பிரித்தானிய ஆண்கள் சிலர் கொடுக்கும் தொந்தரவால் உக்ரைன் இளம் பெண் அகதிகள் எடுத்துள்ள முடிவு

உக்ரைனிலிருந்து தப்பி வரும் இளம் பெண் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, தங்கள் வீடுகளில் இடம் கொடுக்க வரும் பிரித்தானிய ஆண்கள் சிலர், அவர்களிடம் பாலியல் ரீதியான பதிலுதவியை எதிர்பார்ப்பதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. உக்ரைனில் போருக்குத் தப்பி பிரித்தானியா வரும் அகதிகளுக்கு உதவும் நோக்கில் பிரித்தானிய அரசு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரித்தானியர்கள் தங்கள் வீடுகளில் கூடுதலாக உள்ள அறையை உக்ரைன் அகதிகளுக்குக் கொடுக்கலாம். அதற்காக அந்த பிரித்தானியர்களுக்கு ஒரு சிறு நிதி உதவியையும் … Read more

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றின் குளியலறையிலிருந்து கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்: பொலிசார் கண்ட காட்சி

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றின் குளியலறையிலிருந்து ஒரு பெண் அலறியதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் பொலிசாரை அழைத்துள்ளார். பொலிசார் வந்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, அந்த வீட்டின் குளியலறையில் தண்ணீர் வெளியேறும் துவாரத்துக்குள் விரல் சிக்கிக்கொள்ள, அந்தப் பெண் உதவி கோரி சத்தமிட்டது தெரியவந்தது. பொலிசார் சோப் உதவியுடன் அவரது விரலை வெளியே எடுக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடையவே, அவர்கள் தீயணைப்புத் துறையினரை அழைத்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் தக்க உபகரணங்களுடன் வந்து இரண்டு மணி … Read more

விபத்தில் 2 துண்டாக பிளந்த சரக்கு விமானம்! வைரல் வீடியோ

கோஸ்டாரிகா விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளான சரக்கு விமானம் 2 துண்டாக பிளந்தது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் உள்ள சான் ஜோஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் போது ஒரு சரக்கு விமானம் உடைந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்கு உள்ளான அந்த ஜேர்மன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான DHL-ன் பிரகாசமான மஞ்சள் நிற விமானத்தில் இருந்து புகை கிளம்பி நின்றது. விமானத்தில் இருந்த குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் “நல்ல நிலையில் … Read more

பிரான்ஸ் நாட்டின் அடுத்த ஜனாதிபதி இவரா? மேக்ரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்

வரும் ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளன. அவர் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவதைவிட, உக்ரைன் விவகாரத்தில் அதிக ஆர்வம் காட்டியது, அவரது போட்டியாளரான Marine Le Pen என்ற பெண்மணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆம், நேற்று முன் தினம் இரவு வெளியான கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள், ஜனாதிபதி தேர்தலில் … Read more

புடின் படைகளை தெறிக்கவிடும் உக்ரைன் வீரர்கள்: இணையத்தில் வெளியாகியுள்ள புதிய வீடியோ

ரஷ்ய tankகள் இரண்டை உக்ரைன் இராணுவம் சிதறடிப்பதைக் காட்டும் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Mariupol நகருக்கு வெளியே, மக்கள் குடியிருப்புப் பகுதி ஒன்றின் அருகில் அமைந்துள்ள சாலையில் செல்லும் ரஷ்ய tankகள் இரண்டை சரமாரியாகத் தாக்கி வெடித்துச் சிதறடித்துள்ளது உக்ரைன் இராணுவம். உக்ரைன் வீரர்கள் தாக்குகிறார்கள் என்பதை உணர்ந்ததும் ரஷ்ய tankகள் அந்த இடத்திலிருந்து தப்பியோட முயல, உக்ரைன் இராணுவம் அவற்றை விடாமல் தாக்குவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம். கடைசியில் அந்த tankகள் … Read more

கொன்று தள்ளுங்கள்… ரஷ்ய தளபதியின் நடுங்க வைக்கும் உத்தரவு: 5,000 பேர் படுகொலையின் பின்னணி

உக்ரைனின் அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்க இராணுவ தளபதிகள் ரஷ்ய துருப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நடுங்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் உளவு அமைப்புகள் ரஷ்ய இராணுவத்தின் இரகசிய வானொலி தகவல்களை இடைமறித்துள்ளது. இந்த நிலையிலேயே ரஷ்ய தளபதிகளின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், அப்பாவி மக்களே எஞ்சியுள்ளனர் என இராணுவத்தினர் தளபதிக்கு எடுத்துக்கூறியும், அவர் அதை பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. துறைமுக நகரமான மரியுபோலில் 5,000 அப்பவி மக்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் நடந்த சம்பவமே தற்போது வெளிச்சத்திற்கு … Read more

விரல் நகங்களே அடையாளம்… உக்ரைன் பெண் தொடர்பில் உலகை உலுக்கிய புகைப்படம்

உக்ரைன் நகரமான புச்சாவில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனத்திற்கு இலக்கான பெண் ஒருவரை அவரது விரல் நகங்களால் அடையாளம் கண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் புச்சா நகரம் ரஷ்ய துருப்புகளால் கொடூரமாக சிதைக்கப்பட்ட தகவல் உலக நாடுகளை கொந்தளிக்க வைத்துள்ளதுடன், ரஷ்யா மீது போர் குற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்க ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. புச்சா நகர தெருக்களில் சடலங்களை மட்டுமே தற்போது காண முடிவதாக கூறும் அதிகாரிகள், தீயில் மொத்தமாக கருகிய நிலையில் 50 … Read more

ரஷ்யாவை இடைநீக்கம் செய்தது ஐநா: சட்டவிரோதமான நடவடிக்கை என குற்றச்சாட்டு!

உக்ரைனில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது மற்றும் மனித உரிமை விதிமீறல்களை செய்து போன்ற நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா சர்வதேச விதிமுறைகளை மீறி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும் , உக்ரைனில் மனித உரிமை மீறல்களை புரிந்ததற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஐநா வின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. அமெரிக்காவின், நியூயார்க்-கில் ஜெனீவாவை … Read more

தலைதெறித்து ஓடிய ரஷ்ய வீரர்…விடாமல் துரத்திய ஆளில்லா விமானம்: வைரல் வீடியோ!

ரஷ்ய ராணுவ படைவீரர் ஒருவர் உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்றிலிருந்து தப்பிப்பதற்காக தலைதெறிக்க ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 6 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், தற்போது தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய உக்ரைனிய நகரங்களில் இருந்த தனது படைகளை ரஷ்யா பின்னகர்த்தி கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதில் கவனம் செலுத்திவருகிறது. ரஷ்யாவின் இந்த பின்னகர்வு நடவடிக்கையை உக்ரைன் சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் தங்களது தடுப்பு தாக்குதல் உத்தியில் இருந்து … Read more

ரஷ்யாவில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் மீது வண்ணப்பூச்சி ஊற்றி தாக்குதல்!

ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் ஆசிரியரும், 2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற டிமிட்ரி முரடோவ் வண்ணப்பூச்சு மற்றும் அசிட்டோன் ஆகியவற்றால் தாக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கையான நோவயா கெஸெட்டாவின் ஆசிரியரும், 2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவருமான டிமிட்ரி முரடோவ் கடந்த 7ம் திகதி மொஸ்கோவ்வில் இருந்து சமாரா நோக்கி ரயிலில் சென்றபோது வண்ணப்பூச்சு மற்றும் அசிட்டோன் ஆகியவற்றை கொண்டு அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டெலிகிராம் … Read more