யோசிக்காமல் புடின் குறித்து அமெரிக்க அதிபர் பிரயோகித்த வார்த்தைகள்: பிரான்ஸ் கண்டனம்

நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், உணர்ச்சிவசப்பட்டு, யோசிக்காமல் புடின் குறித்து சில வார்த்தைகளை பேசிவிட்டார். இந்த ஆள் இனி ஆட்சியிலிருக்கக்கூடாது என்ற பொருளில், ‘For god’s sake this man cannot remain in power’ என்று கூறினார் பைடன். அத்துடன், உக்ரைனுக்கு வெளியே வேறு எந்த நாட்டின்மீதும் கைவைக்க நினைக்கவேண்டாம் என்றும், குறிப்பாக நேட்டோ எல்லைக்குள் ஒரு இஞ்ச் இடத்தில் கூட கால்வைக்க முயற்சிக்கவேண்டாம் என்றும் அவர் புடினை எச்சரித்தார். ஆனால், … Read more

புடினுடைய அடுத்த யுக்தி… ஏவுகணைத் தாக்குதலில் பற்றியெரியும் எண்ணெய்க்கிடங்குகள்

தங்களை எதிர்த்து அடிக்கும் உக்ரைன் படைகளின் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமல் போகட்டும் என்பதற்காக எரிபொருள் சேமிப்பகங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளன ரஷ்ய படைகள். நேற்று இரவு, ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனிலுள்ள Lutsk, Kharkiv, Zhytomyr, Rivne மற்றும் Kyiv நகரங்களைத் தாக்கின. நேற்று இரவு 10.30 மணியளவில், 15 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் Lutsk நகரைத் தாக்க, பெரிய எண்ணெய்க் கிடங்கு ஒன்றில் தீப்பற்றியது. அந்த எண்ணெய்க்கிடங்கில் பயங்கரமாக தீப்பற்றி எரிவதைக் காட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக … Read more

ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க தயார்…போரை முதலில் நிறுத்துங்கள்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு

உக்ரைன் நடுநிலைமை தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவது தொடர்பான 5வது கட்ட பேச்சுவார்த்தை ஐரோப்பிய நாடான துருக்கியில் இன்று(திங்கள்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைன் நடுநிலைமையை தொடர வேண்டும் என்கிற ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையை பற்றி ஆலோசிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பாதுகாப்பு, … Read more

மைதானத்தில் எடுபுடி வேலை! 2 ஆண்டுகள் அவமானத்துக்கு ஐபிஎல்லில் பிரபல வீரர் தந்த தரமான பதிலடி

மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எடுத்து கொண்டு ஓடி எடுபிடி வேலை செய்து வந்த முன்னணி வீரர் தரமான கம்பேக் கொடுத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மும்பை – டெல்லி போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். அதிலும், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் ரோகித் … Read more

உக்ரைன் பாம்பு தீவில் நடந்த சம்பவம்! ரஷ்யாவின் அடுத்த டார்கெட்… ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பரபரப்பு தகவல்

இந்தப் போரில் உக்ரைன் வீழ்ந்தால் ரஷ்யாவின் நடவடிக்கை ஐரோப்பாவிற்கும் விரிவடையும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அளித்த முக்கிய பேட்டியில், இந்த வாரம் துருக்கியில் நடைபெறும் உக்ரேனிய-ரஷ்ய பேச்சுவார்த்தைகளில் உக்ரைனின் முன்னுரிமைகள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகும். அமைதியை எதிர்பார்க்கிறோம் உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம். துருக்கியில் நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்பும் தேவையும் உள்ளது. … Read more

உக்ரேன் மொழியில் புதிய சுவிஸ் டிவி சேனல்! எதற்காக தெரியுமா?

உக்ரேனிய மொழியில் ஒளிபரப்பப்படும் புதிய சுவிஸ் இணைய டிவி சேனல் அறிமுகமாகியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிலிருந்து வரும் அகதிகளின் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக Diaspora TV Switzerland உக்ரேனிய மொழியில் புதிய சேவையை ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தியது. புலம்பெயர்வுக்கான மாநில செயலகத்தால் (SEM) ஆதரிக்கப்படும் புதிய சேவையானது, மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உக்ரேனிய மொழியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் சமூகத்திற்கு ஒருங்கிணைப்பு, சுகாதார விஷயங்கள் மற்றும் சுவிஸ் அரசியல் அமைப்பு ஆகியவற்றை விளக்குவதில் கவனம் செலுத்தும் … Read more

உக்ரைன் பெண்களை சூறையாடும் ரஷ்யர்கள்: குழந்தை கண்முன் கொடூரம்., எம்.பி. எச்சரிக்கை

ரஷ்ய வீரர்கள் பல உக்ரேனிய அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என பெண் எம்.பி ஒருவர் கூறியுள்ளார். உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் ரஷ்ய படைகளால் பெண்கள் பல மணிநேரம் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக கார்கிவ் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி. மரியா மெசென்ட்சேவா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு தேசம் அமைதியாக இருக்காது என்று எச்சரித்துள்ளார். தலைநகர் கீவுக்கு வெளியே உள்ள ப்ரோவரி ரேயோனில் உள்ள ஒரு கிராமத்தில், ரஷ்ய … Read more

ஜேர்மனியில் ஏவுகணை பாதுகாப்பு கவசம் அமைக்க திட்டம்!

இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கவசத்தை (Iron Dome) வாங்க ஜேர்மனி திட்டமிட்டுள்ளது. ரஷ்யா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற சாத்தியங்களுக்கு மத்தியில், அதன் தாக்குதலுக்கு எதிராக நாட்டை பாதுகாக்க, இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு கவசம் அமைப்பை வாங்க ஜேர்மனி பரிசீலித்து வருகிறது என்று அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் அயர்ன் டோம் போன்ற பாதுகாப்பு அமைப்பை ஜேர்மனி வாங்குமா என்று கேட்டபோது, ​​”இது நிச்சயமாக நாங்கள் விவாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும்” என்று அவர் … Read more

ஊடகங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உடனான நேர்காணலை ஒளிபரப்புவதையையோ வெளியிடுவதையோ தவிர்க்குமாறு ரஷ்யாவின் தகவல் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு ரஷ்ய ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உக்ரைன் தலைவரைப் பேட்டி கண்ட பத்திரிக்கைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. ரஷ்யாவின் தகவல் தொடர்பு கண்காணிப்பு குழு சமூக ஊடகங்களிலும், அதன் இணையதளத்திலும் இது குறித்து ஒரு சிறிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பல ரஷ்ய பத்திரிக்கைகள் Zelensky உடன் நேர்காணல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த நேர்காணலை … Read more

பந்து வீச்சில் கோட்டைவிட்ட ஆர்சிபி; தவான், ராஜபக்ச ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் 2022 தொடரின் மூன்றாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூ ப்ளஸிஸும், அனுஜ் ராவத்தும் களமிறங்கினர். ராவத் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் டூ ப்ளஸிஸ் அதிரடியாக ஆடினார். கோலியும் டூ ப்ளஸிஸும் … Read more