டுபிளஸிஸ் வெறியாட்டம்! பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு..

2022 ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 206 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி. பெங்களூரு அணிக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் டுபிளஸிஸ் மற்றும் பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக மாயங் அகர்வாலும் களமிறங்கினர். DY பாட்டில் மைதானத்தில் இதுவரை 17 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 10 போட்டியில் வென்றுள்ளது. அதன்படி, இந்த மைதானத்தில் இலக்குகளை துரத்துவது எளிதானது என்பதால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு … Read more

முதலமைச்சரை தாக்கிய இளைஞன்! வைரலாகும் வீடியோ

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை இளைஞர் ஒருவர் தாக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் பீகார் மாநில முதமைச்சர் நிதிஷ் குமார் தனது சொந்த ஊரான பக்தியார்பூர் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும்போது இந்த விபரீத சம்பவம் நடந்தது. முதல்வர் நிதிஷ் குமார் தனது மக்களவைத் தொகுதியான பார்ஹ் பகுதியில் அவ்வபோது பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தனது சொந்த ஊரான பக்தியார்பூர் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் ஷில்பத்ரா … Read more

மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் திரில் வெற்றி: அக்சர் படேல் அதிரடி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதி நிமிடத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டியின் 15வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கிய நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3:30 மணியளவில் எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யவே, பேட்டிங்கில் … Read more

தடைகளை நிக்க வேண்டுமென்றால்…இதை முதலில் செய்யுங்கள்! லிஸ் டிரஸ் அறிவிப்பு

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றால், உடனடியாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலை எதிர்த்து மேற்கு நாடுகள் 1,000க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் மீது தனிப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில், Sunday Telegraph செய்தி சேனலுக்கு பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் அளித்த பேட்டியில், ரஷ்யாவின் மீது விதிக்கப்ட்டுள்ள தடையை … Read more

ரஷ்யாவின் அந்த ஒற்றை எழுத்து: சூரிச் காப்பீட்டு நிறுவனம் முக்கிய முடிவு

ரஷ்யாவின் போர் ஆதரவு சின்னமான Z எழுத்தை குழப்பம் ஏற்படுத்தக் கூடும் என கூறி சூரிச் காப்பீடு நிறுவனம் நீக்கியுள்ளது. உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்த ரஷ்யா, தங்களது இராணுவ வாகனங்கள், டாங்கிகள் மற்றும் இராணுவ வீரர்கள் என அனைத்திலும் Z என்ற எழுத்தை சின்னமாக பொறித்திருந்தது. ஆனால், அந்த எழுத்து தற்போது பிரபல சூரிச் காப்பீடு நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தங்களது சின்னத்தில் குறித்த எழுத்தை பொறித்துள்ள சூரிச் காப்பீடு நிறுவனம், ரஷ்ய படையெடுப்பை தாங்கள் … Read more

கொரியா போன்ற நிலை… ரஷ்யாவின் கொடூர திட்டத்தை போட்டுடைத்த உக்ரைன்

தங்கள் ஆதாயத்திற்காக உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டாக துண்டாடும் வாய்ப்புகள் அதிகம் என உக்ரைன் இராணுவ புலனாய்வு தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 30 நாட்கள் கடந்தும் நீடித்து வருகிறது. 48 மணி நேரத்தில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவோம் என களமிறங்கிய ரஷ்ய துருப்புகள், உக்ரைன் நகரங்களில் கடும் சேதங்களை விளைவித்தாலும், இதுவரை அவர்களின் இலக்கை எட்டவில்லை என்றே தெரிய வந்துள்ளது. மேலும், மே 9ம் திகதிக்குள் போரை முடிவுக்கு கொண்டுவரும் திட்டமும் ரஷ்யாவிடம் … Read more

ரஷ்யாவுடன் உறவை கைவிட்டால்… பேச்சுவார்த்தையை யார் முன்னெடுப்பது? துருக்கி அதிரடி

ரஷ்யாவுடனான தொடர்பை உலக நாடுகள் முழுமையாக கைவிட முடியாது என துருக்கி ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் இப்ராஹிம் கலின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போரானது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ரஷ்யாவின் இத்தகைய ராணுவ முன்னெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். அந்தவகையில் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான துருக்கி, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுடனும் நல்ல நட்புறவை கொண்டுள்ளது, இருப்பினும் உக்ரைன் மீதான … Read more

சுக்கிரனால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா? இன்றைய ராசிப்பலன்

சுக்கிரன் மார்ச் 31ம் தேதி காலை 8.54 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார். ஏப்ரல் 27ம் தேதி வரை கும்ப ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த இடமாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு பணவரவு கொட்டப்போகுதாம். அந்தவகையில் இன்றைய நாள் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW                மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் … Read more

ரஷ்யாவுடன் இணைகிறதா உக்ரைனின் கிளர்ச்சியாளர்கள் பகுதி? விரைவில் வாக்கெடுப்பு!

ரஷ்யாவுடன் இணைவது தொடர்பான வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என கிழக்கு எல்லை பகுதி மற்றும் லுஹான்ஸ்க் பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்களை அந்த நாட்டு அரசாங்கம் ஒடுக்கி வருவதாகவும், மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவது ரஷ்யாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் செயல் எனவும் ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி 20 திகதி ரஷ்ய … Read more

உக்ரைன் மக்களை வரவேற்கும் அமெரிக்கா: ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!

ரஷ்ய போரினால் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறிய பொதுமக்கள் 1,00,000 பேரை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போரானது உலக அளவில் பல விதமான பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் அகதிகள் நெருக்கடியை அதிகரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட புள்ளிவிவர அடிப்படையில் இதுவரை உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 3.7 மில்லியன் … Read more