பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுடெல்லி : லடாக்கின் பங்கோங்கில் இந்திய எல்லைக்கு அருகே சீனா 2-வது பாலம் கட்டுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பான செயற்கைகோள் படங்களும் வெளியாகின. இதைத்தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘பங்கோங்கில் சீனா முதல் பாலம் கட்டியபோது, நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என இந்திய அரசு கூறியது. தற்போது 2-வது பாலம் … Read more