ஜேர்மன் மண்ணில் புடின் காலடி எடுத்து வைத்தால்.., நீதித்துறை அமைச்சர் எச்சரிக்கை!

ஜேர்மனியின் எல்லைக்குள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நுழைந்தால், அவர் கைது செய்யப்படுவார் என்று ஜேர்மன் நீதித்துறை அமைச்சர் மார்கோ புஷ்மேன் (Marco Buschmann) எச்சரித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் போர்க்குற்றம் புரிந்ததற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து ஜேர்மன் நீதி அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஜேர்மன் செய்தி நிறுவனமான Die Zeit-ன் படி, புடின் ஜேர்மன் மண்ணில் காலடி எடுத்து வைத்தால் … Read more

பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளை எச்சரிக்க, தொலைப்பேசிகளில் அவரச எச்சரிக்கை அமைப்பு!

 பிரித்தானியாவில் கடுமையான வானிலை நிகழ்வுகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இயற்கை சீற்றத்திலிருந்து காக்க எச்சரிக்கை கடுமையான வானிலை நிகழ்வுகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் குறித்து புதிய பொது எச்சரிக்கை அமைப்பை சோதிக்க, அடுத்த மாதம் இங்கிலாந்து முழுவதும் உள்ள மொபைல் போன் பயனர்களுக்கு, சைரன் போன்ற எச்சரிக்கை அனுப்பப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் … Read more

பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா ஏவியது! தென்கொரிய கூட்டுப்படை பரபரப்பு குற்றச்சாட்டு

வடகொரியா குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை தங்கள் ராணுவம் கண்டறிந்ததாக தென்கொரிய கூட்டுப்படைத் தலைவர் கூறியுள்ளார். கூட்டுப் பயிற்சி தென்கொரியாவும், அமெரிக்காவும் சுதந்திர கேடயம் என அழைக்கப்படும் 11 நாட்கள் கூட்டுப் பயிற்சியின் நடுவில் உள்ளன. வடகொரியாவின் இராணுவ மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இத்தகைய பயிற்சிகள் தங்கள் நாட்டிற்கு எதிரான படையெடுப்புக்கான ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே, பதிலுக்கு அதிகமான நடவடிக்கை … Read more

கல்வித் தகுதி தேவையில்லை… 90,000 பவுண்டுகள் வரை ஊதியம்: பிரித்தானியாவில் வேலை வாய்ப்புகள்

பிரித்தானியாவில் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லாத, ஆனால் அதிக ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்புகள் தொடர்பில் இணைய பக்கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 20 வேலை வாய்ப்புகள் பல்கலைக்கழக படிப்பு எதுவும் தேவையில்லாத, அதிக ஊதியம் வழங்கும் சுமார் 20 வேலை வாய்ப்புகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக 33,000 பவுண்டுகள் வரையில் ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்புகள் அவை எனவும் அந்த இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில வேலைக்கு ஆண்டுக்கு 90,000 பவுண்டுகள் வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது. … Read more

சட்டவிரோத குடியேற்ற மசோதாவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

பிரித்தானிய அரசின் புதிய குடியேற்ற மசோதாவுக்கு எதிராக லண்டன் மற்றும் சில இடங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் போராட்டம் பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டவிரோத குடியேற்ற மசோதாவிற்கு எதிராக சனிக்கிழமை பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன, இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். Stand Up To Racism மற்றும் Scottish Trades Union Congress ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டங்கள் லண்டன், கிளாஸ்கோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில் நடைபெற்றன. இதில் குறைந்தது 2000 பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

