Lankasri
ரஷ்ய கொடூரனுக்கு வரம்புகளே இல்லை.. ஒருபோதும் அடங்காது! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
உக்ரைன் ரயில் நிலையம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல், ரஷ்ய கொடூரனுக்கு வரம்புகளே இல்லை என்பதை காட்டுகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெவித்துள்ளார். உக்ரைனின் Kramatorsk-ல் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், KramatorsK ரயில் நிலைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் இறக்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி, குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் … Read more
பிரபல ஐரோப்பிய நாட்டிற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா!
பிரபல ஐரோப்பிய நாடான போலந்துக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. போலந்து தூதரக மற்றும் துணைத்தூதரக ஊழியர்கள் 45 பேர் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரஷ்ய தூதர்களை போலந்து வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள போலந்து தூதரக ஊழியர்கள் ‘persona non grata’ என்று அறிவிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது. ‘persona non grata’ என்பது வெளியுறவுத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சட்ட சொல் ஆகும். இது ஒரு வெளிநாட்டு நபர் … Read more
இவர்களெல்லாம் நாட்டிற்குள் நுழைய தடை! பிரித்தானியா அதிரடி
ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Lavrov ஆகியோரின் குடும்பத்தினர் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் புச்சா நகரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு சாலைகளில் வீசப்பட்டு கிடந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன. உக்ரைனில் ரஷ்யாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சில நாட்களுக்கு முன் புடினின் இரண்டு … Read more
பலரை பலிவாங்கிய ஏவுகணையில் பொறிக்கப்பட்ட அந்த வாசகம்: ரஷ்யர்களின் கொடூர முகம் அம்பலம்
உக்ரைனில் ரயில் நிலையம் ஒன்றில் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து பலர் கொல்லப்பட காரணமான சம்பவத்தில் முக்கிய பின்னணி கசிந்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ரயில் நிலையம் ஒன்றில் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது ரஷ்யா. இதில் நான்கு சிறார்கள் உட்பட 39 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 87 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். குறித்த ரயில் நிலையம் ஊடாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிவரும் நிலையில், பழி தீர்க்கும் வகையில் ரஷ்ய துருப்புகளால் இந்த ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்த … Read more
கனேடிய கடல் உணவு ஒன்றின் மூலம் பரவும் வைரஸ்: அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிப்பி உணவு ஒன்றின் மூலம் வைரஸ் ஒன்று பரவுவது தெரியவந்துள்ளதால், அதை உண்ணவேண்டாம் என கனேடிய அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஜனவரி 31 வாக்கில் சேகரிக்கப்பட்ட Oysters என்னும் சிப்பி உணவில், norovirus என்னும் வைரஸ் இருப்பதும், அது அமெரிக்காவில் பல இடங்களில் நோய்த்தொற்றை உருவாக்கியதும் தெரியவந்துள்ளது. கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட அந்த சிப்பிகள் அமெரிக்காவின் 13 மாகாணங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த norovirus பொதுவாக உயிருக்கு … Read more
மின்கம்பியில் உராய்ந்தபடி நெடுஞ்சாலையில் விழுந்த விமானம்: கமெராவில் சிக்கிய காட்சி
அமெரிக்காவில், சிறிய ரக விமானம் ஒன்று மின்கம்பியில் உராய்ந்தபடி நெடுஞ்சாலையில் வந்து விழும் காட்சி ஒன்று சாலையில் பயணித்துக்கொண்டிருந்த காரில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது. ஜார்ஜியாவிலுள்ள Kennesaw என்ற இடத்தில் பயணித்துக்கொண்டிருந்த Natasha Williams என்னும் பெண்ணின் காரில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் சிக்கிய அந்த காட்சியில், அந்த விமானம் மின்கம்பியில் உராய்வதால் தீப்பொறி உருவாகுவதையும், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்த சிறிய ரக விமானம் சாலையில் வந்து மோதுவதையும் காணலாம். இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவென்றால், அந்த விமானத்தை … Read more
கைப்பற்றப்படாத 7,000 சடலங்கள்… ரஷ்ய தாய்மார்களுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்
உக்ரைன் பிணவறைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் ரஷ்ய இராணுவ வீரர்களின் 7,000 சடலங்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருவதாக முக்கிய அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். இதனால், ரஷ்ய துருப்புகளின் மொத்த இழப்பு 19,000 என உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான Oleksiy Arestovych தெரிவிக்கையில், போரின் ஆரம்பத்தில் 3,000 ரஷ்ய வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்க முயன்றதாகவும், ஆனால் ரஷ்யா மறுப்பு தெரிவித்து, உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாக நம்பவில்லை என்று கூறியதாக … Read more
திடீரென பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஜேர்மானியர்: இறுதியில் ஏற்பட்ட இழப்பு
ஜேர்மானியர் ஒருவர் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்றில் அவரும், அவருடனிருந்த பெண்ணும் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம், Wallisellen என்ற சிறிய சுவிஸ் நகரத்தில் நடைபெற்றுள்ளது. ஜேர்மானியர் ஒருவர், மற்றொருவரைக் கடத்திவைத்துக்கொண்டு அவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக ஒரு புகார் பொலிசாருக்கு வந்துள்ளது. பின்னர் கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சுவிஸ் பொலிசார் அந்த ஜேர்மானியரைத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் Wallisellen நகரில் இருப்பது தெரியவரவே, நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில், … Read more
உக்ரைன் படையெடுப்பில் பெரும் இழப்பை ஒப்புக்கொண்ட ரஷ்யா!
உக்ரைனில் 44-வது நாளாக தாக்குதலை தொடர்ந்துவரும் ரஷ்யா, இராணுவ படையின் குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்துள்ளதாக ஒப்புகொண்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஸ்கை நியூஸிடம் பேட்டியளித்தபோது, இந்த உயிரிழப்புகள் “எங்களுக்கு ஒரு பெரிய சோகம்” என்று அவர் கூறியுள்ளார். ஆனால், வரவிருக்கும் நாட்களில் மாஸ்கோ அதன் போர் இலக்குகளை அடையும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். மேலும், உக்ரைன் “ரஷ்யாவுக்கு எதிரானது” மற்றும் “உக்ரைனில் நடந்த அனைத்தும் ரஷ்ய நாட்டிற்கு … Read more