சீன ஆக்ரமிப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை- காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா இரண்டாவது பாலத்தை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின.   இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மௌனம் காப்பது ஏன் என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.  சீன ஆக்ரமிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி வெளிப்படையாக பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.  சீனாவால் கட்டப்பட்ட இரண்டு பாலங்களும் 1960 ஆண்டு சட்ட விரோதமாக … Read more

ஜம்மு காஷ்மீர் சுரங்க விபத்து- இதுவரை 4 பேர் உடல்கள் மீட்பு

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர்  மாநிலம் ரம்பன் மாவட்டம், கூனி நல்லா பகுதி அருகே சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது.  கடந்த வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதியானது திடீரென இடிந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் மீட்பு பணியை தொடங்கினர். மீட்பு பணியின்போது 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், இன்று மீண்டும் மீட்புப்பணிகள் … Read more

டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

புதுடெல்லி: பிரேசில் நாட்டின் காக்சியாஸ் டோ சுல் நகரில் மே 1ஆம் தேதி தொடங்கிய, காது கேளாதோர் டெப்லிம்க்ஸ் போட்டிகள் நடைபெற்றன.  மே 15ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டிகளில்  72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,100 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  இந்தியா சார்பில் 65 தடகள வீரர்களைக் கொண்ட  அணி இந்த போட்டிகள் பங்கேற்றது. மொத்தம் 11 போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி 8 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 7 … Read more

சத்தீஸ்கரில் மினி சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து- 4 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் தகாத்பூர் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பிலாஸ்பூர்- முங்கேலி சாலையில் தகாத்பூரிலிருந்து ஜர்ஹகான் கிராமத்திற்குச் லாரி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதரே வந்த சரக்கு வாகனம் மீது லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வானத்தில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொருவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர்கள்,  புனேஷ்வர் சாஹூ (36), ஓம்பிரகாஷ் வர்மா (22), ரகுவீர் சாஹூ (24) … Read more

உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டோம்- ரஷியா தகவல்

லண்டன்: உக்ரைனின் ஜிடோமிர் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷிய ராணுவம் கூறி உள்ளது. கப்பலில் இருந்து  ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் … Read more

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து

புதுடெல்லி:  டெல்லியில் பல இடங்களில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மதியம் கட்டுமான பணி நடைபெறும் புதிய பாராளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தில் தீப்பிடித்ததை அறிந்ததும் அங்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.  ஆனால் சிறிய அளவிலான விபத்து என்பதால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே பாராளுமன்றத்தில் உள்ள தீயணைப்பு ஊழியர்கள் தீயை அணைத்துள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

சட்டவிரோதமாக மகளுக்கு அரசு வேலை: வங்காள அமைச்சரிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை

மேற்குவங்க மாநில கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் அதிகாரியின் மகள் அங்கிதாவிற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்ப ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கிதாவை அரசு உதவி பெறும் பள்ளியில் பணியிலிருந்து நீக்கியதுடன், ஆசிரியராகப் பணியாற்றி 41 மாத காலத்தில் வாங்கிய சம்பளத்தைத் திருப்பித் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக விசாரணை … Read more

இரண்டு வாரங்களுக்கு பிறகு அவசர நிலை பிரகடனத்தை திரும்பப் பெற்றது இலங்கை

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்.பிக்களின் வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன.  இந்த போராட்டத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர்.  இதற்கிடையில் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றார்.  … Read more

தமிழகத்தில் ஒமைக்ரான் பிஏ-4 புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நேரத்தில் 1000 காலி பணியிடங்களுக்கு கலந்தாய்வு வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. மருத்துவ கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடங்களுக்கு முடிந்த பிறகு பொது சுகாதாரத்துறை, மாநில மருத்துவ பணிகள் இயக்கத்துக்குட்பட்ட காலி இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். கிராம செவிலியர், பகுதிசெவிலியர், சமுதாய … Read more

‘நீ முஸ்லிமா?’ என கேட்டு முதியவர் மீது சரமாரி தாக்குதல் – பரபரப்பு வீடியோ

போபால்: மத்திய பிரதேசம் நீமச் மாவட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவரை, இளைஞர் ஒருவர் ‘உன் பெயர் முகமது தானே?’ என கேட்டு அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தாக்கப்படும் அந்த முதியவர் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்தவர் பெயர் பன்வார்லால் ஜெயின்.  ரத்லம் மாவட்டத்தை சேர்ந்த அவர் கடந்த மே 15-ஆம் தேதி ஒரு மத நிகழ்ச்சிக்காக ராஜஸ்தான் சென்றபோது தொலைந்துவிட்டதாக புகார் வந்தது. இதையடுத்து அவர் புகைப்படத்தை வெளியிட்டு … Read more