கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்

தமிழகத்தில் கள்ளத்தொடர்பால் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (34) கொத்தனார். இவரது மனைவி கார்த்திகா (21). இவர்களுக்கு சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை, மற்றும் ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண், திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு … Read more

ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு ஆதரவில்லை! பிரபல ஐரோப்பிய நாடு அதிரடி

   ரஷ்யா மீதான எரிசக்தி தடைகளுக்கான பரிந்துறைகளை நாடு ஆதரிக்கவில்லை என்று ஹங்கேரியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் மீது 43வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, புச்சா நகரில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், புடினின் இரண்டு மகள்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, ரஷ்ய வங்கி மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது. இதனிடையே, ரஷ்ய நிலக்கரி மீதான பரிந்துறைக்கப்பட்ட தடை குறித்து விவாதிக்கும் பணியில் … Read more

உக்ரைனிலிருந்து ஓட்டம் பிடித்த 24,000 ரஷ்யப் படைவீரர்கள்: ஆனால்…

உக்ரைனிலிருந்து 24,000 ரஷ்யப் படைவீரர்கள் வெளியேறியுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வலிமையான நாடு என கருதப்படும் ரஷ்யாவுக்கு உக்ரைன் சரியான எதிர்ப்பைக் கொடுத்துள்ளது. இராணுவ வீரர்களுடன் போராட முடியாமல், கோழைத்தனமாக பெண்களிடமும் குழந்தைகளிடமும் தங்கள் வீரத்தைக் காட்டிவிட்டு வெளியேறியிருக்கிறார்கள் ரஷ்யப் படைவீரர்கள். இந்நிலையில், Kyiv மற்றும் Chernihiv நகரங்களிலிருந்து வெளியேறியுள்ள 24,000 ரஷ்யப் படைவீரர்கள் பெலாரஸுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், படை திரட்டிய பின் ரஷ்யா மீண்டும் உக்ரைனின் கிழக்குப் பகுதியை … Read more

உக்ரைன் சிறார்களுக்கு ரஷ்ய துருப்புகளால் நடந்த கொடூரம்: அம்பலப்படுத்திய பிரித்தானிய வீரர்

உக்ரைன் தலைநகர் கீவ் அருகாமையில் ரஷ்ய துருப்புகளால் சிறார்களுக்கு எற்பட்ட கொடூரம் தொடர்பில் கண்கூடாக பார்த்த பிரித்தானிய வீரர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று உக்ரைன் சென்றவர் முன்னாள் பிரித்தானிய இராணுவ ஸ்னைப்பரான ஷேன் மேத்யூ. இவரே தற்போது ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளார். 34 வயதான ஷேன் மேத்யூ கடந்த ஒரு மாத காலமாக உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போர்க்களத்தில் உள்ளார். ஈராக், சிரியா மற்றும் … Read more

7 தமிழர்கள் விடுதலை! ஆவணங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்… முக்கிய தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு தமிழர்களின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இந்த முக்கிய தகவலை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 7 பேர் விடுதலை தொடர்பில் ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது. ஆனால் ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் … Read more

ஐபிஎல்! உலகில் நம்பர் 1 பவுலர் ஓவரை துவம்சம் செய்த இளம் வீரர்… ரசிகர்கள் ஆச்சரியம்

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா அசத்தலாக ஆடிய விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி புனே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை அணி தோற்றது. இருந்த போதிலும் அந்த அணியை சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது. முக்கியமாக உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராகவும், டி20ல் அசுரத்தனமான ஃபார்மிலும் இருக்கும் பேட் … Read more

உக்ரைனில் சரமாரியாக குண்டுகளை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள்! வெளியான வீடியோ ஆதாரம்

 உக்ரைனில் ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை பொழிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது 43வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, புச்சா நகரில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், புடினின் இரண்டு மகள்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, ரஷ்ய வங்கி மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது. இதனிடையே, உக்ரைன் மீது இரண்டு ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை பொழியும் காட்சி … Read more

அம்பலமான பிரித்தானியாவின் மிகப்பெரிய டீசல் கொள்ளை: போர் கப்பலில் கைவரிசை

பிரித்தானிய கடற்படை போர் கப்பல் ஒன்றில் இருந்து சுமார் 250,000 பவுண்டுகள் மதிப்பிலான டீசல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான HMS Bulwark என்ற போர் கப்பலே டீசல் கொள்ளைக்கு இலக்காகியுள்ளது. துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த போர் கப்பலில் கொள்ளை கும்பல் திட்டமிட்டு பல வாரங்களாக டீசல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலை உச்சத்தை தொட்டிருக்கும் இந்த வேளையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது கடற்படை அதிகாரிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. மட்டுமின்றி பாதுகாப்பு மிகுந்த பகுதியில், … Read more

பள்ளி ஆசிரியை கணவருடன் சேர்ந்து கைது! சிறுமி கொடுத்த புகாரில் அதிர்ச்சி தகவல் அம்பலம்

கனடாவில் பள்ளி ஆசிரியை மற்றும் அவரின் கணவர் பாலியல் தாக்குதல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒட்டாவாவை சேர்ந்த தம்பதி ஆண்ட்ரியா ஆண்ட்ரில் (37) மற்றும் ஹாரி ஆண்ட்ரில் (38). ஆண்ட்ரியா பள்ளிக்கூடம் ஒன்றில் 2017ல் இருந்து 2021 வரையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 18 வயதுக்கு குறைவான சிறுமி மற்றும் சிறுவனிடம் ஆண்ட்ரியா மற்றும் ஹாரி தவறாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரையடுத்து இருவரையும் பொலிசார் … Read more

பழிக்குப் பழி… ரஷ்ய வீரர்கள் எப்படி பொதுமக்களைக் கொன்றார்களோ அதே போல கொல்லும் உக்ரைன் வீரர்கள்

ரஷ்ய நகரம் ஒன்றில் அராஜகச் செயல்களில் ஈடுபட்ட ரஷ்யப் படைவீரர்கள் மக்களை எப்படி கைகளைப் பின்னால் கட்டி சுட்டுக் கொன்றார்களோ, அதேபோல தங்களிடம் சிக்கிய ரஷ்ய வீரர்களை கொன்று உக்ரைன் வீரர்கள் பழிக்குப் பழி வாங்குவதைக் காட்டும் பயங்கர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள் சிலர் சிக்கியபோது, அவர்கள் தங்களை புடின் பொய் சொல்லி ஏமாற்றி போருக்கு அனுப்பிவிட்டதாகக் கூறி கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளும், அவர்களுக்கு உக்ரைன் தாய்மார்கள் உணவும் … Read more