ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தல் – அந்தோனி அல்பானீஸ் வெற்றி

சிட்னி: ஆஸ்திரேலிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்ற மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான லிபரல் கட்சி கூட்டணி 52 உறுப்பினர் இடங்களையும், அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான … Read more

ராஜீவ் நினைவு தினம்: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் கே.எஸ்.அழகிரி, விஜய் வசந்த்-தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கேரள மாநில முன்னாள் எதிர்கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ரமேஷ் சென்னிதலா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், செல்லகுமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் … Read more

திருப்பதியில் இன்று 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்த 15 லட்சம் தரிசன டிக்கெட்டுகள்

திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களுக்கு திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரிடையாக வழங்கப்பட்டு வந்தது. பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் நேரடி இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டது. தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் பக்தர்கள் … Read more

லைவ் அப்டேட்ஸ்: ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்களுக்கு பயண தடை விதித்தது ரஷியா

22.5.2022 00.40: போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்த விவகாரத்தில் அமெரிக்கா உடன் மோதல் போக்கை ரஷியா கையாண்டு வருகிறது.  இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியுறவுத் துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் உள்பட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக பயண தடை விதித்து ரஷியா உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் 2022 – 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மும்பை: 15-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே நகரில் நடைபெற்றது. மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் போட்டியின் லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிகின்றன. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. எனவே, பிளே ஆப் சுற்றில் நுழையும் 4-வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மட்டுமே இருந்தன. … Read more

ஞானவாபி மசூதி குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட டெல்லி பேராசிரியர் கைது

புதுடெல்லி: டெல்லி, வாரணாசி ஞானவாபி மசூதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற வீடியோ ஆய்வில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து  டெல்லி இந்து கல்லூரி துணைநிலை பேராசிரியர் ரத்தன் லால் பதிவு ஒன்றை சமூக  வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இரண்டு மதங்களுக்கு இடையே பிரச்சனையை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி, நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.  இது குறித்து போலீசார் கூறுகையில், “ ஞானவாபி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தருணத்தில் ரத்தன் லாலின்  … Read more

5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி – பிளே ஆப் வாய்ப்பை இழந்தது டெல்லி

மும்பை: மும்பையில் இன்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. ராவன் பவல் 43 ரன், கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன், பிருத்வி ஷா 24 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி சார்பில் பும்ரா 3 விக்கெட், … Read more

ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து கருத்து: டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது- காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான இந்து கல்லூரியின் வரலாறு பேராசிரியராக இருப்பவர் ரத்தன்லால். இவர் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார். வாரணாசியில் உள்ள சியான்வாபி மசூதி விவகாரம் தொடர்பாக பேராசிரியர் ரத்தன்லால் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்தார். சிவலிங்கம் குறித்து கேள்வி எழுப்பி அவர் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டார். டெல்லியை சேர்ந்த வக்கீல் வினித்ஜினடால் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் ரத்தன்லால் சிவலிங்கம் குறித்து டுவிட்டரில் அவதூறாக சித்தரித்து உள்ளார் என்று … Read more

சித்தர்களோடு தொடர்புடைய திருக்கோயில்களில் ஆண்டுதோறும் விழா நடைபெறும்- அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று,  சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இதுவரையில் கோயில் திருப்பணிகள்  மற்றும் இதர பணிகளுக்காக ரூபாய் 666 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த ஆண்டு சுமார் 2417 திருக்கோயில்களில் சுமார் 1301.29 கோடி செலவில் … Read more

கர்நாடகாவில் அரசு துறை அவுட்சோர்சிங் பணிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு அதன் அனைத்து துறைகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள், நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அவுட்சோர்சிங் ஊழியர்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் பி ரவிக்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், ஹவுஸ் கீப்பிங், டிரைவர்கள் மற்றும் குரூப் டி பணியாளர்களுக்கு அவுட்சோர்சிங் மூலம் ஆட்சேர்ப்பு செய்வது மாநில அரசின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் … Read more