கனேடியர்களின் நம்பிக்கையை நிலைநாட்ட..ஜஸ்டின் ட்ரூடோவின் அறிவிப்பு

கனடாவின் சுதந்திர சிறப்பு அறிக்கையாளர் டேவிட் ஜான்ஸ்டன் கனேடியர்கள் நமது ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்பதை உறுதி செய்வார் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். டேவிட் ஜான்ஸ்டன் கனடாவின் தேர்தல் செயல்முறைகளில் சுதந்திரமான சிறப்பு அறிக்கையாளராக ஜான்ஸ்டன், வெளிநாட்டு தலையீட்டின் அளவு மற்றும் தாக்கத்தை மதிப்பிடும் பணியை மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கனடாவின் ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உதவும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2023 மார்ச் 15 அன்று, … Read more

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக எம்பாப்பே நியமனம்!

அடுத்த சர்வதேச போட்டிகளுக்கான பிரெஞ்சு தேசிய அணியின் புதிய கேப்டனாக கைலியன் எம்பாப்பே இருப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கோல் நாயகன் 24 வயதான கைலியன் எம்பாப்பே பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். கத்தார் நாட்டில் கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில், எம்பாப்பே 8 கோல்கள் அடித்து மிரட்டினார். @Soccrates Images/GettyImages அதனைத் தொடர்ந்து பிரான்சின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் உயர்ந்தார். கிளப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி பல சாதனைகளையும் … Read more

ஒருநாள் போட்டியை பார்க்க சலிப்பா இருக்கு.. – சச்சின் டெண்டுல்கர் கருத்து…!

ஒருநாள் போட்டியை பார்க்கவே ரொம்ப சலிப்பா இருக்கிறது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். Ind Vs Aus 3 ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. சலிப்பா இருக்கு … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோரிக்கைக்கு இந்தியா மறுப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப் போக்குவரத்து உரிமைக்கான கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமானப் போக்குவரத்து உரிமைகளை அதிகரிப்பதற்கு இந்தியா பார்க்கவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகபட்ச இருக்கைகளை வாரத்திற்கு 50,000-ஆக அதிகரிக்க ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது, ஆனால் சிந்தியா, “இந்த கட்டத்தில், நாங்கள் அதை அதிகரிக்கப் பார்க்கவில்லை” என்றார். travelobiz உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானச் … Read more

மாயமான கர்ப்பிணிப்பெண் எரிந்த நிலையில் மீட்பு! அம்பலமான அதிர்ச்சி உண்மை

இந்திய மாநிலம் கர்நாடகாவில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம் கர்ப்பிணி கர்நாடகாவின் கொப்பில் மாவட்டம் கப்பூருவைச் சேர்ந்தவர் நேத்ராவதி குதி(26). இரண்டு மாத கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் இரவு மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது நேத்ராவதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது வீட்டிற்கு அருகிலே இறந்த நிலையில் கிடந்தது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. பொலிஸார் விசாரணை அதனைத் தொடர்ந்து … Read more

61 பந்தில் 119 ஓட்டங்கள்! ஒருநாள் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய வீரர்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. கடைசி ஒருநாள் போட்டி சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 260 ஓட்டங்கள் எடுத்தது. பிரண்டன் கிங் 72 ஓட்டங்களும், பூரன் 39 ஓட்டங்களும் எடுத்தனர். ஜென்சென், போர்டுன் மற்றும் கோட்ஸி தலா இரண்டு விக்கெட்டுகளும், மார்க்ரம், … Read more

தண்ணீர் சேர்த்தால் போதும், பீர் ரெடி! ஜேர்மன் மதுபான ஆலையின் புது முயற்சி

உலகின் முதல் தூள் பீரை (powdered beer) ஜேர்மன் மதுபான ஆலை உருவாக்கியுள்ளது. இன்ஸ்டன்ட் காபி தூள் போல இன்ஸ்டன்ட் பீர் தூள் இருந்தால் எப்படி இருக்கும் எம நினைத்து பார்த்துள்ளீர்களா? இன்னும் சில காலத்தில் அப்படி ஒன்று பலரது வீட்டில் சாதாரணமாக இருக்கலாம். தண்ணீரை நொடிகளில் பீராக மாற்றலாம் நீங்கள் ஒரு பீர் விரும்பியாக இருந்தால், உங்களுக்கு இது மிகவும் பிடிக்கலாம். ஏனென்றால் ஒரு ஜேர்மன் மதுபான ஆலை, சாதாரண தண்ணீரை நொடிகளில் பீராக மாற்றுவதற்கான … Read more

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா?

எலுமிச்சை என்பதால் பெரும்பாலனோர் கருதுவது புளிப்பு தன்மையை. ஆனால் இதனால் பல வகையான நன்மை உண்டு. பல நோய்களை தீர்க்கும் சக்திக் கொண்டுள்ளது. அதே போல் தான் எலுமிச்சை தண்ணீரும். அதனை அருந்தினால் உடல் ரீதியாக பல மாற்றங்களை உணரலாம். அந்த மாற்றங்கள் என்னவென்று பார்ப்போம். எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எலுமிச்சையில் உடலில் இருக்கும் தீய கொமுப்புக்களை அழிக்கும் சக்தி உண்டு. எலுமிச்சை நீரை குடிப்பதால் உடல் … Read more

வரும் 26ம் தேதி விண்ணில் பாய உள்ள எல்.வி.எம்-3 ராக்கெட்.. – வெளியான முக்கிய தகவல்

வரும் 26ம் தேதி விண்ணில் எல்.வி.எம்-3 ராக்கெட் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இஸ்ரோ சமீபத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) CE-20 கிரையோஜெனிக் இன்ஜினின் விமான ஏற்பு வெப்ப சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதனையடுத்து இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவிவிட்டு வருகின்றது. எல்.வி.எம்-3 ராக்கெட் இந்நிலையில், … Read more

டெக்சாஸில் மீண்டும் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர் கைது

டெக்சாஸில் மீண்டும் பாடசாலை ஒன்றில் மாணவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலையில் துப்பாக்கிச்சூடு திங்கட்கிழமை காலை டல்லாஸ் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கிடையில், கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மற்றும் பள்ளி மாவட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகாலை 6:55 மணியளவில் ஆர்லிங்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது. … Read more