சிலிண்டர் விலை உயர்வுக்கு மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும்- ஜோதிமணி எம்.பி. பேட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பல்வேறு திட்ட பணிகளை தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தொடங்கி வைத்த ஜோதிமணி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலகியபோது சிலிண்டர் விலை ரூ.450 ஆக இருந்தது. அப்போது கச்சா எண்ணை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்திருந்தது. அப்போதும் கூட மக்களின் நலன் கருதி சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் பா.ஜ.க. பதவி ஏற்று கடந்த … Read more

குரங்கம்மை பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு- மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சுவீடன் மற்றும் அமெரிக்கா, கனடா நாடுகளில் ‘மங்கிபாஸ்’ என்று அழைக்கப்படும் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களை குரங்கம்மை வைரஸ் பாதித்துள்ளது. இங்கிலாந்தில் குரங்கம்மை பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு சின்னம்மை, பெரியம்மையை விட அளவில் பெரிய கொப்பளங்கள் … Read more

இலங்கை வன்முறை: போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க தயார்- முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தகவல்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ராஜ பக்சேவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு கலவரம் முண்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வாகனங்கள் மற்றும் மகிந்த ராஜபக்சே, முன்னாள் மத்திரிகளின் வீடுகளுக்கு … Read more

ஊட்டி முதல் கலெக்டர் ஜான் சல்லிவன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் மற்றும் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு நீலகிரியை கண்டறிந்தார். கன்னேரிமுக்கு கிராம பகுதியில் உள்ளூர் மக்கள் உதவியுடன் கற்களால் ஆன வீடு ஒன்றை கட்டினார். அந்த வீட்டை தனது அதிகாரபூர்வ பங்களாவாகவும், அலுவலகமாகவும் பயன்படுத்தினார். அங்கிருந்தவாறு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் செய்து வந்தார். நீலகிரி … Read more

பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்- வைரலாகும் புகைப்படம்

புது டெல்லி: கடந்த மே 18-ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி  நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில் பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கிய நீதிபதியான எல். நாகேஸ்வர ராவ் வரும்  ஜூன் 7-ஆம் தேதியுடன் ஓய்வு பெற  இருக்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.  இதில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு துணை தலைவர் பிரதீப் ராய் என்பவரும் கலந்து கொண்டார். மூத்த  … Read more

என் தந்தை மன்னிக்க கற்றுத்தந்தவர்- ராகுல் காந்தி டுவீட்

புது டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனக்கும், பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்ததாக அவரது மகனும், காங்கிரஸ்  தலைவருமான ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியில் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராஜீவ் காந்தி குறித்த  வீடியோ ஒன்றை பதிவிட்ட ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- எனது தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது கொள்கைகள் நவீன இந்தியா வடிவமைத்தன. அவர் கருணை மிக்க  மனிதர். எனக்கும், … Read more

உ.பி.யில் விபத்து- திருமண கோஷ்டியினர் 6 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் லட்சுமண்பூரில் இருந்து பலராம் பூருக்கு கார் சென்று கொண்டிருந்தது. இதில் திருமண கோஷ்டியினர் பயணம் செய்தனர். பலராம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது இதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த கணவன்-மனைவி உள்பட 4 பேர் பலியானார்கள். ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியில் 2 பேர் இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து … Read more

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்- சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வீர் பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

ராஜ் தாக்கரேயின் அயோத்தி பயணம் திடீர் ரத்து

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து சிவசேனா ஆட்சி நடத்தி வரும் நிலையில், சிவசேனாவிடம் இருந்து இந்துக்களின் வாக்குகளை தட்டிப்பறிக்கும் முனைப்பில் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வருகிற 5-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தார். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே அயோத்தி செல்ல உள்ளதாக அறிவித்த நிலையில், இவரின் அறிவிப்பு அவருக்கு … Read more

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை : தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கும், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணிக்கும், சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், ஆவடி-சென்டிரல் இடையே காலை 4.25 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. * திருப்பதி-சென்டிரல் (வண்டி எண்:16054) … Read more