ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி

மும்பை: மும்பையில் இன்று நடைபெறும் 69 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, டெல்லி அணி பேட்டிங் செய்தது.  முதலில் களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்ன்ர் 5 ரன்னுக்கும், பிருத்வி ஷா 24 ரன்களும், ஆட்டமிழந்தனர்.  மிக்சேல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காத நிலையில், விக்கெட்டை இழந்தார்.  கேப்டன் … Read more

மத்திய அரசு கலால் வரி குறைப்பு எதிரொலி- வாட் வரியை குறைத்தது கேரளா

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரான் அறிவித்தார். இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், பெட்ரோல் மீதான வாட் வரியில் ரூ.2.41ம், டீசல் மீது ரூ.1.36ம் குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்கள்.. பெட்ரோல், டீசல் … Read more

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பொதுமக்களின் சுமையை குறைக்கும்- பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி முறையே லிட்டருக்கு ரூ.8 மற்றும் ரூ. 6 -குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5-ம், டீசல் ரூ. 7-குறையும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எப்போதும் … Read more

ஜம்மு காஷ்மீர் சுரங்கப்பாதை நிலச்சரிவில் சிக்கிய 10 தொழிலாளர்களும் பலி

ஜம்மு – காஷ்மீர்  மாநிலம் ரம்பன் மாவட்டம், கூனி நல்லா பகுதி அருகே சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது.  கடந்த வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் மீட்பு பணியை தொடங்கினர். மீட்பு பணியின்போது முதலில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், இறந்தோர் எண்ணிக்கை 9 … Read more

பெட்ரோல் விலையை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி- பாஜக தலைவர் அண்ணாமலை

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரான் அறிவித்தார். இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை  குறைத்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி. கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் … Read more

உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டருக்கு தலா ரூ.200 மானியம்

உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், சிமெண்ட் விலையை குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும் என்றும் சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்றும் சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். … Read more

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- பெட்ரோல் மீதான மத்தியகலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. இதன் எதிரொலியால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்.. முன்னாள் பிரதமர் … Read more

பாதுகாப்புத்துறை மந்திரி வந்த விமானம், ஆக்ராவிற்கு திருப்பி விடப்பட்டது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு வந்த 11 விமானங்கள் அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் ஆக்ராவுக்கு திரும்பி விடப்பட்டன.  இதில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பயணம் செய்த விமானமும் அடங்கும் என்று டெல்லி விமான போக்குவரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  குஜராத்தின் வதோதராவில் உள்ள ஸ்ரீ ஸ்வாமி நாராயண் கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார்,  மோசமான வானிலை … Read more

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து- கொட்டிய சமையல் எண்ணெயை சேகரிக்க குவிந்த கிராம மக்கள்

மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் சமையல் எண்ணெய்  டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியில் இருந்த 12 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் சாலையில் கசிந்தது. டேங்கர் லாரி சாலையின் ஓரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பில்லை. என்றாலும், சாமையல் எண்ணெய் கசிவதை கண்ட அக்கிராம மக்கள் எண்ணெய் கேன்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாலையில் மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கசிந்துக் கொண்டிருந்த எண்ணெயைச் சேமித்து சமையலுக்கு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இதேபோல், கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிராவின் … Read more

அசாம் வெள்ள பாதிப்பு: கவுகாத்தி-சில்சார் இடையே அவசர விமான சேவை தொடக்கம்

கவுகாத்தி: அசாம் கனமழை வெள்ளப் பெருக்கால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகோன், ஹோஜாய், கச்சார் மற்றும் தர்ராங் மாவட்டங்களில்  நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.  மாநிலத்தின் 29 மாவட்டங்களில் 7.12 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாகோன் மாவட்டத்தில் மட்டும் 3.36 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். கச்சார், லக்கிம்பூர் மற்றும் நாகோன் மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் அந்த  … Read more