பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் புதிய தலைவர் ஆகிறார்

சென்னை: டாக்டர் ராமதாஸ் 1989-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. 1991-ம் ஆண்டு முதன் முதலாக பாட்டாளி மக்கள் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. 194 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சிக்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 982 வாக்குகளுடன் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது. முதலில் யானை சின்னத்தில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு … Read more

லால் மஹாலில் வீடியோ எடுத்த நடிகை மீது வழக்கு

புனே: லால் மஹால் என்பது புனேவில் மிகவும் பிரபலமான நினைவு சின்னம் ஆகும். சத்ரபதி சிவாஜி அவரது குழந்தை பருவத்தின் பல ஆண்டுகளை லால் மஹாலில் கழித்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, மராத்தி நடிகையான வைஷ்ணவி பாட்டில், பணியில் இருந்த பாதுகாவலர் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் லால் மஹால் நினைவுச் சின்னத்தின் வளாகத்தில் நடனம் ஆடியுள்ளார். அதனை, அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.  அதன்பின்னர், வைஷ்ணவி பாட்டில் அந்த வீடியோவை சமூல வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, நேற்று வைஷ்ணவி … Read more

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- மேட்டூர் அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12 ஆம் நாளன்று குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும் … Read more

பங்குச்சந்தை முறைகேடு- டெல்லி, மும்பை உள்பட 10 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

புதுடெல்லி: தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், பங்கு சந்தை விவரங்களை முகம் தெரியாத சாமியாரிடம் கூறியதாகவும் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை ஆலோசகராக நியமித்து சலுகைகள் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது. தேசிய பங்கு சந்தை விவரங்களை கசிய … Read more

முன்னாள் உலக செஸ் சாம்பியனுக்கு உளவாளி பட்டம் குத்திய ரஷியா

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ரஷியாவிற்கு உலக நாடுகல் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இதற்கிடையே ரஷியாவின் செயல்பாடுகளை அந்நாட்டை சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி கேஸ்பரோவ், முன்னாள் எண்ணெய் அதிபர் மிகெயில் கோதோர்வ்ஸ்கி ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.  இதையடுத்து ரஷிய நீதித்துறை அமைச்சகம், அவர்களை, ‘வெளிநாட்டு உளவாளிகள்’ என்ற … Read more

தன் மனைவி என்று நினைத்து அடுத்தவர் மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளி

ஆம்பூர்: திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலை கல்லூரி அருகே உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். (வயது 55). மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி ரேணுகாம்பாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இறந்துவிட்டதால் அவரது மனைவி தனலட்சுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் தனலட்சுமி கணவரிடம் கோபித்துக்கொண்டு அடிக்கடி … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்வு- 15 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,259 ஆக இருந்தது. இன்று (சனிக்கிழமை) 2,323 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஓரிரு நகரங்களில் மட்டுமே வைரஸ் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 25 பேர் பலியாகி … Read more

குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படும்- டி.ஜி.பி.சைலேந்திர பாபு எச்சரிக்கை

திருச்சி: காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம் தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெற்றது. முகாமிற்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் 10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் நடைபெற்று உள்ளது. அதில் தமிழ்நாட்டில் 84 மரணங்கள் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களால், தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி ஒருவர்கூட காவல் துறை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் … Read more

ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் இழந்த என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

திருப்பதி: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம், சின்ன மாஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் திலீப் ரெட்டி. (வயது 20). இவர் பலமனேரில் அறை எடுத்து தங்கி அங்குள்ள உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். திலீப் ரெட்டி தனது செல்போனில் ஆன்லைனில் பணம் வைத்து விளையாடி வந்தார். இந்த விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுக்காக உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் பணம் வாங்கியுள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த செயின் மோதிரம் … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீர் – நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரை

பியோங்கியான்: வடகொரியாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 2.19 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  போதிய கொரோனா பரிசோதனை வசதிகள் இல்லாததால், அந்த நோயைப் போன்ற ‘காய்ச்சலால்’ பாதிக்கப்பட்டவா்கள் என்று மட்டுமே  அதிகாரிகள் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றனா். மேலும் போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாமை, மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திணறி வருகிறது.  இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள இஞ்சி, மூலிகை தேநீா் போன்ற பாரம்பரிய மருந்துகளை மக்கள் பருக … Read more