ரஷ்யாவால் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்த பேரிடி… விளாடிமிர் புடின் எடுத்த ஒற்றை முடிவு

உக்ரைன் மீதான போருக்கு பின்னர், ரஷ்ய நாணயத்தில் மட்டுமே இனி ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்ற விளாடிமிர் புடினின் முடிவு அமுலுக்கு வந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரித்தானியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், முதன்மையான நாடுகளால் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, தமக்கு எதிரான, தம்மால் ஆதாயம் பெறும் நாடுகளுக்கு பேரிடியாக புதிய கொள்கையை … Read more

பின்வாங்கும் ரஷ்ய படை! செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றம்

உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து பல வார ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்ய துருப்புக்கள் வெளியேறியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். “செர்னோபில் அணுமின் நிலையத்தின் எல்லையில் இனி வெளியாட்கள் யாரும் இல்லை” என்று செர்னோபில் விலக்கு மண்டலத்திற்குப் பொறுப்பான உக்ரைனின் அரசு நிறுவனம் அதன் Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று, மாநில அணுசக்தி நிறுவனமான Energoatom, பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையம் மற்றும் பிற விலக்கு மண்டலங்களிலிருந்து ரஷ்ய … Read more

இலங்கையில் வெடித்துள்ள போராட்டம்: 5 முக்கிய புள்ளிகள்

இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இது மிகவும் அத்தியாவசியமான இறக்குமதிகளுக்கு கூட செலுத்துவதற்கு வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக இலங்கை அரசால் எரிபொருள் ஏற்றுமதிக்கு பணம் செலுத்த முடியவில்லை, மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற தயாராக உள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் ஐந்து முக்கிய புள்ளிகள்: ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட பேரணியை … Read more

இலங்கை தமிழர்களுக்கு உதவ தயார்: மோடியுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, தமிழக அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 2-ஆம் திகதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மு.க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றப் பிறகு, … Read more

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை: அதிகரிக்கும் பதற்ற நிலை; ஊரடங்கு அமுல்!

இலங்கையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள அதிபரின் இல்லம் அருகே 5,000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தி, காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டங்களை ஒடுக்க துணை ராணுவ பொலிஸ் … Read more

சென்னை அணியை அசால்ட்டாக வீழ்த்திய லக்னோ! முதல் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலான வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் லக்னோ அணி முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் 7வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடிப்பாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

இலங்கையில் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி இல்லம்! கடும் பதற்ற நிலை; பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பொலிஸார் பிரயோகித்துள்ளனர். தீவிரமடையும் போராட்டம்! கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்த பொலிஸார் இலங்கையில் கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் தற்போது அதனை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் தற்போது மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் … Read more

லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்ட சென்னை! 211 ஓட்டங்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசனில், இன்று நடைபெற்று வரும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் … Read more

மொத்தமும் ஏமாற்று வேலை: அம்பலமான வடகொரியாவின் ஏவுகணை சோதனை

உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத்த வடகொரியாவின் தில்லாலங்கடி வேலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் பிரபல திரைப்படம் ஒன்றின் பாணியில் வடகொரியா வீடியோ ஒன்றை வெளியிட்டு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக இந்த விவகாரம் தொடர்பில் தென் கொரியாவும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியுள்ளது. Hwasong-17 என்ற அணு ஆயுதம் தாங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வடகொரியா கடந்த வாரம் அறிவித்தது. ஆனால் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலை … Read more

மரியுபோல் நகரை மொத்தமாக சிதைத்த ரஷ்ய தளபதி: பாய்ந்த பிரித்தானிய நடவடிக்கை

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை மொத்தமாக சிதைத்து, பதுங்கியிருந்த 300 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட காரணமான ரஷ்ய தளபதி மீது பிரித்தானியா நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. ரஷ்யாவின் கொடூர தளபதிகளில் ஒருவரான Mikhail Mizintsev மீது பிரித்தானிய அரசு புதிய தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் அமைந்துள்ள நாடக அரங்கம் ஒன்றில், ரஷ்ய குண்டுவீச்சுக்கு பயந்து பதுங்கியிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் மீது வான் தாக்குதலுக்கு உத்தரவிட்டவர் Mikhail Mizintsev. குறித்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் … Read more