தண்ணிர் கொதிக்க வைக்க எரிபொரூள் வேண்டும்: அயர்லாந்திடம் மன்றாடும் ரஷ்யா!

அயர்லாந்தில் உள்ள ரஷ்ய தூதரகம் தங்களது எரிபொருள் தட்டுப்பாடை நீக்குவதற்கு விரைவாக உதவுமாறு அந்த நாட்டு அரசாங்கத்திடம் கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர் தாக்குதலை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகளும், தொழில் நிறுவனங்களும் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். மறுமுனையில், ரஷ்யாவின் இந்த பயங்கரவாத செயல்களுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளை சார்ந்த பொதுமக்களும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். … Read more

புச்சா படுகொலை…கண்டிப்பாக புடின் நரகத்திற்கு செல்வார்: குமுறும் உக்ரைன் அமைச்சர்!

உக்ரைனில் பொதுமக்களை கொன்று குவித்து இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின் கண்டிப்பாக நரகத்திற்கு செல்வார்(go to hell) என அந்தநாட்டின் உள்விவகாரத்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 6வது வாரமாக போர்த்தாக்குதல் நடத்திவரும் நிலையில், புச்சா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்ய ராணுவம் சித்திரவதை செய்து கொலை செய்து இருப்பதாக பல்வேறு குற்றசாட்டுகளை ரஷ்யா மீது உலகநாடுகள் முன்வைத்து வருகின்றன. இந்தநிலையில், இன்று (செய்வாய்க்கிழமை) உக்ரைனின் புச்சா நகரில் படுகொலை செய்யப்பட்ட இடத்தை … Read more

உக்ரைனில் சைக்கிளில் சென்றவரை…ரஷ்ய ராணுவத்தின் வெறிச்செயல்: அதிர்ச்சி காணொளி!

உக்ரைனின் புச்சா நகரில் சைக்கிளில் சென்றவர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போர் விதிமுறைகளை மீறி கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்து வருகிறது. இதையடுத்து உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் சித்திரவதை செய்யப்பட்டு தெரு வீதிகளில் கொல்லப்பட்டு கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், ரஷ்யாவின் இந்த … Read more

இலங்கையில் அவசரகால பிரகடன சட்டம் நீக்கம்: கோட்டாபய ராஜபக்ச புதிய அறிவிப்பு!

இலங்கையில் அவசரகால பிரகடன சட்டத்தை செய்வாய்க்கிழமை(ஏப்ரல் 5 திகதி) நள்ளிரவு முதல் திரும்பப்பெறுவதாக அந்தநாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்இணைப்பு துண்டிப்பு போன்ற பல்வேறு நெருக்கடியை அந்த நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தொடர்ந்து கடுமையான உச்சத்தை தொட்டு வருவதால் இலங்கை அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என பொதுமக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி ஆளும் அரசுக்கு … Read more

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்: பெங்களூரு அணி திரில் வெற்றி!

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்-கின் அதிரடியால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 2022ம் ஆண்டுக்கான 13வது ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையின் வான்கடே மைதானம் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 169 … Read more

ஜேர்மனியில் குறிவைக்கப்படும் உக்ரேனியர்கள்! அமைச்சர் பரபரப்பு தகவல்

 ஜேர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் Nancy Faeser தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஜேர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக Faeser குறிப்பிட்டுள்ளார். Faeser கூறுகையில், பிப்ரவரி மாத இறுதியில் இருந்து 15 வன்முறை செயல்கள் உட்பட ரஷ்யர்களுக்கு எதிராக 308 குற்றங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து … Read more

நமது கண்முன்னே அப்பாவி உயிர்களின் படுகொலை… ஐநாவில் பிரபல ஐரோப்பிய நாடு வருத்தம்!

உக்ரைனில் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் அயர்லாந்து தூதர் ஜெரால்டின் பைர்ன் நாசன் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 41வது நாளாக போர்த்தாக்குதலை நடத்திவரும் நிலையில், ரஷ்ய ராணுவம் பல மனித உரிமை மீறல்களையும் போர் விதிமீறல்களையும் புரிந்து இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அந்தவகையில், உக்ரைனின் புச்சா நகரின் தெருக்களில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகள் வெளியாகி உலகநாடுகள் மத்தியில் பெரும் … Read more

வெளிநாடுகளில் உள்ள சில இலங்கை தூதரங்கள் மூடல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சில தற்காலிகமாக மூடப்படுகின்றன. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   Source link

உலகப் போர் காலத்து துப்பாக்கி… பசிக்கு குளத்து நீர்: உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் நிலை

உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்ய துருப்புகள் பெரும்பாலானோர் இரண்டாம் உலகப் போர் காலத்து துப்பாக்கிகளுடன் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள ரஷ்ய துருப்புகள் தற்போது தென்கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்ய ஆதரவு டொன்பாஸ் பகுதியில் உள்ள வீரர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய துருப்புகளில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இரண்டாம் உலகப் போர் காலத்து துப்பாக்கிகளுடன் … Read more

தந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த மகன்.. உயிருடன் திரும்பி வந்ததால் அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் துறையம்பாளையம் கிராமத்தில் இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் துறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார், கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது இவரது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை, மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் … Read more