தொலைக்காட்சி நிகழ்ச்சி நேரலையின் போது திடீரென சரிந்து விழுந்த வானிலை ஆய்வாளர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் வானிலை ஆய்வாளர் தொலைக்காட்சி நேரலையின் போது திடீரென சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயங்கி விழுந்த பெண் அமெரிக்காவின் சிபிஎஸ்(CBS) என்ற செய்தி தொலைக்காட்சியில் லாஸ் ஏஞ்சல்ஸின் வானிலை ஆய்வாளர் அலிசா கார்ல்சன் ஸ்வார்ட்ஸ்(Alissa Carlson Schwartz) என்பவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பற்றி சிபிஎஸின் நிருபர் அறிமுகப்படுத்திவிட்டு நிகழ்ச்சியை துவங்க தயாரானார். @cbs அப்போது அவரது முகம் வெளுத்தது போல் மாற ஸ்வார்ட்ஸ் திடீரென  மேசைக்கு பின் சரிந்து விழுந்தார். … Read more

பக்கிங்ஹாம் அரண்மனையுடன் புதிய ஒப்பந்தம்: பெருந்தொகை ஆதாயம் பார்க்கும் ஹரி- மேகன் தம்பதி

பக்கிங்ஹாம் அரண்மனையுடன் மேற்கொண்ட புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹரி- மேகன் தம்பதி இனி வாடகை எதுவும் செலுத்தாமல் ஃபிராக்மோர் மாளிகையில் தங்க அனுமதிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. வாடகை செலுத்த தேவை இல்லை ஹரி- மேகன் தம்பதி குடியிருக்கும் வகையில் ஃபிராக்மோர் மாளிகையானது பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தில் புதுப்பிக்கப்பட்டது. சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்ட நிலையில், குறித்த தொகையை ஹரி- மேகன் தம்பதி திருப்பி செலுத்தியுள்ளனர். @jeremy இதனையடுத்து, இதுவரை ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகை வாடகையாக … Read more

கொடூர குற்றவாளி… 35 ஆண்டுகள் சிறை தண்டனை: ஆண்மை நீக்கம் செய்ய முடிவு

அமெரிக்காவில் சிறார் துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி, நீண்ட 35 ஆண்டுகள் சிறை தண்டை பெற்றுள்ள குற்றவாளிக்கு ஆண்மை நீக்க சிகிச்சை முன்னெடுக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 35 ஆண்டுகள் சிறை தண்டனை அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த ரியான் கிளார்க் என்பவரே, பல்வேறு சிறார் துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கியவர். 34 வயதான ரியான் கிளார்க் தற்போது 35 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார். (Image: Police dept மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட நபர்கள் எவருடனும் இனிமேல் கிளார்க் தொடர்பு … Read more

திடீரென மரியுபோலுக்கு பயணித்த புடின்!

ரஷ்ய ஜனாதிபதி புடின் கிரிமியா பயணத்திற்கு பின் திடீரென மரியுபோலுக்கு சென்றார். கைது பிடியாணை உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு புடின் தான் காரணம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பித்தது. ஆனால், நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் புடின் திடீரென மரியுபோல் நகருக்கு சென்றுள்ளார். @AP மரியுபோல் கடற்கரை ஆய்வு ஹெலிகொப்டர் மூலம் வந்தடைந்த புடின், ஒரு கலை பாடசாலை, குழந்தைகள் மையத்தை பார்வையிட்டவுடன், Nevsky microdistrictயில் வசிப்பவர்களை சந்தித்தார். மேலும் … Read more

”கனடாவில் நான் வாழ விரும்பினேன், ஆனால் என் பட்டப்படிப்பிற்கு இங்கு மதிப்பில்லை” இந்திய வம்சாவளி பெண்!

கனடா நாட்டில் வேலை செய்ய விரும்பிய இந்திய வம்சாவளி பெண் தன் பட்டப்படிப்பிற்கு கனடாவில் மதிப்பில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கனடாவில் வாழும் கனவு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த கோமல்தீப் என்ற இந்திய வம்சாவளி பெண் கனடாவில் தான் படித்த முதுகலை பட்டப்படிப்பிற்கு சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்த கோமல் தீப் தனது நாட்டில் கனடாவில் வேலை வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழலாம் எனவும் உறவினர்கள் கூறுவதைக் கேட்டு … Read more