த வகையில் அவ்வாறு பயம்தரக்கூடிய விமானத்தைப் பற்றி பார்க்கலாம். லுக்லா விமான நிலையம் (LUA), நேபாளம்  நேபாளத்தில் உள்ள லுக்லா விமான நிலையம் எவரெஸ்ட் சிகரத்தைக் கைப்பற்றிய இருவரின் நினைவாக ஜனவரி … Read more

நடுவானில் உடல்நலம் பாதிக்கப்பட்ட விமானி: பதற்றமான சூழலில் உதவிக்கு ஓடிவந்த பயணி

அமெரிக்காவில் விமானம் ஒன்றின் விமானி நடுவானில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், விமானப்பயணி ஒருவர் விமானத்தை தரையிறக்க உதவிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. விடயம் என்னவென்றால், அந்தப் பயணி, பணியில் இல்லாத வேறொரு விமானத்தின் விமானி! நடுவானில் உடல்நலம் பாதிக்கப்பட்ட விமானி புதன்கிழமையன்று, அமெரிக்காவின் லாஸ் வேகஸிலிருந்து கொலம்பஸ் என்ற இடம் நோக்கி விமானம் ஒன்று பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் விமானி மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சுயநினைவிழந்ததால் விமானத்தை இயக்க இயலாத நிலைக்கு ஆளாகியுள்ளார். விமானத்தில் … Read more