பிரபல WWE குத்துச்சண்டை வீரர் மாரடைப்பால் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்

முன்னாள் WWE வீரரான ஸ்காட் ஹால் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிறந்தவர்கள் வரை அவர்களது காலக்கட்டத்தில் ஒளிபரப்பான WWE எனப்படும் பொழுதுப்போக்கு குத்துச்சண்டை என்பது மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம்.  காலத்தின் தேவைக்கேற்ப அது தன்னை மாற்றிக் கொண்டாலும் தங்களுடைய சூப்பர்ஸ்டார்களை இன்றளவும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.  “Bad times don’t last, but bad guys do.” pic.twitter.com/Wvdh2wgCD2 … Read more

ஜோ பைடன் உட்பட பல அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு ரஷ்யா தடை!

மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல அதிகாரிகளுடன் சேர்த்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. இந்த நடவடிக்கைகள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருக்கும் பொருந்தும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் ஒரு தனி அறிக்கையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது பல அமைச்சர்கள் உட்பட 313 கனேடியர்கள் … Read more

“கேப்டன் மாதிரியா நீங்க இருக்கீங்க” – ஆஸ்திரேலிய கேப்டன் செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  கராச்சியில் நடந்து வரும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 148 ரன்களில் சுருண்டது.  Pat Cummins doing some repair works on the pitch. … Read more

35 அணு ஆயுத போர் விமானங்களை வாங்கும் ஜேர்மனி!

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அமெரிக்க தயாரிப்பான F-35 ரக விமானங்களை ஜேர்மனி வாங்க உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் தனது நாட்டின் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்கவுள்ளதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், ஜேர்மனி தனது பழைய டொர்னாடோ குண்டுவீச்சு விமானங்களுக்கு பதிலாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட 35 எண்ணிகையிலான F-35A லைட்னிங் II விமானங்களை வாங்கவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் … Read more

ரஷ்ய டாங்கிகளை சுக்குநூறாக வெடிக்கச்செய்யும் உக்ரைன் படை! வெளியான பரபரப்பு வீடியோ

உக்ரேனியப் படைகள் ரஷ்ய டாங்கி ஒன்றை வெடிக்கச்செய்யும் பயங்கரமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், ரஷ்யாவுக்கே அதிக அளவில் இராணுவ இழப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் பல வாகனங்கள், டாங்கிகளை அடித்து நொறுக்கியுள்ளது உக்ரைன். மேலும், ரஷ்ய வீரர்களில் குறைந்தது 12,000 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் அந்த வீடியோவில், வேகமாக முன்னேறி வந்துகொண்டிருந்த ரஷ்ய டாங்கி … Read more

பளபளக்கும் சருமத்திற்கு தயிர்! எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

பொதுவாக நாம் விரும்பி சாப்பிடும் தயிர் பலவிதமான சத்துக்களை கொண்டது. கால்சியம், புரோட்டீன், வைட்டமின் என பல்வேறு சத்துக்களைக் கொண்டது தயிர். பாலை விட தயிர் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்.  அதே அளவிற்கு முகத்தில் பூசிக்கொள்ளும் போதும் பல நன்மைகளை கொடுக்கிறது. தயிர் எப்போதுமே சரும பராமரிப்புக்கு சிறந்தது அந்தவகையில் தயிரை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.  ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் அதே அளவு தயிர் சேர்க்கவும்.இந்த கலவையுடன் … Read more

உக்ரைன் போரில் லண்டன் கமெராமேன் உட்பட 2 பத்திரிகையாளர்கள் மரணம்

உக்ரைனில் தலைநகர் கீவ் அருகே ரஷ்யா நடத்திய தாக்குதலில் லண்டனிச் சேர்ந்ந்த ஃபாக்ஸ் நியூஸ் ஒளிப்பதிவாளர் மற்றும் பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். தலைநகர் கீவ் அருகே Horenka-வில், உக்ரைனில் நடக்கும் போரைப் பற்றி செய்தி வெளியிடும் போது ரஷ்ய துருப்புக்கள் நடத்திய பீரங்கித் தாக்குதலால் அமெரிக்க செய்தி நிறுவனமான Fox News ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்டார். மேலும் நிருபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். உக்ரைனைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரும் செய்தி தயாரிப்பாளாருமான Oleksandra Kuvshinova-Sasha (24) மற்றும் ஒளிப்பதிவாளர் Pierre … Read more

தோனியின் ஓய்வு முடிவு எப்போது? பெரிய அப்டேட்டை கொடுத்த CSK அணி நிர்வாகம்

ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவது தொடர்பிலான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 15வது சீசனின் போட்டிகள் வரும் மார்ச் 26ம் திகதி முதல் தொடங்குகிறது. இதற்காக சிஎஸ்கே அணி தயாராகி வரும் இந்த சூழலில் தோனியின் ஃபேரவல் போட்டி குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 41 வயதை நெருங்கவிருக்கும் தோனி கடந்த சீசனிலேயே ஓய்வு பெறுவார் என்ற தகவல் வெளியானது. சென்னையில் கடைசி போட்டி ஆட ஆசை ஆனால் சென்னையில் தனது கடைசி போட்டியை விளையாட … Read more

உக்ரைன் பள்ளி மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா: 7 பேர் மரணம்

உக்ரைனில் பள்ளி கட்டிடம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தெற்கு உக்ரைனில் உள்ள மைகோலாயிவ் (Mykolayiv) பகுதியில் உள்ள பள்ளி கட்டிடத்தின் மீது ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. அந்த இடத்தில் மீட்பு மற்றும் மீட்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரேனிய அவசர சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பள்ளியின் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த நிலையில் 3 பேர் … Read more

உங்களுக் குகழுத்தை சுற்றி அதிக சதை இருக்கா ? எப்படி குறைக்கலாம்?

பொதுவாக நம்மில் சிலருக்கு கழுத்துப் பகுதியில் மட்டும் அதிக தசையுடன் காணப்படும். பிற பாகங்களை விட கழுத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு முக்கிய காரணம் ஒபீசிட்டி. இந்த பிரச்சனை இருப்பவர்களின் உடலும் சற்று குண்டாகவே இருக்கும். ஓவர் வெயிட் இருப்பவர்களுக்கு கழுத்துப் பகுதியிலும் கொழுப்பு சேரும். அதுமட்டுமின்றி தைராய்டு பிரச்சனை, மற்றும் சில ஹார்மோன் பிரச்சனை இருந்தாலும் கழுத்துப் பகுதியில் அதிக தசை ஏற்படும். இதனால் விரும்பிய ஆடைகளை அணியமுடியாமையில் ஆரம்பித்து ஏரளமான சங்கடங்களை சந்தித்திருப்பார்கள். எனவே … Read more