ஜேர்மனியில் 87 முறை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்!

ஜேர்மனியைச் சேர்ந்த ஒருவர் குறைந்தது 87 முறை கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஃப்ரீ பிரஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தினமும் பல முறை தடுப்பூசி… Frei Presse செய்தித்தாளின் தகவலின்படி, 61 வயதான நபர் கிழக்கு ஜேர்மனிய மாநிலங்களான Saxony மற்றும் Saxony-Anhalt-ல் உள்ள பல தடுப்பூசி மையங்களுக்கு சென்றுள்ளார். சாக்சோனி மாநிலத்தில் மட்டும் 87 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பதிவுசெய்து, வெவ்வேறு தடுப்பூசி தளங்களில் அந்த நபர் … Read more

பிரித்தானிவில் இருந்து புறப்பட்ட விமானம் கடலில் மாயம்! தேடுதல் பணி தீவிரம்

பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று காணாமல் போனதையடுத்து, மீட்புக் குழுவினர் ஆங்கிலக் கால்வாயில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள வெல்லஸ்போர்னில் இருந்து இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு P-28 விமானம் ஒன்று சனிக்கிழமை காலை வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி புறப்பட்டது. இந்நிலையில், விமானம் கவலையளிக்கும் வகையில் காணாமல் போனது என்றும் விமானத்தை தேடும் பணி மதியம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரெஞ்சு கடலோர காவல்படை கூறியுள்ளது. ஒரே குழியில் 300 பிணங்கள்.., … Read more

பிரித்தானியாவில் பரவும் புதியவகை கோவிட் வைரஸ்!

பிரித்தானியாவில் Omicron வைரஸை விட அதிகமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஒரு புதிய கோவிட் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. XE எனப்படும் அந்த புதிய உருமாறிய வைரஸ், வேறு எந்த வைரஸை விடவும் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. XE என்பது BA.1 மற்றும் BA.2 ஆகிய ஓமிக்ரான் வகை வைரஸ்கள் சேர்ந்த ஹைபிரிட் வகை … Read more

ஒரே குழியில் 300 பிணங்கள்.., உக்ரைனில் சிதறிக்கிடக்கும் அப்பாவிகளின் சடலங்கள்

உக்ரைன் தலைநகர் அருகே ரஷ்ய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி உக்ரைனிய பொது மக்களின் சடலங்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கும் நிலையில், சுமார் 300 சடலங்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன. உக்ரைனின் தலைநகர் கீவ்விற்கு அருகே மக்கள் அதிகம் வசிக்கும் முக்கிய நகரமான புச்சா (Bucha) நகரத்தை ரஷ்ய படையினரிடம் இருந்து உக்ரேனிய இராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. அங்கு ரஷ்ய படையினரால் நூற்றுகணக்கான அப்பாவி பொதுமக்கள் சுட்டு கொள்ளப்பட்டு நகரத்தின் தெருக்கள் எங்கும் சிதறி கிடந்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து … Read more

பட்லர் சதம்.. மும்பையை ஊதி தள்ளி 2வது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்!

2022 ஐபிஎல் தொடரில் இன்று ஏப்ரல் 2ம் திகதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 23  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று அசத்தியது.  ஐபிஎல் தொடரில் இன்று ஏப்ரல் 2ம் திகதி  Dr DY Patil மைதானத்தில் நடந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி, … Read more

ஷுப்மன் கில், பெகுர்சன் வெறித்தனம்! டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றி

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 15-வது சீசனில் 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டியிட்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து குஜராத் அணியின் தொடக்க வீரராக அவுஸ்திரேலிய வீரர் மேத்தீவ் வெடும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மேத்தீவ் வெட் விக்கெட்டை ரஹிம் வீழ்த்தினார். … Read more

இந்திய வானில் தெரிந்த நெருப்பு மழை! உண்மையில் அது என்ன? வைரலாகும் வீடியோக்கள்

இந்தியாவில் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள பகுதிகளில் பூமியை நோக்கி எரிகற்கள் வரும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் இருந்து இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. விண்ணில் தெறிந்தது விண்கற்கள் என தகவல்கள் வெளியாகின. பெரும்பாலும் ‘ஷூட்டிங் ஸ்டார்ஸ்’ என்று அழைக்கப்படும் விண்கற்கள் பாறைப் பொருட்களாகும், அவை பூமியின் வளிமண்டலத்தில் வினாடிக்கு 30 முதல் 60 கிமீ என பெரும் வேகத்தில் நுழைகின்றன. அவை … Read more

டெல்லியை அலறவிட்ட ஷுப்மன் கில்! 171 ஓட்டங்கள் குவித்த குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க வீரர் ஷுப்மான் கில் 84 ஓட்டங்கள் குவித்து டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசனில், 10-வது லீக் ஆட்டம் இன்று புனேவில் இரவு 7:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச தேர்வு செய்ய, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதலில் துடுப்பாடியது. … Read more

பொருளாதார தடையை விலக்கினால் மட்டுமே….மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் மேற்கத்திய நாடுகள் திரும்ப பெறாவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையத்துடனான ஒத்துழைப்பை ரஷ்யா திரும்ப பெரும் என தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் இதுவரை 5 கட்டங்களாக பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. இந்தநிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டமைப்பு நாடுகளுடன் ரஷ்யாவின் ஒத்துழைப்பை மறுசீரமைப்பு செய்து உறவை தொடர்வதற்கும், வருங்காலங்களில் இணைந்து மேற்கொள்ள படவேண்டி இருந்த விண்வெளி … Read more

CSK-க்கு திரும்பும் நட்சத்திர வீரர்… இனி வெற்றி தான்: உற்சாகத்தில் சென்னை அணி ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் அணிக்கு விரைவில் திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டியின் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு இதுவரை எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா அணியுடன் 131 ஓட்டங்கள் எடுத்து மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாவது போட்டியில் லக்னோ அணியுடன் 210 ஓட்டங்கள் என்ற மிக கடினமான இலக்கை … Read more