அவுஸ்திரேலிய அணியை திணறடித்த இந்திய பந்துவீச்சாளர்கள்: 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. சொதப்பிய அவுஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தின் இன்று பிற்பகல் தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. Well Bowling guys #TeamIndia @BCCI … Read more

புடினுக்கு எதிரான கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றத்தின் ”வரலாற்று தீர்ப்பு” ஜெலென்ஸ்கி பாராட்டு!

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருப்பது ”வரலாற்று தீர்ப்பு” என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார். புடினுக்கு கைது வாரண்ட் உக்ரைன் போரில் ரஷ்யா வேண்டுமென்றே  கொலைகள், சித்திரவதைகள் மற்றும் குழந்தைகளை நாடு கடத்துதல் போன்ற போர் குற்றங்களை செய்து வருவதாக ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த அறிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் … Read more

ரஷ்ய ஜனாதிபதி புடினை கைது செய்ய பிடிவாரண்ட்! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி

உக்ரைனில் நடத்தப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போர் குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் நடவடிக்கையில் பல்வேறு போர் குற்றங்கள் நடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஐ.நா பரந்த அளவிலான விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையின் அடிப்படையில் ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில் போர் நடவடிக்கையின் போது வேண்டுமென்றே  கொலைகள், சித்திரவதைகள் மற்றும் குழந்தைகளை நாடு கடத்துதல் … Read more

மியான்மர் மடாலயத்தில் படுகொலை: 3 புத்த பிக்குகள் உட்பட 22 பேர் பலி

மியான்மர் மடாலயத்தில் நடந்த படுகொலையில் மூன்று புத்த பிக்குகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். மடாலயத்தில் படுகொலை கடந்த வாரம் மத்திய மியான்மரில் மூன்று புத்த துறவிகள் உட்பட குறைந்தது 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி குழுக்கள் மற்றும் ராணுவத்திற்கு இடையே நடைபெற்று வரும் இந்த சண்டையில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இது உலக நாடுகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி … Read more

மெக்சிகோவில் 8 பேரைக் கொன்ற 14 வயது சிறுவன் கைது

மெக்சிகோவில் 8 பேரைக் கொன்றதற்காக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். 14 வயது சிறுவன் கைது தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில், தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 8 பேரைக் கொன்றதற்காக “எல் சாபிடோ” என்ற புனைப்பெயர் கொண்ட 14 வயது சிறுவன் மெக்சிகோ காவல்துறையால் கைது செய்யப்பட்டான். மெக்சிகோவின் மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை வழங்கிய தகவலின்படி, சிறுவன் ஜனவரி 22 அன்று பைக்கை ஓட்டிச் சென்று மெக்சிகோ நகரத்தின் … Read more

கருங்கடலில் அமெரிக்க ட்ரோனை வீழ்த்திய 2 ரஷ்ய விமானிகளுக்கு விருது: ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம்

கருங்கடலில் அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்திய ராணுவ விமானிகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் விருது வழங்கி மரியாதை  செலுத்தியுள்ளார். வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் விமானம் செவ்வாய் கிழமை கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் சுகோய்-27 போர் விமானம் எரிபொருளை ஊற்றி, அதன் மீது தாக்குதல் நடத்தியதில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது. மேலும்  MQ-9 ரீப்பர் கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை ரஷ்யா தாக்கியதன் காரணமாகவே அமெரிக்க ராணுவம் அதை கருங்கடலில் … Read more

ஆன்லைனில் விற்கப்படும் சீன ட்ரோன்களை ஆயுதமாக்கும் ரஷ்யா.! சுட்டு வீழ்த்திய உக்ரைன்

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய ரஷ்ய ஆளில்லா விமானம் உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ரஷ்ய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் கிழக்கு உக்ரைனில் நவீனமயமாக்கப்பட்ட மற்றும் ஆயுதம் ஏந்திய சீனாவில் தயாரிக்கப்பட்ட Mugin-5 ஆளில்லா விமானத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் கூறியது. இந்த ஆளில்லா விமானம் சுமார் 20 கிலோ எடையுள்ள வெடிகுண்டை எடுத்துச் சென்றது, அதை உக்ரைன் வீரர்கள் சுட்டு வெடிக்கச் செய்தனர். CNN ஆன்லைனில் விற்கப்படும் ட்ரோன்கள் … Read more

விளாடிமிர் புடினை சந்திக்க திட்டமிட்டுள்ள சீன அதிபர்: ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி பேச்சுவார்த்தை

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் போர் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதிபர்கள் சந்திப்பு ரஷ்யாவின் நட்பு நாடான சீனா, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. மேற்கத்திய நாடுகள் இதற்கு மந்தமான வரவேற்பை அளித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. @telegraph ரஷ்யாவிற்கு உக்ரைனுடனான போரில் ஆயுதம் வழங்குவதாக மேற்கத்திய நாடுகள் சீனாவை ஏற்கனவே … Read more

காதல்தோல்வியை லாபமாக மாற்றிய வாலிபர்! காதலி ஏமாற்றியதால் கிடைத்த 'ஹார்ட்பிரேக் காப்பீட்டு தொகை'

காதலி ஏமாற்றிவிட்டதால் தனக்கு 25,000 ரூபாய் காப்பீட்டு தொகையாக கிடைத்ததாக இளைஞர் ஒருவர், தனது காதல் தோல்வியின் மூலம் லாபம் பார்த்த கதையை கூறி ஆச்சரியபடுத்தியுள்ளார். ஏமாற்றிய காதலி ட்விட்டரில், பிரதீக் ஆர்யன் (Prateek Aaryan) எனும் இளைஞன் தனது காதல் முறிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். காதலியை பிரிந்த பிறகு தனக்கு ரூ.25,000 கிடைத்ததாக கூறியுள்ளார். தனது காதலி முதலில் தன்னை ஏமாற்றியதாகவும், அதனால் தான் ‘காதல்முறிவு காப்பீட்டு நிதி’யின் கீழ் இந்தத் தொகையைப் பெற்றதாகவும் … Read more

48 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தையின் காணாமல் போன சடலத்தை போராடி மீட்ட தாய்!

பிரித்தானியாவில், தனது இறந்த குழந்தையின் உடலுக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிய கிட்டத்தட்ட 5 தசாப்தங்களாக போராடி வந்த ஒரு தாய்க்கு இப்போது நீதி கிடைத்துள்ளது. தாயின் 48 ஆண்டுகால போராட்டம் பிரித்தானியாவில், ஸ்காட்லாந்தின் எடின்பரோவைச் சேர்ந்த 74 வயதான லிடியா ரீட் (Lydia Reid), 48 ஆண்டுகால சட்டரீதியான போராட்டங்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து தனது குழந்தையின் சடலத்தையும், உடல் பாகங்களையும் போராடி பெற்றார். லிடியா ரீட், 1975-ல் தனது மகனின் மரணத்திற்குப் பிறகு அவரது சவப்பெட்டியில் மனித … Read more