தோனி இப்படி செய்வாருன்னு எதிர்பார்க்கவில்லை… ஆவேசமான CSK வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதிவில் இருந்து விலகுவதாக தோனியின் அறிவிப்பால் உடைந்து போனதாக நியூஸிலாந்து வீரர் டெவன் கான்வே தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிலையில், அதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதிவில் இருந்து தோனி விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மேலும் இதனை தொடர்ந்து, சென்னை அணியின் புதிய கேப்டன் ஆக இந்திய அணியின் … Read more

உக்ரைன் தொடர்பில் பதவியை இழக்கும் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறை தலைவர்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இருப்பதை கணிக்கத் தவறியதாக கூறி, பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையின் தலைவர் தமது பதவியை இழந்துள்ளார். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது. தற்போது 5 வாரங்கள் கடந்தும் ரஷ்ய போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பொறுப்புக்கு வந்து 7 மாதங்களில், உக்ரைன் விவகாரம் தொடர்பில் தமது பதவியை இழந்துள்ளார் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையின் தலைவர் Eric Vidaud. அவரது பதவியை பறிக்க காரணமாக கூறப்படுவது, … Read more

இந்தியாவில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்றை தத்தெடுத்துள்ள கனேடிய தம்பதியர்: ஒரு வைரல் செய்தி

இந்தியாவில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்றை கனேடிய தம்பதியர் தத்தெடுத்துள்ளார்கள். பொதுவாகவே இணையத்தில் நாய்கள் மற்றும் பூனைகள் தொடர்பான வீடியோக்களை விரும்புவோர் ஏராளம். அவ்வகையில் இந்தியாவில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாயை கனேடிய தம்பதியர் தத்தெடுத்த செய்தியும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களைக் கவரும் விடயங்கள் என்னென்னவோ உள்ளன. ஆனால், Havilah Heger Wiley, Stephen தம்பதியரை ஒரு தெரு நாய் கவர்ந்துள்ளது. View this post on Instagram A post shared by HAVIE … Read more

ரஷ்ய படைகள் துரத்தியடிப்பு…அடுத்தடுத்து நகரங்களை விடுவித்து உக்ரைன் ராணுவம் அதிரடி!

உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜபோரிஷியா(Zaporizhia) பகுதி உக்ரைன் தரைப்படைவீரர்களால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யா 5 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்கள் சிலவற்றை கைப்பற்றி ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டாலும் உக்ரைனிய பாதுகாப்பு படைகளின் எதிர்ப்பு தாக்குதலால் தொடர்ந்து அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரஷ்ய ராணுவ படையின் கட்டுப்பாட்டில் இருந்து தலைநகர் கீவ் அருகில் … Read more

கடுமையான ஆத்திரத்தில் உள்ள புடின்! நம்பிக்கையை இழந்துவிட்டார்… முக்கிய தகவல்

விளாடிமிர் புடின் கடுமையான ஆத்திரத்தில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. ரஷ்யா எளிதாக உக்ரைனை கைப்பற்றிவிடும் என்ற பேச்சுக்கள் பொய்யானது. ஏனெனில் உக்ரைன் கடுமையான பதில் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்நிலையில் போர் உத்திகள் தொடர்பில் புடின் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையும் படிங்க: போதையில் இருந்த 2 ரஷ்ய வீரர்களால் இளம்தாயாருக்கு நேர்ந்த கொடூரம்! அருகே அழுது கொண்டிருந்த குழந்தை இது குறித்து பெயர் குறிப்பிட … Read more

கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக நினைத்திருந்த பெற்றோருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி

இந்தியாவில் பெண் ஒருவர் கர்ப்பமுற்றிருந்த நிலையில், அவருக்கு கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த Shaheen Khan, Sohail தம்பதியருக்கு திங்கட்கிழமையன்று (மார்ச் 28)குழந்தை பிறந்தபோது, அவர்கள் மட்டுமின்றி மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், பிறந்த குழந்தை இரண்டு தலைகளுடன் காணப்பட்டது.  அத்துடன் அதற்கு மூன்று கைகளும், இரண்டு இதயங்களும் உள்ளன. அதாவது, சில நேரங்களில் ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் இப்படிப் பிறந்து விடுவதுண்டு. அவை பொதுவாக இறந்தே பிறக்கும். … Read more

விளம்பரத்தை பார்த்து கனேடிய தம்பதிக்கு ஏற்பட்ட ஒரு ஆசை! பல கோடிகளை அள்ளிய ஆச்சரியம்

கனடாவில் ஒரு தம்பதிக்கு நம்ப முடியாத வகையில் மிகப்பெரிய பரிசு லொட்டரியில் விழுந்துள்ளது. ஒன்றாறியோவை சேர்ந்த தம்பதி Gary மற்றும் Karry Stata ஆகியோர் தான் பரிசை வென்ற அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள். கடந்த 10 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தான் லொட்டோ 6/49ல் அவர்களுக்கு $21.5 மில்லியன் என்ற இமாலய பரிசு விழுந்துள்ளது. Gary கூறுகையில், இது தான் எங்களுக்கு முதன் முதலில் விழுந்துள்ள பெரிய பரிசாகும். ஜாக்பாட்டிற்கான விளம்பரத்தை … Read more

தினமும் ஒரு வெங்காயம் சாப்பிடுங்க! திகைக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தருமாம்

பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தில் பலவித நன்மைகள் அடங்கியுள்ளது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகின்றது. அதுமட்டுமின்றி நமது பாட்டி வைத்திய குறிப்புக்களிலும் வெங்காயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதனை தினமும் எடுத்து கொள்வது நன்மையே. அந்தவகையில் தினமும் வெங்காயம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். வெங்காயம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். சிவப்பு வெங்காயத்தை உட்கொள்வதால் இரத்தத்தில் குளுக்கோஸின் … Read more

பிரித்தானியாவில் உச்சத்தை தொடும் வீடுகளின் விலை: அதிகரிக்கும் புதிய அழுத்தம்!

பிரித்தானியாவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடியிருப்பு வீடுகளின் விலை அதிகபட்சமாக 14.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் மிகப்பெரிய கட்டிட சமூகமான நேஷன்வைட்டின்( Nationwide) கூற்றுப்படி, வீடுகளின் விலை முந்தைய மார்ச் மாதத்தை விட 14.3 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது, இது கடந்த 2004 பிறகு ஏற்பட்டுள்ள அதிகபட்ச விலைஉயர்வாகும் எனவும் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் சராசரி வீடுகளின் விலையானது 265,312 பவுண்ட்கள் என்ற உச்சத்தை தொட்ட நிலையில், முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 33,000 … Read more

ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் விரைவில் தீர்வு! முக்கிய வார்த்தைகளை உதிர்த்த தமிழர்

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று தமிழரான திருமூர்த்தி கூறியுள்ளார். தமிழத்தை சேர்ந்த டி.எஸ் திருமூர்த்தி ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதராக உள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திருமூர்த்தி பேசுகையில், உக்ரைனில் போரின் தொடக்கத்திலிருந்தே சூழல் மோசமடைந்து வருகிறது. உக்ரைன்- ரஷ்யா போா்ச் சூழல் ஏற்கெனவே வளரும் நாடுகள் உள்பட சா்வதேச பொருளாதாரத்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் விரைவில் தீா்வு எட்டப்படும். ரஷ்யாவும் உக்ரைனும் ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தையை … Read more